Connect with us

கோயம்பத்தூர்

நாளை கோவையில் இந்த இடங்களில் மின் தடை!

Published

on

கோவையில் உள்ள நாளை (9.7.2024) செவ்வாய்கிழமை  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அவற்றின் இடம் இருந்து மின்சாரம் பெறும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மின் பாதை:

நல்லாம்பாளையம் : ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, பாரதி நகர், டி.வி.எஸ்.நகர், ஜெம் நகர், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி).

 

சாய்பாபா காலனி: இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், அம்மாசைக் கோனார் வீதி, என்.ஆர்.ஜி. வீதி.

 

இடையர்பாளையம்: பி.டி.காலனி, இ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர்.

 

சேரன் நகர்: சேரன் நகர், ஐ.டி.ஐ.நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ராமகிருஷ்ணா நகர் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.

 

லெனின் நகர்: சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி.வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.

 

சங்கனுார்: புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் நகர் மற்றும் கருப்பராயன் கோவில் வீதி.

 

மாதம்பட்டி துணை மின் நிலையம்:மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம்.

 

தொண்டாமுத்தூர் துணை மின் நிலையம்: தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடி,

 

தேவராயபுரம் துணை மின் நிலையம்: தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாைைளயம் மற்றும் தென்றல் நகர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு!

Published

on

By

ரோட்டரி மாவட்ட 3201 -ச் சேர்ந்த கோயம்புத்தூர் டவுன் ரோட்டரி சங்க 10-வது நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றது.
துணை ஆளுநர் கவிதா கோபாலகிருஷ்ணன், ஆளுநர் குழு நிர்வாகி வித்யா ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், 2026-ம் ஆண்டிற்கான மாவட்ட ஆளுநர் மாருதி முன்னிலை வகித்தார்.

தலைவராக டி. விவேகானந்தன், செயலாளராக சி.பிரபு ,பொருளாளராக எம். பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ,சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கு தனி மனது கொண்ட ரோட்டரி சங்கங்கள் தொடர்ந்து சேவையாற்றுவது பாராட்டத்தக்கது என்றார்.மாவட்ட ஆளுநர் சுந்தரவடிவேலு,முன்னாள் தலைவர் பிரேம்குமார் முத்து உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்ட.விழாவில் கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் பொருட்களும், ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

Continue Reading

கோயம்பத்தூர்

கோவையில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி துவக்கம்!

Published

on

By

1933ம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சர், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களால் கோவையில் துவங்கப்பட்ட தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா), அனைத்து ஜவுளி பிரிவுகளையும் உள்ளடக்கி செயல்படுகிறது. சைமா கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் “டெக்ஸ்ஃபேர்” என்ற பெயரில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் சர்வதேச கண்காட்சியை நடத்திவருகின்றது.  ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தியாளர்கள் ஃ விநியோகஸ்தர்கள் மற்றும் அதன் உபயோகிப்பாளர்களான ஜவுளி ஆலைகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பரஸ்பரம் பயன் அடைய செய்வதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும். இதற்கு முன்பு நடைபெற்ற  “டெக்ஸ்ஃபேர்” கண்காட்சிகளில் பங்கேற்றவர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் பதினான்காவது  கண்காட்சி இன்று முதல் ஜூன் 24ஆம் தேதி வரை கோவை கொடீசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

 இந்த கண்காட்சி காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும். உலகில் நடத்தப்படும் பல்வேறு ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சிகளில் “டெக்ஸ்ஃபேர்  கண்காட்சி தரம் வாய்ந்ததாக மதிப்பிடப்படுகிறது.  மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள், உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குவோர் ஆகியோர் கண்காட்சியில் பங்கேற்ற்றுள்ளனர். உலகளவில் கோவை ஜவுளித் தொழில் உற்பத்தி மையமாக திகழ்வதால், “டெக்ஸ்ஃபேர்  கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு நல்ல வியாபாரம் கிடைக்கும். இக்கண்காட்சியின் 14வது பதிப்பு  கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ‘கணபதி’ ராஜ்குமார் அவர்களால் ITMF தலைவர் KV சீனிவாசன், CITI தலைவர் ராகேஷ் மெஹ்ரா மற்றும் பிற விருந்தினர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

 இந்த ஆண்டு, 240 ஜவுளி இயந்திரங்கள்  (வெளிநாட்டில் இருந்து 75+ கண்காட்சியாளர்கள் உட்பட) , உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 260 ஸ்டால்களில் இயந்திரங்கள், உதிரிபாகங்கள், பாகங்கள், சோதனை உபகரணங்கள், மின் மற்றும் மின்னணு பாகங்கள், ஈரப்பதமூட்டும் ஆலைகள், காற்று கம்ப்ரசர்கள் , சோலார் பேனல்கள் போன்றவற்றில் தங்களின் அதிநவீன ஜவுளி தொடர்பான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

 நாட்டின் நூற்புத் திறனில் 45% மற்றும் ஜவுளி வர்த்தகத்தில் 33%  பங்கு தமிழ்நாடு ஆகும். நிலையான வளர்ச்சி விகிதத்தை அடைய, நாம் சமீபத்திய கண்டுபிடிப்புகளை அணுக வேண்டும் மற்றும் எங்கள் தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும், செலவு குறைந்த உற்பத்தி முறைகளை பின்பற்ற வேண்டும், மதிப்பு கூட்டல் மற்றும் பிராண்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும், “இந்த தொழில்துறைக்கான எங்கள் பார்வை, பிரீமியம் பற்றிய உணர்வை உருவாக்க விரும்புகிறோம். இந்திய ஜவுளித் துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும், அதை நோக்கிய ஒரு இயக்கம் டெக்ஸ்ஃபேர்,” என்று தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் (சைம) தலைவர் எஸ்.கே.சுந்தரராமன்,டெக்ஸ்ஃபேர்  இன் தொடக்க விழாவில் பேசினார்.

 கோயம்புத்தூர் எம்.பி., கணபதி ராஜ்குமார் கூட்டத்தில் பேசுகையில், இப்பகுதியின் எம்.எஸ்.எம்.இ.க்கள் மற்றும் ஜவுளித் தொழில்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக உறுதியளித்தார். “நான் இந்த மண்ணின் மகன், இங்குள்ள எம்எஸ்எம்இ மற்றும் மில்கள் எப்படி இருந்தன என்பதை நான் பார்த்திருக்கிறேன், அவற்றின் ஏற்றத்தை நான் கண்டேன், இன்று அவர்களின் நிலையை நானும் காண்கிறேன்” என்று அவர் கூறினார். தொழில் சங்கங்களின் பிரச்சனைகள் மற்றும் உள்ளீடுகளைக் கேட்கவும், அவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் தனது கதவைத் திறந்து வைப்பதாக அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்.

 மேலும், நாடாளுமன்றம் கூடும் போது கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் குறித்து பேசுவேன் என்றும் அவர் கூறினார். விரிவாக்கத்திற்காக ஏஏஐ-க்கு நிலங்களை வழங்க மாநில அரசு தயாராக உள்ளது, ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவில்லை, இதனால் தாமதம் ஏற்படுகிறது என்றார். விமான நிலைய விரிவாக்கம் மேற்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பது அரசுக்கு தெரியும் என்றும், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் நாளை எங்கெல்லாம் ? மின் தடை!

Published

on

By

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கோவையில் நாளை ஜூன் 13ஆம் தேதி வியாழன் பெரும் பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

மின் தடை ஏற்படும் இடங்கள் :

உக்கடம் துணை மின் நிலையம்:கரும்புகடை பீடர், சி.எம்.சி. பீடர், அரசு மருத்துவமனை பீடர், அன்பு நகர், ஜி.எம்.நகர், சாஃபா கார்டன், ஜே.ஜே. கார்டன், போயெஸ் கார்டன், அற்புதம் நகர், கோட்டை புதூர், என்.எஸ்.கார்டன், சன் கார்டன், லாரி பேட்டை, ஹவுசிங் யூனிட், பொன்விழா நகர், கே.ஜி.லே அவுட், ரோஸ் கார்டன், அல் அமீன் காலனி, பிலால் நகர், அண்ணா நகர், ஜே.கே. கார்டன், ஆஸாத் நகர், பாரத் நகர், சாரமேடு, வள்ளல் நகர், கரும்புகடை, ஆத்துப்பாலம் மயானம், திருச்சி ரோடு – அரசு மருத்துவமனை – கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்.

பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே – அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர்.

Continue Reading

Trending