Connect with us

கட்டுரை / கதைகள்

பிரசன்னா எழுதும் ” மர்ம காட்டின் மறுபக்கம்”-தொடர் கதை

Published

on

விடியற்காலை சூரியன் மெல்ல உதயமாகி கோவை மாநகரை பிரகாசமாக்கி கொண்டிருந்தது. சிங்காநல்லூர் ஏரியாவில் ஒரு வீட்டின் மேல் மாடியில் சிமெண்ட் ஷீட்டால் ஆனா ஒரு சிறு வீட்டில் இளைஞன் ஒருவன் நாள் காலண்டரில் தேதியை கிழித்து பார்த்து கொண்டிருந்தான், அன்று ஜூலை 4, 1984 என காட்டியது. இன்றைய நாள் இனிய நாளாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டி கொண்டிருந்தான். அதே நேரம் பின்னால் இருந்து அவனை அழைக்கும் குரல் கேட்டது. சந்துரு ! சந்துரு! ஏந்துரிச்சுட்டியா டா .. என விக்ரம், கேட்டுக்கொன்டே உள்ளே வந்தான். என்னடா விக்ரம்! கிரௌண்டுக்கு போயிட்டு உடற்பயிற்சி எல்லாம் முடிச்சுட்டு வந்துட்டியா ??? என்று விக்ரமிடம் கேட்டான் சந்துரு.

விக்ரம்! சந்துரு! இருவரும் கல்லூரித் தோழர்கள். சந்துரு சேலம் அருகிலிருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்தவன். விக்ரம் மதுரையை சேர்ந்தவன். இருவரும் கல்லூரி படிப்பிற்காக கோவைக்கு வந்து நட்பாகினர். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக காத்து கொண்டிருக்கின்றனர். விக்ரம், போலீஸ் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றான்.
சந்துரு, அரசு வேலைக்காக விண்ணப்பித்து காத்து கொண்டிருக்கின்றான். எதுவும் கிடைக்காததால் இருவரும் கிடைத்த சின்ன சின்ன வேலையை செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் வேலை கிடைத்தால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று ஏங்கின்ற சூழ்நிலை வேறு.

சந்துரு, இதுவரைக்கும் நாம செஞ்ச வேலைல, மொத்தமே 100 ரூபாய் தான் இருக்கு, இத வாடகைக்கு கொடுக்கிறதா? இல்ல இந்த மாசம் சாப்பாட்டுக்கு வெச்சுக்கிறதா? வடகைக்கு மெதல்ல கொடுத்தரலாம், ஹவுஸ் ஓனர் எப்போடா நம்மள தொரத்திவிடலாம்னு இருக்காரு, இத விட்டா நமக்கு கம்மி வாடகைக்கு வீடு கிடைக்கவே கிடைக்காது, என சந்துரு கூறினான்.

அப்போ இந்த மாசம் சாப்பாட்டுக்கு என்னடா பண்றது என விக்ரம் கேட்டான். “சமாளிப்போம்” என சோக குரலில் கூறினான் சந்துரு.கீழ் தளத்தில் இருந்த ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு சென்று, வாடகை கொடுத்துவிட்டு வந்த விக்ரம், வாடிய முகத்தோடு தரையில் அமர்ந்தான். இதை கவனித்த சந்துரு, என்னடா வாடகை கொடுத்துட்டியா, ஏன் முகம் இப்படி இருக்கு என கேட்டான். ஹவுஸ் ஓனர்க்கு வாடகை வருமானம் பத்தலையாம், மேல சிமெண்ட் ஷீட் எல்லாம் எடுத்துட்டு ஓடு போட்டு கொஞ்சம் பராமரிச்சா இந்த ரூம்க்கு 300, 400 ரூபாய் வாடகை வருமாம். உங்க நிலைமை புரியுது, தப்பா நினைக்காதிங்க தம்பி, வேர வீடு பாத்துக்கிறிங்களானு கேட்டார். நீ என்னடா சொன்ன என சந்துரு ஆர்வமாக கேட்டான். ஆறு மாசம் டைம் கொடுங்க னு கேட்டான், ரொம்ப யோசிச்சார், சரி மணி 10.30 ஆயிடுச்சு சாப்பாட்டுக்கு என்னடா பண்ணலாம் என்று சந்துரு கேட்டான். ஏன் கேக்கமாட்ட, எல்லாத்தையும் வாடகைக்கு குடுக்க சொல்லிட்டு, இருந்தத வாடகைக்கு கொடுத்தாச்சு என்று விக்ரம் சொன்னவுடன், சந்துரு முகத்தை வேறு பக்கம் திருப்பி ஒன்றும் தெரியாதது போல் பாவனை செய்தான். சந்துரு கவலை படாத ஒரு ஐடியா இருக்கு என்று சொல்லிக் கொண்டே எழுந்த விக்ரம், வீட்டை அங்கும் இங்குமாக துளாவி சில சில்லறை காசுகளை கொண்டு வந்தான். விக்ரம் எப்புடிடா இவ்ளோ சில்லறை காசுகள் என்று சந்துரு ஆச்சர்யம் ஆனான். தேவை படும்னு அங்க இங்கனு வச்சேன், இப்போ உதவுது, ஒரு மூணு நாள் இத வெச்சு சமாளிப்போம் என்றான் விக்ரம். இத வெச்சு எப்படி மூணு நாள் சாப்பிட முடியும் என்று ஆச்சர்யமாக கேட்டான் சந்துரு. கொஞ்சம் இரு வரேன் என்று சொல்லிக்கொண்டு வெளியில் சென்றான் விக்ரம்.

சிறிது நேரம் கழித்து கையில் செய்தி தாளால் சுருட்டப்பட்ட பொட்டலமும், கையில் சிறு தூக்கு வாளியுமாய் உள்ளே வந்தான் விக்ரம். உள்ளே வந்தவுடன் சந்துரு ரெண்டு தட்டு கொண்டு வா என்றான். சந்துரு ஆர்வமாக கொண்டு வந்து அமர்ந்தான். என்னடா கொண்டு வந்துருக்க என்று பசியோடு சேர்ந்த ஆர்வத்தால் கேட்டான் சந்துரு. பாரு என சொல்லி கொண்டே பொட்டலத்தை பிரித்தான் விக்ரம், உள்ளே ஒரு முழு பிரெட் அடுக்கடுக்காக வெட்டப்பட்டு இருந்தது, தூக்கு வாளியை திறந்து பாய் கடை குருமாவை காட்டினான் விக்ரம். குருமாவின் மனமும் பிரெட்ன் மனமும் எங்கும் பரவி பசியை மேலும் தூண்டியது. சந்துரு ஆர்வமாகி கொண்டிருக்கும்போதே, விக்ரம் இரண்டு தட்டிலும் இரண்டு துண்டு பிரெட்ஐ எடுத்து தட்டில் வைத்து, குருமாவை நன்றாக பிரெட் ஊரும் வகையில் மேலே ஊற்றி, ஒரு தட்டை சந்துருவிடம் கொடுத்துவிட்டு, சாப்பிட்டு சொல்லு என்றான். மிக ஆர்வமாக வாங்கி சாப்பிட சந்துரு, பசியோடு சேர்ந்த ருசியில் திளைத்தான் ஆஹா! ஆஹா! சூப்பர் டா விக்ரம், ரொம்ப நல்லாருக்கு, கலக்கிட்ட போ, எங்கடா வாங்கிட்டு வந்த என்று உற்சாக மிகுதியில் கேட்டான். தெரு முக்குல இருக்கற பேக்கரில, கொஞ்சம் கருபடிச்ச பிரெட் எல்லாம் 3 ரூபாய்க்கு குடுப்பாங்க, அத வாங்கிட்டு, நம்ம சுல்தான் பாய் கடைல கொளம்பு ஏதும் மீதி இருந்தா குடுங்க பாய் னு கேட்டேன், இருந்த குருமாவை தூக்கு நிறைய கொடுத்தாரு, அவ்ளோதா, இன்னைக்கும் நாளைக்கும் இந்த வச்சு சாப்டுக்கலாம் என்றான் விக்ரம். இன்னைக்கும் நாளைக்குமா? இனிமேல் இது மட்டும் தா எனக்கு வேனும் என்று கண்டிப்பாக சந்துரு சொன்னதை கேட்ட விக்ரம் வாய்விட்டு சிரித்துவிட, உடனே சந்துருவுக்கும் குபீரென்று சிரிப்பு வந்து கொண்டே இருக்க, இருவரும் மாரி மாரி சிரித்து கொண்டே இருந்தார்கள். போட்டோ பிரமேமுக்குள் இருந்த கடவுள், இந்த வறுமையிலும் இவ்வளவு மகிழ்ச்சியோடு வாழும் இவர்களை பார்த்து ஏங்குவது போலிருந்தது.இரண்டு நாள்கள் கழித்து ஒரு மத்திய வேளையில், தபால் ஒன்று விக்ரம் பேருக்கு வந்தது, ஹவுஸ் ஓனர் அதை வாங்கி மேல் மாடிக்கு வந்து விக்ரமிடம் கொடுத்து விசாரித்தார். சில நாள்களுக்கு முன் ராயல் பெயிண்ட் கம்பெனி குடோன் சூப்பர்வைசர் போஸ்டிங்க்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றதாகவும் அதன் சம்பந்தமாக தகவல் அனுப்பியிருக்கிறார்கள் என கூறினான் விக்ரம். ஓ அப்படியா! ரொம்ப நல்லது தம்பி! என்னனு பாருங்க என்று கூறினார் ஹவுஸ் ஓனர். தபாலை பிரித்து படிக்கும்போதே அனைத்தையும் கேட்டவாரே சந்துருவும் வந்து இணைந்து கொண்டான். முகமலர்ச்சியுடன் நிமிர்ந்த விக்ரம், இது வேலை உறுதி கடிதம், மாதம் 2500 ரூபாய் சம்பளம் என மகிழ்ச்சியோடு கூற, கைதட்டி, விக்ரமை கட்டி அணைத்து, ஆனந்தத்தில் துள்ளி குதித்து விக்ரம், கடவுள் இருக்காருடா, நீ பட்ட கஷ்டம் எல்லாம் வீண் போகல என்று கூறி பரவசமடைந்தான் சந்துரு. உறுதி படுத்த அடுத்த வாரம் நேர்ல வர சொல்லிருக்காங்க, சில நிபந்தனைகளுக்கு கையெழுத்து போடணுமாம், என்று கூறிய விக்ரம் முகம் மாறியது. என்னப்பா, உன் நண்பன் சந்துரு எவ்ளோ சந்தோசமா இருக்கான், நீ என்ன யோசனை இருக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக முடியலனு யோசிக்கறயா, என ஹவுஸ் ஓனர் கேட்க.

ஐயா, அதுகூட ஒரு ஓரமா என் மனசுல இருந்தாலும் எப்படியும் வேலைல இருந்துட்டே எப்படியும் முயற்சி பன்னி சேர்த்துக்கலாம், வேலை மதுரை குடோன்ல கிடைச்சிருக்கு என விக்ரம் கூற, அட உன் சொந்த ஊர்தானப்ப, ஓ சந்துருவ, எப்படி பிரிஞ்சு போகிறதுனு யோசிக்கிராயப்பா என ஹவுஸ் ஓனர் முடிக்க. ஐயா, என் நண்பன், விக்ரம் நல்ல கம்பெனி ல, நல்ல வேலைல இருந்தா, அத விட வேற எனக்கு என்ன பெருமை இருக்க முடியும், அவன் கண்டிப்பா போயி வேலைல சேரனும், எனக்கு டைம் இருக்கு எப்படியும் ஒரு வேலை கிடைச்சுரும் என்று சந்துரு கூறிகொண்டு இருக்கும்போதே, விக்ரம் இடை மறித்தான், அப்படி எல்லாம் விட்டுட்டு போகமுடியாது, சந்துரு, நீயும் என் கூட வர, வேற எதுவும் பேசாத என கண்டிப்புடன் கூறினான். சந்துரு ஏதோ சொல்ல வர, விக்ரம் இடை மறித்து, உன் நண்பன் கூடப்பிடுறேன் எனக்காக வரமட்டியா டா என கேட்க்க. சந்துரு விக்ரமை கட்டி அணைத்து கொண்டே கண்டிப்பா வரேன் டா என கண் கலங்கினான்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கட்டுரை / கதைகள்

கூலிக்குப் பின் மாறிய மனம்! சூப்பர் ஸ்டார் தந்த பாடம்!

Published

on

By

சுமார்  40 வயது கடந்து விட்டால் நமது மனதில் ஒரு தேவை இல்லாத எண்ணங்கள் ஓடித் துவங்கிவிடுகிறதுஎவ்வளவு நாள் இப்படியே ஓடி ஓடி உழைப்பது, எப்பொழுது நல்ல சம்பாதித்து எப்போது நம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது.வாழ்நாள் முழுவதும் இப்படியே சென்றுவிடுமோ! என்ற எண்ணம் பலருக்கு வந்து விடுகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் கூட இதை குறிப்பிட்டு பேசினார் “நாட்கள் நகருகிறது எதையாவது சாதிக்க வேண்டும் என்று இருந்த என் மனம் 40 வயதை கடந்தவுடன் எதையாவது செய்தால் போதும் என்று மாறிவிட்டது நாம் செய்யும் வேலையில் பெரிய ஆர்வம் வருவதில்லை என்று புலம்பினார், நானும் இவர் சொல்வது சரிதான் வயதாக வயதாக நம் மனம் மாறிவிடும் போல என்ற நினைத்துக் கொண்டு, நம்மால் எதையாவது செய்ய முடியுமா சாதிக்க முடியுமா? இல்லை வாழ்கை இப்படியே சென்று விடுமா என்ற எண்ண ஓட்டத்துடன் இன்ஸ்டாகிரமை க்குள் நுழைந்து அதில் இருக்கும் போஸ்ட்கலை பார்த்துக் கொண்டிருந்தேன் . இன்று மாலை 6மணிக்கு சூப்பர் ஸ்டாரின் 171 படத்தின் டீஸர் மற்றும் டைட்டில் வெளியிட இருப்பதாக விளம்பரம் கண்ணில் பட்டது. கடிகாரத்தை பார்த்தேன் இன்னும் 5 நிமிடம் தான் இருக்கிறது, பின்னர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மூழ்கிய எனக்கு நேரம் ஆனது தெரியவில்லை 6 மணியை கடந்து சென்றது நேரம்.

சரி தலைவர் 171 படத்தின் டைட்டில் என்ன வென்றுப் பார்க்க யூடுப்புக்கு சென்று டீசரை பார்த்தேன், அப்ப அப்பா என்ன ஒரு ஸ்டைல், 73 வயதிலும் ஒரு கூலிங் கிளாஸ்சைப் போட்டு சிங்கம் போல நடந்து வருகிறார் சூப்பர் ஸ்டார், எதிரே நிற்கும் எதிரிகளை வழக்கம் போல தட்டி தூக்கி “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்!” என துவங்கி.. “எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே….” என பேசும் வசனம் தலைவா நீங்க வேற லெவல் என்று கூற சொல்கிறது.

டீசரைப் பார்த்து முடித்த பின்னர், என் மனது மண்டையில் ஒரு தட்டு தட்டி “அட மடையா இன்னும், நண்பர் ஒருவர் சொன்னதை எண்ணி நினைத்துக் கொண்டிருக்கிறாயா!, 73 வயதில் பணம், புகழ், அந்தஸ்து என அனைத்தையும் பெற்றிருந்தாலும் தான் செய்யும் தொழில் மேல் இருக்கும் பற்றாலும், ஆசையாலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கம்பிரமாக வயதைப் பொருட்படுத்தாமல் உழைத்து வீர நடைப்போட்டுக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் நினைத்தால் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு வாழ்க்கையே ஓய்விலேயேக் களிக்கலாம், ஆனால் உழைக்க வேண்டும் என்ற வெறி அவருக்கு இளம் வயதிலேயே தோன்றியது, வெறிக்கு வயது வித்தியாசம் தெரியாது உழைத்துக் கொண்டே தான் இருக்கும், அதுதான் அவரது இமாலய வெற்றிக்கு கிடைக்கும் பரிசு. மீண்டும் எனது மனசு மண்டையில் ஒரு தட்டு தட்டி “டேய் எழுந்து ஓடு டா” வயதாவது மன்னாங்கட்டியாவது! என்றது.

நிஜம் தான் உழைப்புக்கும், வெற்றிக்கும் வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை சூப்பர் ஸ்டார் புரிய வைத்துவிட்டார் .

– சதிஷ் குமார்

Continue Reading

Trending