Connect with us

ஆரோக்கியம்

தூக்கத்துடன் சண்டை ஏன்?

Published

on

மனிதனுக்கு தனது வாழ்வில் தூக்கம் மிகவும் முக்கியமானது ஒரு நல்ல தூக்கத்தின் பரிசு விலைமதிப்பற்ற ஒன்றாகும். சுமார் ஒரு நாளைக்கு குறைஞ்சபட்சம் 7 மணி நேரமாவது தூங்குவது நம் உடலுக்கு நாம் வழங்கும் பரிசு. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் சராசரியாக இரவு 9.30 மணிக்கெல்லாம் உறங்கச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்த ஒன்று. தற்போது உள்ள நீவீன உலகில் பல கண்டுபிடிப்புகள் வந்த பிறகு தூக்கத்தை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோம். குறிப்பாக செல் போன் வந்த உடன் பலரது நேரத்தை தனக்குரிய நேரமாக உறிஞ்சிக் கொள்கிறது இந்த செல் போன்கள் . பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை செல் போனில் மூழ்கி நீச்சல் அடித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் இரவு வேலை என்று பகலை மறந்து வாழ்க்கையில் வெற்றிப் பெற ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஏற்படும் தீமைகளை பெரிதும் கவலைப்படாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் நம் மக்கள்.

ஆரோக்கியத்தைக் காக்கும் தூக்கம்:

மருத்துவர்களின் கூற்றுப்படி, 7 முதல் 8 மணிநேரங்களுக்கு ஓய்வெடுக்காமல் இருப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என குறிக்கின்றனர். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மனநலப் பிரச்சனைகளை உருவாகும் வாய்ப்புகள் அதிகம். வாழ்வில் பலர் ஏதாவது பிரச்சனைகளுடன் தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். இதில் இருந்து மீண்டு எல்லா கவலைகளையும் மறக்க வைக்கக் கூடிய ஒரு மருந்து தூக்கம். வாழ்கையில் எவ்வுளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் மறக்கடித்து நிம்மதியினை தருகிறது தூக்கம்.இதனை கருத்தில் கொள்ளாமல் பலர் இரவு வேளை தாண்டியும் செல் போனை பயன்படுத்திக் கொண்டும், கேம்ஸ் விளையாடிக்கொண்டும் இருக்கின்றனர். இதனால் ஒரு நாளைக்கு 7-8 மணி நேர தூக்கம் அவசியம் என்பதை பலரும் மீறுகிறார்கள். சரியான நேரத்துக்கு தூங்கவில்லை என்றல் பல உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும் என்பது பலருக்கும் தெரிஞ்சிருந்தும் அதை பொருட்படுத்துவதில்லை என்பதே வருத்துக்கூடிய விஷயம்.

தூக்கம் தடையால் வரும் பிரச்சனை :

தூக்கம் குறைவானால் முதலில் பாதிப்பது மனநலம்தான் எதை செய்கிறோம், செய்வதை சரியாக செய்கிறோமா? எனப் பல கேள்விகள் நம்மை வந்து தாக்கும். இதேப் போல நாள் அடைவில் அறிவுத்திறன் பாதிப்பு அடைந்து சிந்திக்கும் திறன் குறைந்து விடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கத் ஆரம்பிக்கும். ஜீரண கோளாறு, படபடப்பு, பயம் என பட்டியலிட வழிவகுக்கும் இந்த குறைவான துக்கம் .

நல்ல தூக்கம் கிடைக்க:

அலாரம் அடிக்கும் முன்பாகத் தானாகவே விழித்தெழும். அம்மாதிரி இயல்பாக எழுவதற்கு உடல் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அதுதான் ‘நல்ல தூக்கம் நம் உடலுக்குத் தேவையான துக்கம் .இந்த மாதிரியான தூக்கம் அனைவருக்கும் கிடைப்பதில்லை நல்ல தூக்கம் கிடைக்க படுக்கும் நேரத்தில் மனதை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள் நாம் பின்பற்றுதல் வேண்டும். குறிப்பாக நாம் உறங்கும் இடம் வெளிச்சம் இல்லாத இடமாக இருக்க வேண்டும். படுக்கையறையில், சரியான வெப்பநிலை நம் தூக்கத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று.சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள் நாம் அமைத்துக்கொள்வது நல்ல தூக்கத்துக்கு முக்கியமான ஒன்று. தொலைக்காட்சி, செல் போன் போன்ற உபகரணங்களை உறங்க செல்ல சுமார் 1 மணிநேரத்துக்கு முன் மறந்திட வேண்டியது கட்டாயம் .

உறங்கச் செல்வதற்கு முன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் அமைதியான தூக்கத்துக்கு நம் உடலுக்கு ஏற்ற சமநிலையான உணவை உண்ண வேண்டும். “நன்றாக தூங்குவது உங்கள் ஒட்டுமொத்த வாழ்வை பயனுள்ளதாக்கும். தூங்கும் போது மன அழுத்தமில்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், அதிகமாக யோசிப்பதை நிறுத்தி விட்டு விரைவில் தூங்க முயற்சி செய்யுங்கள். நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருந்தால் நன்றாக தூங்கலாம். உங்கள் உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது குடித்துவிடுங்கள் நீங்கள் தூங்கும்போது மூச்சுத் திணறல் மற்றும் கால் பிடிப்புகளை வராமல் தடுக்கலாம் தூக்கமும் தடைபடாமல் இருக்கும்.சரியான தூக்கம் கிடைப்பது ஒரு கடினமான பணி அல்ல, ஆனால் எளிதாக கிடைக்க சில முறைகளை பின்பற்றியே ஆகவேண்டும். தூக்கம் நம் உடலுக்கு கிடைத்த ஓர் புதையல் அதை பாதுக்காப்பாக வைத்திருப்பது நமக்கு பலன் தரும் என்பதை அறிந்து உறங்குவோம்.

 

-சதீஷ்குமார்

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு ?

Published

on

By

நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட் போன்களால் நம் காதுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. பல தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு நெருங்கிய நண்பனாக இருக்கிறது. அதிலும் பாடல் கேட்காமல் இருப்பவர்களை விறல் விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கின்றனர். இன்றைய இளைஞர் காதுகளின் ஹெட் போனுடன் இருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சியாக இருக்கிறது. அதிலும் அதிக சாத்தத்துடன் பாடல்களை கேட்கும் பொழுது தனி சுகம் தான் என்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நமது செவித்திறன் பாதிப்படைந்து நமக்கு இருக்கும் கேட்கும் திறன் முற்றிலும் செயலிழந்து விடுவதை பாடல்கள் நம்மை மறக்க செய்துவிடுகிறது.

உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின்   ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களில் 20 சதவீதத்தினரிடம் மட்டும் காது கேட்கும் கருவிகள் உள்ளதாக கூறுகிறது. 2050 வாக்கில், உலகளவில் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித் திறன் பாதிப்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசை கேட்பதால் 100கோடிஇளைஞர்கள், நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது.ஆரோக்கியமற்ற செவிப்புலன் நடைமுறைகளால் 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் நிரந்தர காது கேளாமை ஏற்பட நேரிடும் என்றும் ஆய்வு எச்சரிக்கிறது.

பாதுகாப்பற்ற ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள் – 24% செவித்திறன் இழப்பு ஏற்படுவதாக கூறுகிறது. அது மட்டும் இன்றி ஹெட்ஃபோன்கள் மூலம் அதிக சத்தத்துடன் கேட்பது நம் காதுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி நமது செவித்திறனை பாதிப்பதாக கூறப்படுகிறது.17% முதல் வரை 20 வயதிற் குட்பட்டவர்களில் இந்த அதீத சத்தத்தால் காது கேளாண்மை ஏற்படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் பாதுகாப்பற்ற கேட்கும் நடைமுறைகளால் காது கேளாமைக்கு ஆபத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

 

Continue Reading

ஆரோக்கியம்

வாழ்க்கையை ஈசியா வாழுங்க! – – சதீஷ்குமார் சந்திரசேகரன்

Published

on

By

பெரும்பாலும் அனைவருடைய வாழ்க்கையில் நன்மை, தீமை இவை இரண்டும் இல்லாமல் வாழ்கை அமையாது எல்லோரும் சோதனைகளைத் தாண்டித்தான் அன்றாட வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். ஏழை, பணக்காரன் என்ற யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரவர் விரலுக்கு ஏற்றவாறு வீக்கம் இருக்கத் தான் செய்கிறது. இதை சுலபமாக கையாளத் தெரிந்தவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

என்று ஆங்கிலத்தில் அழகான வார்த்தைகள் மூலம் கூறியிருக்கிறார்கள். அதாவது,” நீங்கள் தேடும் மகிழ்ச்சி உங்களைச் சுற்றி இருக்கிறது, அதை கவனிக்க மறக்காதீர்கள்”. என்பது பொருள்.

நாய்,பூனை, ஆடு,மாடு மற்ற மிருகங்கள் தங்களது வாழ்க்கையை அன்றைய தினத்தை அனுபவித்து வாழ்கின்றன. அன்று கிடைக்கும் உணவையும், அன்பையும் அனுபவித்து மகிழ்கின்றனர். பிற உயிரினங்களுக்கும் துன்பம் வரத்தான் செய்கிறது அதை கடந்து தான் தங்களது வாழ்க்கையை நகர்த்தி செல்கிறது. ஆனால் மனித இனம் மட்டும், தமக்கு நல்லதே நடக்க வேண்டும் என எண்ணி அன்றாடம் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகின்றான். போதிய உடற்பயிற்சி உணவுக் கட்டுப்பாடு இருந்தும் சில நோய்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது. சிறப்பாக திட்டமிட்டு ஒரு தொழிலைத் துவங்கினாலும் நஷ்டம் வருவதை தடுப்பது சாத்தியமில்லா ஒன்று. எல்லோருக்கும் நன்மை மட்டுமே நினைக்கிறேன் ஆனால் எனக்கு தீமைகள் வருகின்றது என்று நினைத்து மனதை காயமாக்கிக் கொள்வதில் என்ன பயன்.

The happiness you’re looking for is all around you,
don’t forget to notice it.

இயற்கை எப்பொழுதும் ஒரே மாதிரி நமக்கு கிடைப்பதில்லை, மழை, வெயில், பனி, புயல், பூகம்பம் என மாறுபட்ட இயற்கையை தான் நாம் அனுபவித்து வருகிறோம். மனிதருக்கு மட்டும் ஒரே மாதிரியான தன்மை இருக்க வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்?. வருவது வரட்டும் கிடைப்பது கிடைக்கட்டும் அனைத்தும் நன்மைக்கே! என புரிந்து நமக்குக் கிடைத்திருக்கும் இந்த கோல்டன் வாழ்க்கையை பிறருக்கு கெடுதல் நினைக்காமல், சந்தோஷமாக வாழ பழகினால், வாழ்க்கை ஈசியானதாக இருக்கும்.!

Continue Reading

ஆரோக்கியம்

உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருகிறதா?

Published

on

By

ஆம், நீங்கள் சரியாகப் படித்தீர்கள். நூறாயிரம் முறை. மேலும், நீங்கள் அவர்களை போதுமான அளவு ஆரோக்கியமாக வைத்திருந்தால், உங்கள் இதயம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளி எடுக்காமல் இரத்தத்தை பம்ப் செய்து கொண்டே இருக்கும்!

உங்கள் இதயமும் ஒரு தசை என்பது உங்களுக்குத் தெரியுமா?

எந்த எடையும் இல்லாமல், 100,000 முறை தொடர்ந்து பைசெப் கர்ல்ஸ் (டம்ப்பெல்ஸ் மூலம் நீங்கள் செய்யும் அடிப்படை பயிற்சிகள்) செய்வதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

உங்கள் இதயம் சோர்வடையாமல் செய்வதற்குக் காரணம், உங்கள் எலும்புத் தசைகளுடன் ஒப்பிடும்போது இதயத் தசைகள் வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டுள்ளன.

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த இயந்திரங்கள் கூட, ஒவ்வொரு நாளும் 1,00,000 சுழற்சிகளை முடிக்க முடியாது, 70 ஆண்டுகளுக்கு இடைவிடாது – அதாவது 2.5 பில்லியனுக்கும் அதிகமான சுழற்சிகள் – பராமரிப்புக்கு எந்த நேரமும் இல்லாமல்.

70 ஆண்டுகள் இடைவிடாமல் இயங்கக்கூடிய உங்கள் இதயத்திற்குச் சமமான ஒரு இயந்திரத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் (தற்போது கிடைக்கும் செயற்கை இதயம், சுமார் 4 ஆண்டுகளாக தனிநபர்களுக்கு ஆதரவாக உள்ளது, அதன் விலை சுமார் 1 ஆகும். கோடி ரூபாய்).

இந்த அற்புதமான உறுப்பை நீங்கள் எவ்வாறு பராமரிக்கலாம் என்பதை அறிய விரும்புகிறீர்களா?

ஹார்ட் அட்டாக் என்றால் என்ன?

நமது தசைகளின் சில அடிப்படை செயல்பாடுகளை புரிந்து கொண்டு ஆரம்பிக்கலாம். நமது தசைகளுக்கு ஆக்ஸிஜன் தேவை.

உடல் வலியை நீங்கள் சோர்வடையச் செய்ய ஒரு பொதுவான காரணம், உங்கள் தசைகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை தேவைப்படுகிறது.

நமது இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை இரத்தம் எடுத்துச் செல்கிறது. இந்த ஆக்சிஜன் சப்ளை துண்டிக்கப்படும் போது, ​​மாரடைப்பு ஏற்படுகிறது.

மேலும், எல்லா மாரடைப்புகளும் சினிமா பாணியில் ஏற்படுவதில்லை, அங்கு யாரோ ஒருவர் இதயத்தை இறுக்கி கீழே விழுகிறார்.

குமட்டல், முதுகுவலி, தாடை வலி, மூச்சுத் திணறல், மூட்டு வலி அல்லது மார்பில் வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

உங்கள் வில்லன்களை அறிந்து கொள்ளுங்கள்

மாரடைப்புக்கான முக்கிய காரணிகள் மரபியல் மற்றும் வாழ்க்கை முறை. நீங்கள் உடனே சென்று உங்கள் மரபியலில் மாற்றங்களைச் செய்ய முடியாது, ஆனால் நாங்கள் இப்போதே எங்கள் வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கலாம்.

மேலும், இன்றைய சூழலில், மாரடைப்பு ஏற்படுவதில் வாழ்க்கை முறையே பெரிய பங்கு வகிக்கிறது.

உங்கள் இதயத்தை கவனித்துக்கொள்ளும் போது நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஆறு வில்லன்கள் உள்ளனர்… மேலும், அவர்களில் ஒருவரில் மன்மதன்!

Continue Reading

Trending