Connect with us

Entertainment

வதந்தி குறித்து நடிகர் நாசர் விளக்கம் !

Published

on

வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்க (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.* இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; “மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஒரு செய்தி மீடியாக்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் ஒரு தவறான செய்தி. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ் திரையுலகில் இருந்து இதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேவை இருக்கிறது. அதனால் இந்த சூழ்நிலையில் யாரும் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன் தமிழ் திரையுலகில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் படங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற சில சீரியஸான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதே தவிர கலைஞர்களின் திறமை மற்றும் நடிகர்களை பற்றியது அல்ல. எஸ்.வி ரங்காராவ், சாவித்திரி, வாணிஸ்ரீ போன்ற மற்ற திரையுலகில் இருக்கும் திறமையாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அன்பும் மரியாதையுடனும் கவனிக்கும் அளவிற்கு தமிழ் திரையுலகம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. அன்பான சகோதரர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் இந்த செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.. உலக அளவில் அதை கொண்டு செல்வோம். நம்மால் செய்ய முடியும் நாம். அதை செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறோம். அதனால் ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.. நன்றி! நாசர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

ராபின் வுட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை! சாக்ஷி அகர்வால்!

Published

on

By

உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி?

என்னுடைய இளம் வயது பள்ளிப் பருவத்தில் நான் ஐஏஸ் ஆக விருப்பப்பட்டேன்,ஆனால் ஐ டி ததுரையின் அசுர வளர்ச்சியால் என் மனம் மாறியது பின்னர் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்தேன். எனது வாழ்க்கையில் மாடலிங் மற்றும் சினிமா இணையும் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் இன்று நிஜமாகி இருக்கிறது தற்போது தமிழ்,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன். இந்த வாழ்கை எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. இது ஒரு நல்ல அனுபவம்.

மார்க்கெட்டிங் துறையில் இருந்து சினிமாவுக்கு மாறியது எப்படி ?

எம்.பி.ஏ படிக்கும் பொழுது மார்க்கெட்டிங் துறையை தேர்ந்தெடுத்து படித்தேன் பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது இன்போசிஸ்யில் நடந்த பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டேன் அதன் பின்னர் கொச்சியில் நடைபெற்ற மற்றோரு பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது பின்னர் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது பின்னர் மார்க்கெட்டிங் வேலையை விட்டு விட்டு இதில் இறங்கி விட்டேன்.

முதல் படம் முதல் அனுபவம் ?

முதன் முதலாக நடித்தப் படம் யுகன் இது தமிழ் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. காரணம் சினிமாவைப் பற்றி ஒன்னும் தெரியாத நிலையில் கேமரா அனுப்பவும் இல்லாமல் நடித்த முதல் படம்எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது சிறந்த அனுபவத்தை தந்தது.

நீங்கள் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளைக்கு என்ன குவாலிட்டி இருக்கணும் ?

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கவேண்டும். நல்ல நண்பனாகவும், இருவரும் புரிந்து நடக்கும் மனிதராகவும் இருந்தாலே வாழ்கை எளிதாகயும்,அழகாகவும் அமையும்.

என்ன மாதிரியான கேரக்டர் பண்ணனும்னு ஆசை ?

உண்மையை சொல்லனும்னா இந்த மாதிரி கேரக்டர் பண்ணனும் என்று ஆசையெல்லாம் இல்லை. அனைத்து வகையான காதாபாத்திரதில் நடிக்க வேண்டும், முக்கியமாக கிராமப்புற கதாபாத்திரம், பக்கா திருநெல்வேலி பொண்ணு கேரக்டர் அதேசமயம் அதிரடி நாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இதனை தவிர்த்து பெண் ராபின்வுட் கேரக்டர் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

உங்களுடைய பிட்னெஸ் ரகசியம் (டையேட் பிளான் ) என்ன ?

எனக்கு எப்பொழுதும் பிட் ஆக இருப்பது பிடிக்கும், டயட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவள் நான். என்னைப் பொறுத் தவரையில் உடலுக்கான பிட்னெஸ் தாண்டி நம் மன நிம்மதிக்கான பிட்னெஸ் தேவை . ஓவ்வொரு முறையும் உடல்பயிற்சி செய்யும் பொழுது எனது மனம் நிம்மதியும் என்மேல் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த உணவையும் தொடமாட்டேன். அதிக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வேன், சைவம் மட்டுமே சாப்பிடுவேன் நன்றாக சாப்பிடுவேன் அதுக்கு ஏற்றாப்போல் உடல்பயிற்சி செய்வேன் இதுதான் எனது பிட்னெஸ் ரகசியம் .

யாருடைய ரியல் கதாபாத்திரத்தில்நடிக்க ஆசை?

நிஜ கதாபத்திரம்னா… பெண்களை மையப்படுத்தி, பெண்களின் வீரத்தைப் போற்றும் விதமாக இருக்கும் பாத்திரம், உதாரணமாக வேலுநாச்சியார் போன்ற பாத்திரத்தில் நடிக்க ரொம்ப ஆசை.

லைப்ல மறக்க முடியாத அனுபவங்கள் ?

காலா படத்தில் சுமார் 55 நாட்கள் நடித்த அனுபவம் என் வாழ்வில் மறக்கமுடியாதது. ரஜினி சார், ரஞ்சித் சார் மற்றும் பட குழுவினர்களுடன் இருந்த தருணம் மறக்க இயலாதது .

ரஜினி, அஜித்துடன் நடித்த அனுபவம் ?

என்னுடைய இளம் வயது கேரியரில் உலக சூப்பர் ஸ்டார்களான ரஜினி சார், மற்றும் அஜித் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பேருமே மிகப்பெரிய அனுபவசாலிகள் இவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன் ஒழுக்கம், வேலையில் ஆர்வம், வேலை மீது இருக்கும் பற்று இதை அனைத்தையும் தாண்டி நல்ல மனிதர்கள், மிகப்பெரிய உயரத்தில் இருந்தாலும் கீழே இருப்பவர்களை மதிக்க தெரிந்தவர்கள். இவர்களுடன் நடித்த அனுபவம் என வாழ்வில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

பிக் பாஸ் கற்றுக் கொடுத்த பாடம் ?

பிக் பாஸ் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் அதற்கு பிக் பாஸ்க்கு நன்றி சொல்லவேண்டும். அது மட்டும் இன்றி நிறைய ரசிகர்களைப் பெற உதவியாக இருந்தது. உலகம் முழுவதும் என்னைப் பற்றி அறிய வழி செய்தது. பிக் பாஸ் பொருத்தவரையில் எனக்கு’ கிடைத்த அனுபவம், எல்லோரும் நம்மை விரும்ப மாட்டார்கள் எல்லோரும் நம்மை வெறுக்க மாட்டார்கள் , நாம் செய்யும் விஷயம் சிலருக்கு சரியா இருக்கும், சிலருக்கு தப்பாக இருக்கும், இந்த உலகத்தில் எது சரி எது தப்புனு யாருக்கும் தெரியாது, ஓவ்வொருவரின் பார்வை வேறாக இருக்கும். செலிபிரிட்டியாக வளரும் பொழுது பல நிறை குறைகளைதாண்டிதான் வர வேண்டும் என்பதயும் கற்றுக் கொடுத்தது இந்த பிக் பாஸ்.

 

 

Continue Reading

Entertainment

80களில் காதல் காவியமான டி ஆர் பாடல்கள்! மாஸ் ஹிட் அடித்த

Published

on

By

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்றால் அனைவரும் அறிந்தது நம் உலக நாயகன் கமலஹாசன் தான். ஆனால் சினிமாவில் சகலமும் அறிந்தவன் என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது டி.ராஜேந்திரனாக தான் இருக்க முடியும். ஒரு திரைப்படத்துக்கு தேவையான அனைத்து துறைகளை கையாளத் தெரிந்த சக்கரவத்தி டி.ராஜேந்திரன்.

1980களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என போட்டி போட்டு ஹிட்ஸ் கொடுத்த தருணம். எந்த ஒரு சினிமா பின்பலம் இல்லாமல் தன் தன்னபிக்கையை நம்பி சினிமா என்ற போட்டிக்குள் சிங்கிள் மேனாக கால்பதித்தவர் டி.ராஜேந்திரன்.

தட்டி தூக்கிய டிஆர் :

இவரது முதல் படம் பணப் பிரச்சனையால் படம் வெளிவர தாமதம் ஆகி கொண்டே போனது. பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கூட படத்தை பற்றய கருத்தை கூற முன்வரவில்லை. படம் வெளிவர பல பிரச்சனை எல்லாருமே படத்தில் யாரும் அறியாத முகம், அதுமட்டும் இன்றி 1980களின் வெளிவரும் பல படங்களில் இசை இளையராஜாவாக தான் இருப்பார் . ஆனால் இந்த படத்தில் அதுவும் இல்ல. பலரும் 100 படங்களில் ஒன்று என எண்ணி இருப்பார்கள். ஆனால் அந்த 100 படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி மாபெரும் ஹிட் கொடுத்தார் டி.ராஜேந்திரன். திரைத் துறையை ஆளப்போகிறவர் இவர் என சொல்லாமல் சொல்லிச் சென்றது ஒருதலை ராகம் திரைப்படம். அன்றைக்கு இருந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் ஹிட் அடித்த படங்களில் ஒருதலை ராகம் முதலிடமானது. 1980களில் இளைஞர்கள் மத்தியில் ஒருதலை ராகம் அதிகமா பேசப்பட்ட படமாக வெள்ளித்திரையில் சாதனைபடைத்தது.

இவரது படங்களில் கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் இவரின் கைகளில் இருந்து செதுக்கப்பட்டவை. ஒரு தலை ராகம் படம் வெளி வந்தவுடன் இவரது கதையே வேறையாக மாறியது.

சினிமா ரசிகர்களை தன்னுடைய ரசிகர்கள் படையாக மாற்றிக் காட்டியவர் டி.ராஜேந்திரன் கதையின் கதநாயகனாக மட்டும் இல்லாமல் இசையின் ராஜாவாக வலம் வந்தவர்.ஒருதலை ராகம் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கத் துவங்கியது யாருப்பா இந்த படத்துக்கு இசை என பலரும் கேட்கும் அளவுக்கு முதல் படத்திலேயே மெகா ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர். அதிலும் வாசமில்லா மலர் இது வசந்தத்தைத் தேடுது என்ற பாடல் எஸ்.பி.பி குரலில் இளைஞர்களின் காதல் காவியமாக சீறிப் பயந்தது. அந்த பாடலில் இடையில் வரும் “பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா, உனக்கேன் ஆசை நிலவவள் மேலே”! என்ற வரி இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்த ஒன்று. 1980களின் கல்லூரி மாணவர்களிடம் கேட்டால் டி.ஆர்யின்படைப்புகளை ஒரு காதல் காவியம் என்றே பதில் வரும். இது போல் பல காவியங்களை படைத்த சகலமும் அறிந்த சாதனைக்காரர் இந்த டி.ராஜேந்திரன் .

வெற்றி நாயகன் :

சினிமாவில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர் டிராஜேந்திரன் அவர்கள் சினிமாவில் இவருக்குத் தெரியாத துறை என இருப்பது அரியது சகலமும் அறிந்த சகலகலா வல்லவர். இவரின் போர் கொண்ட உழைப்புக்கு கிடைத்தப் பரிசுதான் தொடர 7 படங்களின் வெற்றி. உயிருள்ளவரை உஷா, தங்கைக்கொரு கீதம், உறவை காத்தக் கிளி, மைதிலி என்னைக் காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம் ஆகியவை தொடர வெற்றிப் பட்டியல். இவரது ஓவ்வொரு படமும் வெளியாக அதற்கு கிடைக்கும் ஆதரவு திரை உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. ஒரு தாயின் சபதம் பெண்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இந்த படத்தில் இவர் பேசும் அடுக்கு மொழி வசனம் திரையரங்கை கண்டிப்பாக திணறச் செய்திருக்கும்.

80கிட்ஸ் மாணவர்களை இவரது இசை மூலம் சுழற்றிப் போட்டவர். 80கிட்ஸ் காதல் பயணத்தில் இவரது பாடல்களை தவிர்த்து விட்டு செல்வது கடினம். அதிலும் கல்லூரி காதல் ஜோடிகள் இவரின் பாடல்கள் மூலமே தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.

அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி என்ற பாடலில் இடையில் வரும் வரிகளான “உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி, மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி” என்ற வரிகள் தன் காதலின் வலிகளை இந்த பாடல் வரிகளில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த பாடல் முழுவதிலும் சாந்தி என்ற வார்த்தை வைத்தே எழுதப்பட்டிருக்கும். இந்த பாடலை கேட்டு உருகியது சாந்தி மட்டும் அல்ல நம் மனமும் என்பதே உண்மை.

இப்படி பட்ட பல படைப்புகளை நமக்கு வழங்கி இன்று தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க சகலகலா வல்லவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்திரன் .உழைப்பாளர்கள் மாதத்தில் பிறந்த உழைப்பாளன் டி.ராஜேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

 

 

Continue Reading

Entertainment

ரீஎன்ட்ரியில் மாஸ் காட்டிய கில்லி!

Published

on

By

2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்று விஜய் அவர்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த படம். விஜய்யுடன் திரிஷா, பிரகாஷ் ராஜ், தாமு ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்த படம் தான் கில்லி. இந்த படம் சுமார 20 வருடம் கழித்து ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் திரைக்கு வந்தது. அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு விஜய்க்கு முதலில் வெளிவரும் படமாக வெளிவந்த கில்லி படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே இந்தப் படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் புக் செய்ததை பார்க்க முடிந்தது.

கில்லி திரைப்படம் மீண்டும் முதல் நாளில் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது இந்திய மறுவெளியீடுகளின் தெலுங்கு வெற்றிப்படங்களை முறியடித்து சாதனையைப் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரி ரிலீஸ் ஆனது என்றாலும் விஜயின் புதியப் படத்துக்கு எந்த அளவுக்கு கொண்டாட்டங்கள் இருக்குமோ அதே அளவு கொண்டாட்டம் கில்லி ரீ-ரிலீஸ் ஆன தியேட்டர்களிலும் காண முடிந்தது. திரைஅரகில் அப்படிப்போடு பாடலுக்கு திறை அரங்கில் ரசிகர்கள் அனைவரும் நடனமாடி ஆரவாரம் செய்தனர்.

ரீ ரிலீஸிலும் இந்தப் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கில்லி அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004-ம் ஆண்டு தொடங்கிய பயணம் 2024-ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

Trending