Connect with us

அரசியல்

நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை ! டிடிவி தினகரன் கண்டனம் !

Published

on

விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட வயலில், பயிர்களை அழித்து பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

பல்வேறு இன்னல்களுக்கு இடையே விதைத்து, பயிர் செய்து அதனை காப்பாற்றி வரும் விவசாயிகளின் நிலத்தில் டிராக்டரை விட்டு பயிர்களை அழித்து அவசர, அவசரமாக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? வேளாண் நிலத்தில் வைரமே கிடைத்தாலும் அது தேவையில்லை, விவசாயமே முக்கியம் என்பதே விவசாயிகளின் நிலைப்பாடு. ஆகவே, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வேளாண்மை தொழிலுக்கு பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும் – என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார் 

அரசியல்

தமிழக பாஜகவின் தலைவராக நைனார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகிறார்!

Published

on

By

பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்,கட்சியின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாகிறார். 

அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் , புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் இன்று (11-4-2025) வெள்ளிக்கிழமை பாஜகவின் மாநிலத்தின் தலைவர்  பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.  இவரை எதிர்த்து யாரும் போட்டியில்லாத நிலையில் போட்டியின்றி  நயினார் நாகேந்திரன் தேர்வாகிறார் 

 நயினார்  நாகேந்திரன் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது (2001-06), அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டு போக்குவரத்து, தொழில்கள் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை வகித்தார். 2011 ஆம் ஆண்டு அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, ​​அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 2006 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அந்த இடத்தை இழந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்நயினார்நாகேந்திரன் பாஜகவில் சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் அந்தத் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.



Continue Reading

அரசியல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Published

on

By

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (93). வயது மூப்பு காரணமாக காலமானார் இலக்கியவாதியான இவர் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந் தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.

5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். சட்டசபை இன்று (ஏப்.9)கூடியவுடன் அவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இந் நிலையில் மறைந்த குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அவரது பெருவாழ்வை போற்றிடும் வகையில் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Continue Reading

அரசியல்

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன்!

Published

on

By

“சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன் தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம்;

தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது;

பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது”

டெல்லியில் காங்.கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு  விஜயதரணிஎம்.எல்.ஏ பேட்டி

Continue Reading

Trending