ஆதிரா ராஜ் பற்றி ?
என்னுடைய முழுப் பெயர் ஆதிராராஜ் நான் கேரளா பொண்ணு, பள்ளி, கல்லூரி அனைத்தும் கேரளாவில் தான் முடித்தேன், நான் பி.காம் முடித்துள்ளேன், நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்.
சினிமா ஆர்வம் எப்போது வந்தது?
சின்ன வயசுல நிறைய ட்ராமா பண்ணீருக்கேன், அப்புறம் ஸ்டேஜ் ஷோ பண்ணிருக்கேன் அப்பொழுது எல்லாம் சினிமாவில் நடிப்பேன் என நினைக்கவில்லை, அந்த எண்ணமும் அப்பொழுது வரவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு குறும்படம் நடக்க வாய்ப்பு கிடைத்தது அதில் நடித்த பிறகு தான் சினிமா மேல் ஆசை வந்தது. அதன் பின்னர் தான் சினிமாவில் நடிக்க முடிவுசெய்தேன்.
பட வாய்ப்புகள் எப்படி கிடைத்தது ?
மலையாள குறும்படம் நடித்த பிறகு கஸ்டீம் இயக்குனர் ஒருவர் என்னுடைய புகைப் படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தார் அதன் பின்னர் சென்னையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது பின்னர் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஹிப் ஹாப் தமிழா உடன் நடித்த அனுபவம் ?
ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு சிறந்த கலைஞர், நடிப்பில் அதிக ஆர்வம் உடையவர். அவருடன் நடிக்கும் பொழுது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். நடிப்பை பற்றி எனக்குள் இருந்த சந்தேகங்களை போக்கியவர். நல்ல மனிதர்.

உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்? ஏன் ?
நடிகர் சூர்யா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரது நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை, அவருடைய படம் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவேன்.
யார்கூட எல்லாம் நடிக்கணும் என்று லிஸ்ட் இருக்கா?
லிஸ்ட் எல்லாம் ஒன்னும் இல்லை, எனக்கு எல்லோருடையும் நடிக்கணும் என்று ஆசை. சிறந்த நடிகை என பெயர் எடுக்கணும் இது நிறைவேற பாடுபடுவேன்.
சினிமாவிற்குள் வர, உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் ?
என்னுடைய தாத்தா தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு நடிகர். பல மலையாள திரைப்படம் மற்றும் நாடகத்தில் நடித்துள்ளார். அவரால் தான் எனக்கு சினிமா மீது அதீத ஆர்வம் வந்தது. அவருடன் நிறைய ட்ராமா நடிச்சிருக்கேன். பெரிய திரையில் என்னைப் பார்க்க வேண்டும் ஆசை என பட்டார். இன்று அவரது ஆசை நிறைவேறியது ஆனால் அதைப் பார்க்க அவர் இன்று உயிருடன் இல்லை.
உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம் எது ?
சினிமா ஆசை உள்ள எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் ஒருமுறையாவது பெரியத்திரையில் நாம் வந்துவிட வேண்டும் என்று எனக்கும் அந்த ஆசை இருந்தது அது இந்தப் படத்தின் மூலம் சாத்தியமாயிற்று. என்னை ஒரு கதாநாயகியாக பெரியத் திரையில் பார்த்தது தான் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம்.
உங்கள் குடும்பத்தை பற்றி?
நான், அப்பா ராஜன், அம்மா பிரீத்தி ராஜன , தம்பி அமல் ராஜ் எனக்கு என்றும் உறுதுணையாக இருப்பது இந்த மூன்று பேர்கள் தான்.
முதல் கேமரா அனுபவம் எப்படி இருந்தது விளக்கமாக சொல்லுங்க?
முதல் கேமரா அனுபவம் ரொம்ப பயமாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டேன் பயத்தை போக்க, குறும் படம் நடிக்கும் பொழுது இரண்டு அல்லது நான்கு பேர் தான் இருப்பார்கள் அதனால் பயம் தெரியவில்லை. ஆனால் சினிமா அப்படி கிடையாது, கோ ஆர்ட்டிஸ்ட், டைரக்டர், அசிஸ்ட்டேன்ட டைரக்டர், லைட் மேன், ஹெல்பர் என பல பேர் இருப்பாங்க ரொம்ப பயமா இருக்கும். படம் நடித்து முடித்த பிறகு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.