Connect with us

விளையாட்டு

சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்! -சதிஷ் குமார்

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna.

Published

on

Photo: Shutterstock

1989’ல் இருந்து சுமார் 2013 வரை தனெக்கென முத்திரைப் பதித்து எதிர் அணிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். “பேரைக் கேட்ட சும்மா அதிருதுல” என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த படத்தில் வரும் வசனத்தைப் போல, இவர் பேரைக்கேட்டால் அஞ்சாத பந்து வீச்சாளர்கள் உலக கிரிக்கட் வரலாற்றில் இருக்கவே முடியாது. பல சாதனைகளுக்கு சொந்தக்காரர், கிரிக்கெட் வீரர்களுக்கு இவர் ரோல் மாடல், களத்தில் இறங்கினால் ஒன்னு மேன் ஷோ(ஆர்மி). இன்னும் சொல்லவேண்டும் என்றால் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் மாபெரும் சாகப்தம். அட யாருய்யா? இந்த சச்சின் ? என்று இன்றைய 2கே கிட்ஸ் கேட்பதைப் போல் 90களில் நானும் கேட்டதை இங்கு நினைவூட்டுகிறேன்.

ஆர்வத்தை தூண்டிய சச்சின்

எங்கு பார்த்தாலும் இவரைப் பற்றியே பேச்சு என்னுடைய சிறு வயதில் எனக்கு கிரிக்கெட் பார்ப்பதில் பெரிய ஆர்வம் கிடையாது, கிரிக்கெட் விளையாட மட்டுமே பிடிக்கும். நண்பர்களுடன் விளையாடும் பொழுது, முதல் நாள் நடந்த மேட்ச் பற்றியும் அதில் சச்சின் ஆடிய விதத்தை பற்றியும் பல நேரம் பேசி விளையாட்டு நேரத்தை வீணடித்து என்னையும் கடுப்பேற்றி விடுவார்கள்(விளையாடாமல் சச்சினைப் பற்றி பேசி ). பல முறை சச்சின் சீக்கிரம் அவுட் ஆகி வெளியேற வேண்டும் என கடவுளிடம் வேண்டியதும் உண்டு, காரணம் என் சகோதரர் உடன் விளையாடும் பொழுது டிவியில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டின் இடையே ஓடி சென்று பார்த்து விட்டு வருவார், பல முறை சச்சின் விளையாடும் பொழுது பலரைப் போன்று அவரும் கிரிக்கெட் விளையாடுவதை விரும்பமாட்டார்.

இந்தியா விளையாடும் கிரிக்கெட் மேட்ச் என்றால் வீட்டில் எனக்கு டிவி பார்க்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். காரணம் வீட்டில் இருக்கும் அப்பா, சித்தப்பா, அண்ணன் என மெஜாரிட்டி கூட்டம் கிரிக்கெட் விரும்பிகள் என்பதால். 90களில் அறியதாக ஒளிபரப்பப்படும் டாப் 10 பாடல், திரைப்பட விமர்சனம், நாடகம் என எதையும் பார்க்கவிடாமல் செய்து விடும் இந்த கிரிக்கெட். சச்சின் சீக்கிரமாக வெளியேறினால் (அவுட் ஆனால்) எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் (டிவி பார்க்க). அந்த நேரத்துக்காக பல நாள் காத்துக்கிடந்துளேன். ஒரு கட்டத்தில் என்ன தான் (சச்சின்) அப்படி விளையாடுகிறார் என பார்க்கவேண்டும் என்று எண்ணம் என்னுள் வந்தது அன்று இந்தியாவிற்கு எதிராக விளையாடியது உலக சாம்பியன் அணிகளின் ஒன்றான வெஸ்ட்இண்டீஸ். சச்சின் அன்று அடித்தது 60 ரன்கள் தான் ஆனால் அவர் ஆடிய (ஸ்டைல்) விதத்தைப் பார்க்கும் பொழுது கிரிக்கெட்டை இவ்வுளவு அழகாக விளையாட முடியுமா? என்ற எண்ணம் என்னுள் வந்து சென்றது. இவர் பெரிய ஆட்டக்காரன் தான்யா என்ற வசனம் எனக்குள் அன்றே தோன்றியது. கிரிக்கெட்டின் தீவிர ரசிகனாக நான் மாற சச்சினின் ஆட்டம் மிக முக்கியமானதாக அமைந்தது.

சச்சினுடன் ஆடிய ஜாம்பவான்கள் :

அன்று முதல் இன்று வரை இவரின் தீவிர ரசிகனாகவே இருக்கின்றேன். இவர் ஆடிய காலகட்டத்தில் சச்சின் அவுட் என்றல் டிவியை ஆப் செய்துவிட்டு சென்ற பல பேரை (எங்கள் வீடு உற்பட) நான் பார்த்துள்ளேன். சச்சின் ஆடினால் தான் இந்தியா வெற்றிப் பெற முடியும் என்ற காலம் அது. இன்றைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இவரின் ஆட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அப்படி தெரிந்திருந்தால் இவரை இணைத்து வேறு ஒரு கிரிக்கெட் வீரர் உடன் ஒப்பிட தயங்குவார்கள்.காரணம் அன்று இவருக்கு எதிர் அணியில் பந்து வீசிய மெக்ராத், டேவிட் பூன், பிரெட் லீ, ஷனே வார்னே, வால்ஷ், அம்ப்ரோஸ், ரோஸ், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், ஷாகிளைன் முஸ்தாக், அஃகுப் ஜாவேத், சோயிப் அக்தர், ஆலன் டொனால்ட், போலாக், ஆலன் கோவ்ச், முரளிதரன் என பட்டியல் நீளும். மேலே குறிப்பிட்டுள்ள வீரர்கள், பந்து வீச்சில் மாயாஜாலம் காட்டிய மிகப்பெரிய ஜாம்பவான்கள் .

சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்பட வசனத்தை இந்தத் தருணத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன் அதாவது ” பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்ல சச்சின்! இவர் அடிச்ச பத்து பேரும் மிகப்பெரிய டான் தான்! ஆம் முன்பு குறிப்பிட்ட வீரர்கள் மிகப் பெரிய ஜாம்பவான்கள் பல சாதனைகளைப் படைத்தவர்கள். உலக கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை தங்களது பந்துவீச்சின் மூலம் திணறடித்தவர்கள். இவர்களின் பந்து வீச்சை சமாளிப்பதே பெரும் பெரும் போராட்டமாக இருந்த காலம் அது. இது மட்டும் இன்றி இன்று இருக்கும் விதிமுறைகள் (எளிய முறைகள்) அன்று இல்லை, ஒரு அணி 270 ரன்கள் மேல் அடித்தலே அது சிறந்த ஸ்கோர் ஆக இருந்தது. அதிலும் பலமுறை சச்சினுக்கு தவறுதலாக அவுட் கொடுக்கப்பட்டுள்ளது, அன்று டிஆர்எஸ் விதிமுறைகள் இருந்திருந்தால் இன்னும் பல சதங்களை (சாதனைகளை) தனது கணக்கில் எழுதியிருப்பார் சச்சின்! .

பேட்டால் பதில் தந்த சச்சின்!

என்னைப் போல சிறந்தபந்து வீச்சாளர்கள் எவரும் இல்லை என காலரை உயர்த்திய பல வீரர்களுக்கு தனது பேட்டிங் மூலம் பதில் தந்தவர் சச்சின். ஒருமுறை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 1998ல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டனர். இந்தியாவில் கால் வைத்த முதல் வேலையாக சச்சின் டெண்டுல்கரை சீண்ட ஆரம்பித்தார்கள் ஆஸ்திரேலியா அணி வீரர்கள், அதாவது இவரை(சச்சின் ) எளிதில் அவுட் ஆக்க வழிமுறைகள் இருப்பதாகவும், கண்டிப்பாக விரைவில் அவரின் விக்கட்டைக் கைப்பற்றி வெற்றி பெறுவோம் எனவும் பேட்டியளித்தனர். பலர் வீரர்கள் இவரை சீண்டினாலும் தனது அமைதியாலும், தனது புயல்வேக ஆட்டத்தினாலும் பதில் தந்து அவர்களை வாய் அடைக்க வைத்தவர் சச்சின். இதில் ஷனே வார்னே மட்டும் விதி விலக்க என்ன? முதல் டெஸ்ட் போட்டியில் வார்னே வீசிய இரண்டாவது பந்தில் பௌண்டரி அடித்த சச்சின், அடுத்த பந்தில் அவுட்டாகி வெளியேறியது இவர்கள் கூறியதை உறுதிப் படுத்தும் விதமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் சச்சின் விளையாட வரும் பொழுது அனைவருக்கும் இருந்த ஒரு கேள்வி எப்படி வார்னே சூழலை எதிர்கொள்ளப் போகிறார்?. என்பதுதான்! அன்று தனது பேட்டிங்கின் மூலம் அனைவருக்கும் பதில் தந்ததை பலர் மறந்திருக்கலாம், ஆனால் ஷனே வார்னே மறந்திருக்க வாய்ப்பே இல்லை.

இதே போல ஜிம்பாபே அணியுடன் நடந்த ஒருநாள் போட்டியில், ஜிம்பாபே அணியின் மிக வேகப்பந்து வீச்சாளரான (148கிமி வேகம்) ஹென்றி ஒலாங்கோ சச்சினின் விக்கட்டை கைப்பற்றி ஆரவாரம் செய்து சில சைகைகள் காட்டி இருப்பார். அதற்கு எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல், இரண்டு நாட்கள் கழித்து ஜிம்பாபே எதிராக நடந்த இறுதிப் போட்டியில் அவரின்(ஹென்றி ஒலாங்கோ) பந்து வீச்சை நாலா புறமும் விளாசி ஒரே ஓவரில் 3 சிக்சர் அடித்து அதிரடி சதம் கண்டு இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று, தான் கிரிக்கெட்டின் பிதாமகன்! என நிரூபித்து இருப்பார் சச்சின். அதன் பின்னர் ஹென்றி ஒலாங்கோ பெரிய பௌளராக கோலோச்ச முடியவில்லை என்பதே வருத்தமான செய்தி.

இதுபோல சுவாரசியமான காட்சிகள் பல நடந்துள்ளது அனைத்தையும் விவரிக்க இந்தக் கட்டுரை போதுமானது அல்ல. இருந்தாலும் இறுதியாக ஒரு சச்சினின் ரசிகனாக என்றும் பெருமை கொள்ளும் தருணமாக மனதில் இருப்பதில் இதுவும் ஒன்று “அதாவது ஆஸ்திரேலியா அணியின் சூழல் பந்து வீச்சாளரான பிராட் ஷாஜி இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் சச்சினனை கிளீன் போல்டு செய்து அவுட் ஆக்கினார், போட்டி முடிந்த பின்னர் சச்சினிடம் தான் வீசிய பந்தினை எடுத்து சென்று ஆட்டோகிராப் வாங்கியுள்ளார், பிராட் ஷாஜி. அதில் சச்சின் எழுதிய வார்த்தைகள் அந்த பந்தில் இன்றும் அழிக்க முடியாத வார்த்தையாக மின்னுகிறது. அதில் அவர் எழுதியது    “இதுபோன்று இன்னொரு முறை நடக்காது” (It will never Happen again) என்று எழுதியுள்ளார். அதாவது இனி வரும் காலங்களில் என் விக்கெட்டை நீ எடுக்க முடியாது என்பதே இதன் அர்த்தம். அதற்கு பின்னர் சுமார் 21 முறை பிராட் ஷாஜி பந்தினை எதிர்கொண்ட சச்சினின் விக்கட்டை வீழ்த்த முடியவில்லை.கிரிக்கெட்டில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அடித்து நொறுக்கி மாபெரும் வீரர் என தன்னை பல முறை நிரூபித்துக் காட்டியவர் சச்சின் டெண்டுல்கர்.

ரத்தத்தில் செதுக்கிய முதல் அரை சதம்!

1989ல் முதன் முதல் களமிறங்கிய சச்சினுக்கு பலப்பரிச்சைக் காத்துக் கொண்டிருந்தது. காரணம் எதிர் அணியாக விளையாடியது, பலம் கொண்ட பாகிஸ்தான் அணி.பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்க டிரா செய்ய வேண்டும். இப்படிப் பட்ட இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் பந்து வீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் 54 ரன்களுக்கு 4 விக்கட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. 16 வயது இளம் வீரரான சச்சின் டெண்டுல்கர் களமிறங்கி ஒரு ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, வாக்கர் யூனிஸ் வீசிய பந்து முகத்தில் பட்டு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரை பெவிலியனுக்கு அழைத்து செல்ல மருத்துவ ஆலோசனையாளர்கள் முடிவு செய்தனர். இதனை பாகிஸ்தான் வீரர்கள் கிண்டல் செய்யும் விதமாக பல வார்த்தைகள் அவரின் மேல் விழ, இந்தியாவை தோல்வியில் இருந்து காக்க வேண்டிய முழு பொறுப்பையும் சச்சின் தாங்கினார். யுத்தம் என்றால் ரத்தம் வரத்தான் செய்யும் அதைக் கண்டு அஞ்சுபவன் நான் இல்லை என்ற தோணியில் களத்தில் ஆடத் தொடங்கினார் அன்று அவர் அடித்த ரன்கள் 57.

 

சச்சின் தனது 18 வயதில் சிட்னியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடியது முன்னணி வீரர்களின் புருவங்களை உயர்த்திப் பார்க்க வைத்தது.
எதிர் திசையில் விளையாடிய ஆலன் போர்டார் ஏதே அதிசயம் நிகழ்வது போல் இருப்பதாக கூறியுள்ளார்நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்,அவர் இந்தியாவுக்காக நான்காவது இடத்தில் பேட் செய்கிறார் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மெத்திவ் ஹேடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக்கோப்பை வெல்வதே கனவு !

உலகக்கோப்பை வெல்வதே எனது கனவு அதுவே எனது லட்சியம் என பலமுறை தெரிவித்துள்ளார் சச்சின். இவர் ஆடிய 1992, 1996,1999, 2003, 2007 ஆகிய உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது சச்சினை மனதைபெரிதும் பாதித்தது.

“காயப்பட்ட சிங்கம் சீறினாள் முடிவு பயங்கரமாக இருக்கும், பல நாள்
வெறி கண்டிப்பாக வேட்டையாடியே தீரும் என பலரும் அறிந்திருந்ததே…”

2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பைப் போட்டிக்கு களம் இறங்கியது. அதிரடியாக ஆடக்கூடிய சேவாக், நல்ல பார்மில் இருந்த கம்பிர், தனது அதிரடியால் எதிரிகளை ஆட்டம் காண வைக்கும் யுவராஜ், இளம் வீரர் கோலி, அதிரடி கேப்டன் தோனி என பலர் இருக்க எதிர் அணியினரின் கண்கள் அனைத்தும் சச்சின் மேல் தான் இருந்தது. காரணம் “காயப்பட்ட சிங்கம் சீறினாள் முடிவு பயங்கரமாக இருக்கும், பல நாள் வெறி கண்டிப்பாக வேட்டையாடியே தீரும் என பலரும் அறிந்திருந்ததே.ஆம் பல நாள் பகையை பெரும் வலியோடு சுமந்து கொண்டிருந்த அந்த சிங்கம், தனது குட்டியுடன் சீறிப் பாய ஆரம்பித்தது அதன் விளைவாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்தியா வென்று மிஸ்[மாபெரும் சாதனைப் படைத்தது.2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இவர் அடித்த ரன்கள் 482 இதில் இரண்டு சதம், இரண்டு அரை சதமாகும்.

சச்சின் தனது அணியினர் தோல்விகளில் சோர்ந்து நின்ற போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கமளித்தவர்.யுவராஜ் சிங் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வர, அவரிடம் தனியாக சுமார் அரை மணிநேரம் உரையாடி அவரை மீண்டும் பார்முக்கு வர உதவியவர். இதன் காரணமாக 2011 ஆண்டு உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதைப் பெற்றார் யுவராஜ் சிங்.

பாகிஸ்தான் வீரர் அன்வர் ஒரு நாள் போட்டியில் அடித்த 194 ரன்கள் தான் பல நாள் சாதனையாக இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் அடித்தார். இருநூறு ரன்கள் அடித்த முதல் வீரர் சச்சின் என்ற பெருமை பெற்றார் அன்று உலகமே இவரின் இரைட்டை சதத்தை பாராட்டியது. இன்று பலர் எளிதாக ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடிக்கின்றனர் ஆனால் இதற்கு விதை சச்சின் போட்டது. இவர் அடித்த பின்னர் பலரும் இரட்டை சதம் அடித்திருந்தாலும். ஒரு நாள் கிரிக்கெட்ப் போட்டியில் இரட்டை சதம் என்றால் முதலில் ஞாபகம் வருவது சச்சினின் இரட்டை சதம் தான்.

பாராட்டைக் கேட்டு வாங்கிய சச்சின்!

சச்சினின் பறிச்சியாளர் இரமாகாந்த் அச்ரேக்கர் அவர்கள் சச்சின் பல சாதனைகளைப் படைத்தபோது கூட பெரிதாகப் பாராட்டியதில்லையாம். இதற்கு காரணம் பாராட்டினால் தலைக்கனம் வந்து விடும் என்பதால் பாராட்டுவதை தவிர்த்து வந்துள்ளார். ஒரு முறை சச்சின் பறிச்சியாளர் இரமாகாந்த் அச்ரேக்கர் அவர்களிடம் சென்று சார் என்னை இப்பொழுதாவது பாராட்டுகள் ஏன் என்றால் மீண்டும் நான் விளையாட்டுப் போவது இல்லை என உணர்ச்சிப் பொங்க கூறியுள்ளார். 24 ஆண்டுகள் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத பிதாமகனாக கிரிக்கெட்டில் உலகில் கோலோச்சி, முடிசூடா மன்னனாக விளங்கி வருகிறார் சச்சின் டெண்டுல்கர் .

சச்சின் என்றாலே சதம் என்பது அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் கிடைத்த பெயர். பல முறை 80 ரன்களிலும், 90 ரன்களிலும் வெளியேறியுள்ளார். இப்படி 80, 90 ரன்களில் வெளியேறும் பொழுது கூட சச்சின் ஆடுவதே இல்லை என்ற பேச்சு எதிரொலிக்கும், காரணம் இவரிடம் அனைவரும் எதிர்பார்ப்பது சத்தத்தை மட்டும் தான். இதனால் தான் பலமுறை அரை சதம் அடித்தும் கூட இவர்பேசும் பொருளாக இருந்துள்ளார்.

தி டான் அப் கிரிக்கெட் !

உலகமே போற்றும் வீரராக உயர்ந்தது தனது கடினமான உழைப்பால்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 24 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் கிங் ஆக வளம் வருவது எளிதான விஷயம் இல்லை. 24 ஆண்டுகளாக ஒரு கிரிக்கெட் அணியை தூக்கி சுமந்த மாபெரும் வீரர் “தி ரியல் லெஜெண்ட்” சச்சின் டெண்டுல்கரை தாண்டி யாரும் இருக்க முடியாது என்பதே பலரின் கருத்து, அதுவே எனதும் கூட…

இன்று பல வீரர்கள் வரலாம் தங்களில் திறைமைகளால் பல சாதனைகளைப் படைக்கலாம், ஏன் சச்சின் சாதனையை கூட முறியடிக்கலாம். ஆனால் என்றும் இன்னொரு சச்சின் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே கிடைக்கப் பெறாது என்பதே நிதர்சனமான உண்மை.

இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் பேசும் சாதனைகளை தன் வசம் வைத்துள்ள இவர் என்றுமே ஒரு சகாப்தம் தான் . இன்று தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லும் பல கோடி ரசிகர்களின் ஒருவனாக நான் இருப்பதை எண்ணி மகிழ்கின்றேன் !

வளர்க கிரிக்கெட்! வெல்க இந்தியா! வாழ்க சச்சினின் புகழ்!

சதிஷ் குமார் ( E -Behind )

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் கிரிக்கெட் தொடர்கள்!

Published

on

By

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் கிரிக்கெட் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி ஜூன் மாதத்தில் துவங்கி, 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை எந்தெந்த அணிகளுடன் கிரிக்கெட் தொடர்களில் மோதப் போகிறது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

ஜூன் 5ஆம் தேதி முதல் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது.

அதற்கு அடுத்து ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகளில் மோத உள்ளது. பின்னர் ஜூலை கடைசி வாரம் மற்றும் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இலங்கை அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

அடுத்து செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோத உள்ளது.

இதைத்தொடர்ந்து அக்டோபரில் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது.

நவம்பர் கடைசி வாரம் முதல் ஜனவரி 2வது வாரம் வரை ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முக்கியமான தொடரில் பங்கேற்க உள்ளது.

அதன் பின் ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் மோத உள்ளது.

அடுத்து மார்ச் மாதத்தில் 2025 சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

Continue Reading

விளையாட்டு

பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது!

Published

on

By

நேற்று எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த டூ-ஆர்-டை ஐபிஎல் 2024 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து பிலே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே பௌலிங்க தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆர்சிபி 5 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவிய பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிளேஆஃப்களுக்குள் நுழைய. டு பிளெசிஸ் தலைமையிலானராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பல விஷயங்களைச் செய்யது வெற்றிக்கு கடுமையாகப் போராடியது. ரன்கள் குவிப்பது, அக்ரோசமாக பீல்டிங் செய்வது, முக்கிய தருணங்களில் சிறப்பாக பந்து வீசுவது என பல போராட்டங்களை நடந்தி வெற்றிகொண்டது. குறிப்பாக கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் சிஸ்கே பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் சிறப்பாக பந்துவீசிய தயாள் வெற்றியைத் தேடித்தந்தார்.

நம்பமுடியாத ஒரு இரவு :

நம்பமுடியாத ஒரு இரவு! மற்றும் ஒரு சிறந்த வெற்றியுடன் பெங்களூரில் முடித்து மகிழ்ச்சி அளிக்கிறது மழை இடைவேளை முடிந்து திரும்பி வந்த பிறகு நானும் விராட்டும் 140-150 நல்ல ஸ்கோர் என என்று பேசிக் கொண்டிருந்தோம். 200 ரன்களை எடுத்தது நம்பமுடியாததாக இருந்தது. கடந்த 6 ஆட்டங்களில் பேட்டர்கள் நல்ல நோக்கத்துடனும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடனும் பேட்டிங் செய்தனர்.ஈரமான பந்தில் நாங்கள் பந்துவீசிய விதம் நம்பமுடியாததாக இருந்தது, இந்த ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. இதற்கு அவர் தகுதியானவர். முதல் பந்தில் யார்க்கர் வேலை செய்யவில்லை, பின்னர் நடந்தது சிறப்பானதாக அமைந்தது தொடர்ச்சியாக 6 ஆட்டங்களை வெற்றியை சிறப்பானது. எங்களின் முதல் இலக்கு நாக் அவுட்களுக்குள் நுழைவதுதான், அதைச் செய்துள்ளோம்.

 

 

Continue Reading

Sports

ரோஹித்! ரோஹித்! விண்ணை பிளந்த சத்தம்!

Published

on

By

ஐபில் துவங்கியதில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்டேடியத்திலும் எதிரொலிக்கும் சப்தம். இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபில் தொடர் 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக துவங்கியது. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் ஏராளம். இந்திய நகரமான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஹைட்ராபாத் ஆகிய நகரங்களை அணிகளாக பிரித்து வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்களை ஏலம் எடுத்து ஒரு அணியாக விளையாடுவர். சுமார் 16 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்கியது நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஹார்டிக் :

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி. ஏற்கனவே கோப்பையை வென்ற பொது அணியில் ஆடிய ஹார்டிக் பாண்டியா கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் அணியில் இணைந்து கேப்டனாக அணியை வழிநடத்தி 2022 ஆம் ஆண்டு நடத்த ஐபில் தொடர் குஜராத் வெற்றிப் பெற வழிவகுத்தார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய இவரது தலைமையிலான குஜராத் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் தோல்வியை தழுவியது.

2024 ஆம் ஆண்டு தொடரின் அறிவிக்க விருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. இதனை ஒப்புக்கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நிருவாகம் சுமார் 15 கோடி கொடுத்து வாங்கியது. அதுமட்டும் இன்றி ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது.

இதனை சற்றும் எதிர்பாராத ரோஹித் ஷர்மாவின் ரசிகர்கள் இணையத்தளத்தில் வெகு கொண்டு எழுந்தனர். மீண்டும் ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கேப்டன் ஆக வேண்டும் என கூக்குரலிட்டனர் .

கூச்சலிட்ட ரசிகர்கள்

ஐபில் துவங்கினால் சரியாகிவிடும் என பலரும் நினைத்திருந்த வேளையில்,
மும்பை இந்தியன்ஸ் ஹார்டிக் பாண்டியா தலைமையில் மார்ச் 24ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் ஸ்டேடியத்தில் தனது முதல் ஆடியது. இதில் ஹர்டிக் பாண்டியாவுக்கு எதிராகவும், ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாகவும் அரங்கில் உள்ள மொத்த ரசிகர்களும் கோஷங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவை பௌண்டரி அருகே நிற்குமாறு கேப்டன் ஹார்டிக் பாண்டியா செய்கைக்காட்டும் வீடியோ இணையத் தளத்தில் வைரலாக ரசிகர்களின் கோவம்

அதிகரிக்க துவங்கியது. இரண்டாவதுப் போட்டியிலும் ரசிகர்கள் ஹார்டிக் பாண்டியாவிக்கு எதிராக குரல் கொடுத்தனர். சொந்த ஊரில் நடைபெறும் 3ஆவதுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கும் ரசிகர்கள் எந்த மாதிரியான ஆதரவை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முதல் இரண்டு போட்டிகளில் ரசிகர்கள் எழுப்பி குரலோடு ஹார்டிக் பாண்டியாவிற்கு அதிக எதிர்ப்பு குரல் மும்பை மைதானத்தில் இருந்து வெளி வந்தது. போட்டி துவங்குவதுக்கு முன்பு டாஸ் போடும் போது மைதானத்தில் உள்ள கிட்ட்டத்தட்ட 80% பேர் ஹார்டிக் பாண்டியாவிற்கு எதிராக கூச்சலிட்டனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இந்திய அணி வீரருக்கு எதிராக இந்தியா முழுவதிலும் எதிர்ப்பு வெளிவந்தது இதுவே முதல் முறை. ஏன் ரசிகர்ககள் இந்த அளவுக்கு கோவத்தை வெளிப்படுத்தினர் ஹார்டிக் பாண்டிய அப்படி என்ன செய்தார் ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஹார்டிக் பாண்டியவா? இல்லை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தான் இதனை செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் பதவியில் அங்கம் வகித்த ஹார்டிக் பாண்டியவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அழைத்து வந்தது தவறில்லை.

ஆனால் சிறப்பாக செயல்பட்டு 5 முறை கோப்பையை வென்று கொடுத்தது இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் ஷர்மாவை காரணமின்றி நீங்கியது தான் சர்ச்சையானது. இதெல்லாம் அணியின் உரிமையாளர் மற்றும் நிர்வாகக் குழு முடிவு செய்வது என்றலும் மறைமுகமாக இல்லாமல் ஒற்றுமையுடன் பேசி அறிவித்திருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது.

எதிர்பார்ப்பு

இதற்கு முன்பு கூட சச்சின் டெண்டுல்கர் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியுள்ளார். ஏன் கங்குலி,சேவாக், யுவராஜ் போன்ற முன்னணி வீரர்கள் இளம் வீரர்கள் தலைமையில் விளையாடி உள்ளனர். தற்போது கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி ருத்திராஜ் தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என பல முன்னணி வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்களின் கருத்துக்களை அன்றாடம் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை அணுகி சம்மதிக்க வைத்த முறை தான் முக்கியம். மும்பை இந்தியன்ஸ் அணியும் இதனை செய்திருந்தால் இந்த எதிர் குரல் வெளிவந்திருக்காது. 5முறை
சாம்பியன் அசைக்க முடியாத அணி என்ற பெருமை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இன்று இந்த சிறு பிரச்சனையில் தோல்வியைத் தழுவிவருவதாக ஆதங்கப் படுகின்றனர் ரசிகர்கள். அடுத்த ஆண்டு வீரர்கள் கலைக்கப்பட்டு புதிய வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

– சதிஷ் குமார்

 

 

Continue Reading

Trending