Connect with us

கோயம்பத்தூர்

நாளை மின்தடை ஏற்படும் பகுதி!

Published

on

கோவையில் நாளை (12.10.23/வியாழன்)  துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

பீளமேடு துணை மின் நிலையம்:

 பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே – அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர்.

குறிச்சி துணை மின் நிலையம்: 

எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், ஹவுசிங் யூனிட் பேஸ் 1 ரோடு, ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுாராபாத், சக்தி நகர், சாரதா மில் ரோடு, காந்தி நகர், சி.டி.யூ.,காலனி, சீனிவாசன் நகர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர்.கோவில், அம்மன் நகர், கோல்டன் நகர், பழனியப்பா நகர், காந்தி நகர், எம்.ஜி.ஆர்., நகர் விரிவாக்கம், சிட்கோ மற்றும் எல்.ஐ.சி., காலனி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தேசிய உயர் கல்வி மாநாட்டின் 8 ஆம் பதிப்பு துவக்கம்!

Published

on

By

சமூகத்தில் உள்ள முக்கிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நவீன மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளை மாநிலப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்னெடுக்க ‘தமிழ்நாடு முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியம்’ மிகவும் பயனுள்ளதாக  வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோக்கு முன்முயற்சியாகும் என தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் – உயர்கல்வி துறை K. கோபால் வெள்ளிக்கிழமை கோவையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு – தெற்கு பகுதியின் (CII SOUTHERN REGION ) சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி 2024ல் (CII EDUTECH EXPO 2024) கூறினார்.

 

சி.ஐ.ஐ. என்றழைக்கப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் முதலாவது சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி (CII EDUTECH EXPO) மற்றும் அதன் தேசிய உயர் கல்வி மாநாட்டின் 8 ஆம் பதிப்பு இன்று கோவையில் நடைபெற்றது.இந்த மாநாடு நவம்பர் 15-16 கோவை கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது.

 

இதன் துவக்க நிகழ்வில் K. கோபால்,   தமிழக அரசின் உயர்கல்வி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் – கலந்து கொண்டு, சி.ஐ.ஐ.  மற்றும்  கே. பி.எம்.ஜி. எனும் ஆய்வு அமைப்பு  தயாரித்த உயர் கல்வி குறித்த முக்கிய அறிக்கையை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

 

இந்த நிகழ்வில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் S.மலர்விழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று,  உயர் கல்வி அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

 

முன்னதாக சி.ஐ.ஐ.யின் தெற்கு பகுதியின் தலைவர் R. நந்தினி, சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல முன்னாள் தலைவர் செந்தில் கணேஷ், சி.ஐ.ஐ.யின்  தெற்கு பகுதி முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர், கே. பி.எம்.ஜி. நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர் நாராயணன் ராமசாமி, மற்றும் சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்  உரையாற்றினர்.

 

 K. கோபால் அவர்கள் பேசுகையில், நிகழ்காலத்தில் உயர் கல்வி பாடத்துடன் தற்போது வேலைவாய்ப்புக்கு தேவைப்படும் அவசிய திறன்களை ஒன்றிணைக்க அரசு ‘விளைவுகளை மையப்படுத்தி கல்வி கற்பித்தல்’ எனும் முறையை பின்பற்றுகிறது என குறிப்பிட்டார்.

 

21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யவும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதே சமயம், தொழில்துறையுடன் கல்வி துறை கைகோர்த்து மாணவர்களுக்கு கல்வி பயிலும் போதே தொழிற்பயிற்சி (INTERNSHIPS), தொழில்துறை தேவைகளை மையப்படுத்திய ஆய்வுகள் ஆகியவற்றை வழங்குவது அவர்களை இப்போதே எதிர்காலத்திற்கு தயார் செய்வதுடன், நமது பொருளாதார வளர்ச்சியை மேம்பட செய்யவும் வழிவகுக்க கூடிய ஒன்றாக அமையும் என்றார்.

 

CII தெற்கு பகுதியின் தலைவரும் இந்த சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சியின் தலைவருமான ஆர்.நந்தினி தனது வரவேற்பு உரையில்,  உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய திறமைமிகு பணியாளர்களையும், தலைவர்களையும் கோவையில் உள்ள நன்மதிப்பு பெற்ற கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளது என கூறினார். இங்கு நிலவும் சிறந்த கல்வி கட்டமைப்பு, பொறியியலும், தொழில்துறையும் ஒன்று சேர்ந்த செழிக்க வைத்துள்ளது. இது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக கோவை திகழ ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

 

காக்னிசண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர் பேசுகையில், தொழில்த்துறைக்கு தயாரான, தேவையான சிறந்த பணியாளர்களை உருவாக்க கல்வித்துறை மற்றும் தொழில்துறை இடையே உள்ள இடைவெளியை இணைக்க வேண்டியது அவசியம் என்றார்.

 

இதையடுத்து 2050ல் உயர் கல்வியின் எதிர்காலம்; உயர் கல்வியில் நிகழும் மாற்றங்கள்; தொழில்துறைக்கு தயாராகுதலை ஊக்குவித்தல், அறிவுசார்ந்த படைப்புகளை சந்தைப்படுத்துதல்; உள்ளிட்ட தலைப்புகளில்  பல்வேறு அமர்வுகள் நடைபெறவுள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதில் தமிழகம் முனைப்புடன் செயல்படும்

Published

on

By

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) எம்ஆர்ஐ ஸ்கேன் அமைப்பைத் தொடங்கவும், தனியார் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் கூடிய மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை முறையைத் தொடங்கவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை (12.11.2024) அன்று கோவை வந்திருந்தார்.

அவர் ரூ.13 கோடி மதிப்பிலான அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் சிஸ்டத்தை கோவை ஜிஹெச்சில் டாக்டர் நிர்மலா, சிஎம்சிஎச் டீன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் சிலர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். மருத்துவமனையில் இது இரண்டாவது எம்ஆர்ஐ ஸ்கேன் அமைப்பு இதுவாகும்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில், 1-2 மாதங்களில், அனைத்து மாவட்டங்களிலும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கும் என்றார்.


மேலும்தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் வலுவான நடவடிக்கைகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கொண்டு வருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சமூக அடிப்படையிலான பரிசோதனை ஓராண்டுக்கு முன்பு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் இதுவரை 109 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை உதவி வழங்கும் திட்டத்தை கொண்டு வருமாறு முதல்வர் 4 மாதங்களுக்கு முன்பு துறையிடம் கூறியிருந்தார். ஆரம்ப நிதியாக ரூ. மேலும் வெகுஜன காட்சிகளை நடத்த அரசு 26 கோடி ரூபாய் ஒதுக்கியது.

Continue Reading

கோயம்பத்தூர்

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு!

Published

on

By

ரோட்டரி மாவட்ட 3201 -ச் சேர்ந்த கோயம்புத்தூர் டவுன் ரோட்டரி சங்க 10-வது நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றது.
துணை ஆளுநர் கவிதா கோபாலகிருஷ்ணன், ஆளுநர் குழு நிர்வாகி வித்யா ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், 2026-ம் ஆண்டிற்கான மாவட்ட ஆளுநர் மாருதி முன்னிலை வகித்தார்.

தலைவராக டி. விவேகானந்தன், செயலாளராக சி.பிரபு ,பொருளாளராக எம். பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ,சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கு தனி மனது கொண்ட ரோட்டரி சங்கங்கள் தொடர்ந்து சேவையாற்றுவது பாராட்டத்தக்கது என்றார்.மாவட்ட ஆளுநர் சுந்தரவடிவேலு,முன்னாள் தலைவர் பிரேம்குமார் முத்து உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்ட.விழாவில் கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் பொருட்களும், ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

Continue Reading

Trending