Connect with us

Entertainment

வித்தியாசமான பிளாக் ஹோல் ஃபேன்டஸி படம்!

Published

on

விரைவில் வெள்ளித்திரையில் வரவிருக்கும் ரெட் அண்ட் பாலோ திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் திரு.வணக்கம் தமிழா சாதிக் அவர்கள் நமது E-BEHIND  இதழுக்காக கொடுத்த பிரத்தியேகப் பேட்டி!

 

  • ரெட் அண்ட் பாலோ படத்தை பற்றி?

இது ஒரு டார்க் ,பேண்டசி காமெடி திரில்லர் மூவி. பிக் பாஸ் பிரபலங்கள் 5 பேர் இதில் நடித்துள்ளனர். ஜாலியான படமாக எடுத்துள்ளேன். நான் ஒரு வெங்கட் பிரபு ரசிகன் அவருடைய படம் எப்படி இருக்குமோ அதே போல் எடுத்துள்ளேன். கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படி இருக்கும் இந்த ரெட் அண்ட் பாலோ.

  • பிக் பாஸ் பிரபலங்கள் அதிகம் பேர் படத்தில் இருக்கிறார்கள் அதற்கானகாரணம் ?

இது திட்டம் போட்டு இதை நாங்கள் செய்யவில்லை.ஒரு நாயகி படத்துக்கு தேவைப்பட்டது, அதனால் யாஷிகா ஆனந்தை தேர்தெடுத்தோம். கதை முக்கியத்துவத்துக்கு அனிதா சம்பத்தை தேர்ந்தெடுத்தோம். காமெடிக்கு ஜி.பி முத்து தேவைப்பட்டார், அதேபோல பயில்வான் ரங்கநாதன் காமெடிக்கு தேவைபட்டது. பெண் காமெடி செய்ய ஜாங்கிரி மதுமிதாவை பயன்படுத்தி உள்ளோம், இது எல்லாம் எதார்த்தமாக நடந்த ஒன்று. ஆனால் இதுவே எங்கள் படத்துக்கு ஒரு ப்ளஸ்ஸாக அமைந்துவிட்டது. பலரும் இது என்ன படமா இல்ல பிக் பாஸ் வீடா என கேட்கும் அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளது மகிழ்ச்சியே.

  • கருணாகரன், பாலா சரவணனின் பங்களிப்பு இந்த படத்துக்கு எப்படி பட்டது?

கருணாகரன், பாலா சரவணனின் பங்களிப்பு மிக பெரியது கருணாகரன் முக பாவனையை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். சிறந்த நடிகர் அவருடன் பணியாற்றுவது மிக எளிது. அதேபோல பாலா சரவணன் காமெடி டைமிங் வேற லெவல் இருக்கும் காட்சி படமாக்கும் பொழுது ஓவ்வொரு சீன்லயும் சிரிச்சிட்டே இருப்போம் , இனிமையான மனிதர்.

  • இன்று ட்ரெண்டிங்கில் இருக்கும் பலரை படத்தில் பயன்படுத்தி இருக்கிறீர்கள், படத் தேவைக்கா? பட ப்ரமோஷனுக்கா?

இரண்டுக்குமே தான்! இன்னைக்கு இருக்கும் காலகட்டம் டிரேடிங்கை நோக்கி பயணிக்கிறது. டிரேடிங்கை பயன்படுத்தினால் நாமும் ட்ரெண்டிங்கில் இருக்கலாம். எனது படத்தில் நடுவர்கள் அனைவரும் மக்களிடம் ஈசியாக அறியக் கூடியவர்கள் ஆகையால் பயன் படுத்தியுள்ளோம். இருந்தாலும் படத்துக்கு தேவையான ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்கள் தான் நடித்துள்ளார்களே தவிர, தேவையில்லமல் யாரையும் நடிக்க வைக்கவில்லை.

  • ராபர்ட் மாஸ்டர் இந்த படத்தின் வில்லன் என்று கேள்வி பட்டோம் உண்மையா ?

ஆமா உண்மை தான் சிறந்த வில்லனாக இதில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம் ராபர்ட் மாஸ்டர் ஏன் என்றால் நடித்தது மட்டும் இன்று இரண்டு பாடலுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றினார். மிகப்பெரிய நடன இயக்குனர் என்பது நாம் அறிந்ததே, ஆனால் புதுமுக இயக்குனருடன் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பழகக் கூடிய நடிகர். நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பரிசாக எண்ணுகிறேன்.

  • பயில்வான் ரங்கநாதன், ஜி.பி முத்து புது காம்பினேஷன் எப்படி உருவானது ?

இவருடைய காம்பினேஷன் சிறப்பாக இருக்கும் என ஐடியாவை தந்தது இந்த படத்தின் மற்றோரு தயாரிப்பாளர் மகேஷ் அவர்கள். ஒரு முனிவர் கதாபாத்திரம் தேவைப்பட்டது அப்போது இதனை விவாதிக்கும் பொழுது மகேஷ் அவர்கள் தான் பயில்வான் ரங்கநாதன் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என ஐடியா தந்தார். பயில்வான் ரங்கநாதன், ஜி.பி முத்து வரும் காட்சி சிறப்பாக வந்துள்ளது புதுசாக இருக்கும்.

 

  • இசையமைப்பாளராக இருக்கும் பலர் கதாநாயகனாக வலம் வரும் வேலையில் நீங்கள் இயக்குனராக வேறு பாதையில் பயணிக்க என்ன காரணம்?

பலரும் கதாநாயகனாக களமிறங்கிவிட்டனர் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொன்று பிடிக்கும் அதை வெளிப்படுத்துகின்றனர். எனக்கு இசை மற்றும் படம் இயக்குவது ரொம்பப் பிடிக்கும், அதனால் இரண்டையும் செய்கின்றேன். இசையில் அனிருத் யுவன் இடத்துக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நான் இயக்கும் படமும் நல்ல வரவேற்பை பெற வேண்டும். நடிகராக வர வாய்ப்பு வந்தால் அதையும் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

  • படத்திற்க்காக உழைத்தவர்களைப் பற்றி?

இந்த படத்தில் அனைவருமே கடினமாக உழைத்தார்கள். நடிகர்கள் முதல் டெக்நிஷியன்ஸ் என பலரின் உழைப்பால் இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக என்னுடைய மனைவி தனது சிறந்த உழைப்பைத் தந்துள்ளார். பட ஷூட்டிங்கில் சிறிது நேரம் கூட உட்காராமல் வேலை பார்த்தவர். யார் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து என்னுடைய வேலையை முக்கால் வாசி செய்து முடித்துவிடுவார். அதே போல இந்தப் படத்தின் ரைட்டர்
பாபு தமிழ் அவர்கள், கதையில் சிறிது மாற்றம் வேண்டும் என கேட்டாலும் அப்போதே எழுதி கொடுத்து விடுவார், அவருடைய பங்களிப்பு இந்தப் படத்திற்க்கு மிக முக்கியமானது. கேமரா மேன் யுவன் செல்வாவின் உழைப்பு சொல்ல முடியாத அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர், படம் வெளியானவுடன் உங்களுக்குத் தெரியவரும்.

  • படத்தில் நடித்த பிரபலங்கள் பற்றி ?

ஏற்கனவே கூறியதைப் போல கருணாகரன், பாலா சரவணன், அனைவரும் அறிந்த முகம் யாஷிகா ஆனந்த, பிக் பாஸ் பிரபலம் அழகான எளிமையாக பழகக்கூடிய அனிதா சம்பத் மற்றோரு பிக் பாஸ் பிரபலம் ஜி.பி முத்து அவர்கள், சிறந்த நடிகராக வருவார் செய்யும் செயலில் முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவர். ராபர்ட் மாஸ்டர் படத்தின் முக்கிய பங்காற்றியவர். அஜய் வாண்டையார், அபூர்வ ராய், ஜாங்கிரி மதுமிதா, பிஜிலி ரமேஷ் என அனைவரும் இதில் நடித்திருப்பது படத்துக்கும் மட்டுமல்ல எனக்கும் சிறப்பான ஒன்று தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

ராபின் வுட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை! சாக்ஷி அகர்வால்!

Published

on

By

உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி?

என்னுடைய இளம் வயது பள்ளிப் பருவத்தில் நான் ஐஏஸ் ஆக விருப்பப்பட்டேன்,ஆனால் ஐ டி ததுரையின் அசுர வளர்ச்சியால் என் மனம் மாறியது பின்னர் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்தேன். எனது வாழ்க்கையில் மாடலிங் மற்றும் சினிமா இணையும் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் இன்று நிஜமாகி இருக்கிறது தற்போது தமிழ்,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன். இந்த வாழ்கை எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. இது ஒரு நல்ல அனுபவம்.

மார்க்கெட்டிங் துறையில் இருந்து சினிமாவுக்கு மாறியது எப்படி ?

எம்.பி.ஏ படிக்கும் பொழுது மார்க்கெட்டிங் துறையை தேர்ந்தெடுத்து படித்தேன் பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது இன்போசிஸ்யில் நடந்த பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டேன் அதன் பின்னர் கொச்சியில் நடைபெற்ற மற்றோரு பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது பின்னர் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது பின்னர் மார்க்கெட்டிங் வேலையை விட்டு விட்டு இதில் இறங்கி விட்டேன்.

முதல் படம் முதல் அனுபவம் ?

முதன் முதலாக நடித்தப் படம் யுகன் இது தமிழ் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. காரணம் சினிமாவைப் பற்றி ஒன்னும் தெரியாத நிலையில் கேமரா அனுப்பவும் இல்லாமல் நடித்த முதல் படம்எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது சிறந்த அனுபவத்தை தந்தது.

நீங்கள் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளைக்கு என்ன குவாலிட்டி இருக்கணும் ?

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கவேண்டும். நல்ல நண்பனாகவும், இருவரும் புரிந்து நடக்கும் மனிதராகவும் இருந்தாலே வாழ்கை எளிதாகயும்,அழகாகவும் அமையும்.

என்ன மாதிரியான கேரக்டர் பண்ணனும்னு ஆசை ?

உண்மையை சொல்லனும்னா இந்த மாதிரி கேரக்டர் பண்ணனும் என்று ஆசையெல்லாம் இல்லை. அனைத்து வகையான காதாபாத்திரதில் நடிக்க வேண்டும், முக்கியமாக கிராமப்புற கதாபாத்திரம், பக்கா திருநெல்வேலி பொண்ணு கேரக்டர் அதேசமயம் அதிரடி நாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இதனை தவிர்த்து பெண் ராபின்வுட் கேரக்டர் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

உங்களுடைய பிட்னெஸ் ரகசியம் (டையேட் பிளான் ) என்ன ?

எனக்கு எப்பொழுதும் பிட் ஆக இருப்பது பிடிக்கும், டயட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவள் நான். என்னைப் பொறுத் தவரையில் உடலுக்கான பிட்னெஸ் தாண்டி நம் மன நிம்மதிக்கான பிட்னெஸ் தேவை . ஓவ்வொரு முறையும் உடல்பயிற்சி செய்யும் பொழுது எனது மனம் நிம்மதியும் என்மேல் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த உணவையும் தொடமாட்டேன். அதிக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வேன், சைவம் மட்டுமே சாப்பிடுவேன் நன்றாக சாப்பிடுவேன் அதுக்கு ஏற்றாப்போல் உடல்பயிற்சி செய்வேன் இதுதான் எனது பிட்னெஸ் ரகசியம் .

யாருடைய ரியல் கதாபாத்திரத்தில்நடிக்க ஆசை?

நிஜ கதாபத்திரம்னா… பெண்களை மையப்படுத்தி, பெண்களின் வீரத்தைப் போற்றும் விதமாக இருக்கும் பாத்திரம், உதாரணமாக வேலுநாச்சியார் போன்ற பாத்திரத்தில் நடிக்க ரொம்ப ஆசை.

லைப்ல மறக்க முடியாத அனுபவங்கள் ?

காலா படத்தில் சுமார் 55 நாட்கள் நடித்த அனுபவம் என் வாழ்வில் மறக்கமுடியாதது. ரஜினி சார், ரஞ்சித் சார் மற்றும் பட குழுவினர்களுடன் இருந்த தருணம் மறக்க இயலாதது .

ரஜினி, அஜித்துடன் நடித்த அனுபவம் ?

என்னுடைய இளம் வயது கேரியரில் உலக சூப்பர் ஸ்டார்களான ரஜினி சார், மற்றும் அஜித் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பேருமே மிகப்பெரிய அனுபவசாலிகள் இவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன் ஒழுக்கம், வேலையில் ஆர்வம், வேலை மீது இருக்கும் பற்று இதை அனைத்தையும் தாண்டி நல்ல மனிதர்கள், மிகப்பெரிய உயரத்தில் இருந்தாலும் கீழே இருப்பவர்களை மதிக்க தெரிந்தவர்கள். இவர்களுடன் நடித்த அனுபவம் என வாழ்வில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

பிக் பாஸ் கற்றுக் கொடுத்த பாடம் ?

பிக் பாஸ் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் அதற்கு பிக் பாஸ்க்கு நன்றி சொல்லவேண்டும். அது மட்டும் இன்றி நிறைய ரசிகர்களைப் பெற உதவியாக இருந்தது. உலகம் முழுவதும் என்னைப் பற்றி அறிய வழி செய்தது. பிக் பாஸ் பொருத்தவரையில் எனக்கு’ கிடைத்த அனுபவம், எல்லோரும் நம்மை விரும்ப மாட்டார்கள் எல்லோரும் நம்மை வெறுக்க மாட்டார்கள் , நாம் செய்யும் விஷயம் சிலருக்கு சரியா இருக்கும், சிலருக்கு தப்பாக இருக்கும், இந்த உலகத்தில் எது சரி எது தப்புனு யாருக்கும் தெரியாது, ஓவ்வொருவரின் பார்வை வேறாக இருக்கும். செலிபிரிட்டியாக வளரும் பொழுது பல நிறை குறைகளைதாண்டிதான் வர வேண்டும் என்பதயும் கற்றுக் கொடுத்தது இந்த பிக் பாஸ்.

 

 

Continue Reading

Entertainment

80களில் காதல் காவியமான டி ஆர் பாடல்கள்! மாஸ் ஹிட் அடித்த

Published

on

By

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்றால் அனைவரும் அறிந்தது நம் உலக நாயகன் கமலஹாசன் தான். ஆனால் சினிமாவில் சகலமும் அறிந்தவன் என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது டி.ராஜேந்திரனாக தான் இருக்க முடியும். ஒரு திரைப்படத்துக்கு தேவையான அனைத்து துறைகளை கையாளத் தெரிந்த சக்கரவத்தி டி.ராஜேந்திரன்.

1980களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என போட்டி போட்டு ஹிட்ஸ் கொடுத்த தருணம். எந்த ஒரு சினிமா பின்பலம் இல்லாமல் தன் தன்னபிக்கையை நம்பி சினிமா என்ற போட்டிக்குள் சிங்கிள் மேனாக கால்பதித்தவர் டி.ராஜேந்திரன்.

தட்டி தூக்கிய டிஆர் :

இவரது முதல் படம் பணப் பிரச்சனையால் படம் வெளிவர தாமதம் ஆகி கொண்டே போனது. பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கூட படத்தை பற்றய கருத்தை கூற முன்வரவில்லை. படம் வெளிவர பல பிரச்சனை எல்லாருமே படத்தில் யாரும் அறியாத முகம், அதுமட்டும் இன்றி 1980களின் வெளிவரும் பல படங்களில் இசை இளையராஜாவாக தான் இருப்பார் . ஆனால் இந்த படத்தில் அதுவும் இல்ல. பலரும் 100 படங்களில் ஒன்று என எண்ணி இருப்பார்கள். ஆனால் அந்த 100 படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி மாபெரும் ஹிட் கொடுத்தார் டி.ராஜேந்திரன். திரைத் துறையை ஆளப்போகிறவர் இவர் என சொல்லாமல் சொல்லிச் சென்றது ஒருதலை ராகம் திரைப்படம். அன்றைக்கு இருந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் ஹிட் அடித்த படங்களில் ஒருதலை ராகம் முதலிடமானது. 1980களில் இளைஞர்கள் மத்தியில் ஒருதலை ராகம் அதிகமா பேசப்பட்ட படமாக வெள்ளித்திரையில் சாதனைபடைத்தது.

இவரது படங்களில் கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் இவரின் கைகளில் இருந்து செதுக்கப்பட்டவை. ஒரு தலை ராகம் படம் வெளி வந்தவுடன் இவரது கதையே வேறையாக மாறியது.

சினிமா ரசிகர்களை தன்னுடைய ரசிகர்கள் படையாக மாற்றிக் காட்டியவர் டி.ராஜேந்திரன் கதையின் கதநாயகனாக மட்டும் இல்லாமல் இசையின் ராஜாவாக வலம் வந்தவர்.ஒருதலை ராகம் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கத் துவங்கியது யாருப்பா இந்த படத்துக்கு இசை என பலரும் கேட்கும் அளவுக்கு முதல் படத்திலேயே மெகா ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர். அதிலும் வாசமில்லா மலர் இது வசந்தத்தைத் தேடுது என்ற பாடல் எஸ்.பி.பி குரலில் இளைஞர்களின் காதல் காவியமாக சீறிப் பயந்தது. அந்த பாடலில் இடையில் வரும் “பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா, உனக்கேன் ஆசை நிலவவள் மேலே”! என்ற வரி இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்த ஒன்று. 1980களின் கல்லூரி மாணவர்களிடம் கேட்டால் டி.ஆர்யின்படைப்புகளை ஒரு காதல் காவியம் என்றே பதில் வரும். இது போல் பல காவியங்களை படைத்த சகலமும் அறிந்த சாதனைக்காரர் இந்த டி.ராஜேந்திரன் .

வெற்றி நாயகன் :

சினிமாவில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர் டிராஜேந்திரன் அவர்கள் சினிமாவில் இவருக்குத் தெரியாத துறை என இருப்பது அரியது சகலமும் அறிந்த சகலகலா வல்லவர். இவரின் போர் கொண்ட உழைப்புக்கு கிடைத்தப் பரிசுதான் தொடர 7 படங்களின் வெற்றி. உயிருள்ளவரை உஷா, தங்கைக்கொரு கீதம், உறவை காத்தக் கிளி, மைதிலி என்னைக் காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம் ஆகியவை தொடர வெற்றிப் பட்டியல். இவரது ஓவ்வொரு படமும் வெளியாக அதற்கு கிடைக்கும் ஆதரவு திரை உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. ஒரு தாயின் சபதம் பெண்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இந்த படத்தில் இவர் பேசும் அடுக்கு மொழி வசனம் திரையரங்கை கண்டிப்பாக திணறச் செய்திருக்கும்.

80கிட்ஸ் மாணவர்களை இவரது இசை மூலம் சுழற்றிப் போட்டவர். 80கிட்ஸ் காதல் பயணத்தில் இவரது பாடல்களை தவிர்த்து விட்டு செல்வது கடினம். அதிலும் கல்லூரி காதல் ஜோடிகள் இவரின் பாடல்கள் மூலமே தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.

அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி என்ற பாடலில் இடையில் வரும் வரிகளான “உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி, மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி” என்ற வரிகள் தன் காதலின் வலிகளை இந்த பாடல் வரிகளில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த பாடல் முழுவதிலும் சாந்தி என்ற வார்த்தை வைத்தே எழுதப்பட்டிருக்கும். இந்த பாடலை கேட்டு உருகியது சாந்தி மட்டும் அல்ல நம் மனமும் என்பதே உண்மை.

இப்படி பட்ட பல படைப்புகளை நமக்கு வழங்கி இன்று தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க சகலகலா வல்லவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்திரன் .உழைப்பாளர்கள் மாதத்தில் பிறந்த உழைப்பாளன் டி.ராஜேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

 

 

Continue Reading

Entertainment

ரீஎன்ட்ரியில் மாஸ் காட்டிய கில்லி!

Published

on

By

2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்று விஜய் அவர்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த படம். விஜய்யுடன் திரிஷா, பிரகாஷ் ராஜ், தாமு ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்த படம் தான் கில்லி. இந்த படம் சுமார 20 வருடம் கழித்து ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் திரைக்கு வந்தது. அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு விஜய்க்கு முதலில் வெளிவரும் படமாக வெளிவந்த கில்லி படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே இந்தப் படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் புக் செய்ததை பார்க்க முடிந்தது.

கில்லி திரைப்படம் மீண்டும் முதல் நாளில் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது இந்திய மறுவெளியீடுகளின் தெலுங்கு வெற்றிப்படங்களை முறியடித்து சாதனையைப் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரி ரிலீஸ் ஆனது என்றாலும் விஜயின் புதியப் படத்துக்கு எந்த அளவுக்கு கொண்டாட்டங்கள் இருக்குமோ அதே அளவு கொண்டாட்டம் கில்லி ரீ-ரிலீஸ் ஆன தியேட்டர்களிலும் காண முடிந்தது. திரைஅரகில் அப்படிப்போடு பாடலுக்கு திறை அரங்கில் ரசிகர்கள் அனைவரும் நடனமாடி ஆரவாரம் செய்தனர்.

ரீ ரிலீஸிலும் இந்தப் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கில்லி அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004-ம் ஆண்டு தொடங்கிய பயணம் 2024-ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

Trending