நம் முன்னேற்றத்துக்கு பக்கபலமாக இருப்பது நம் மனம் தான். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற கருத்து அனைவரும் அறியப்பட்ட ஒன்று. ஆமாம் நாம் மனதில் என்ன செய்ய வேண்டும், என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவோம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். மனம் என்பது மனிதனின் மாளிகை கதவு போல நாம் மனது வைத்தால் தான் இதை திறக்க முடியும். அதாவது முயற்சி செய்தால் தான் அந்தக் கதவை திறக்க முடியும்.
நாம், வாழ்வில் வெற்றி பெற முதலில் நம் மனதுக்கு அதனை கூற வேண்டும். நாம் நினைக்கும் ஓவ்வொரு சிந்தனைகளும் ஆழ் மனதில் பதிந்து பிரபஞ்ச சக்தியுடன் கலந்து நம் எண்ணத்தைப் போல் நடக்க வழிவகை செய்து வாழ்வில் வெற்றிப் பெற உதவும். இதனால் தான் நல்லதையே நினைக்க வேண்டும் என பெரியவர்கள் கூறுவது வழக்கம்.
நாம் பிறக்கும் பொழுதே சகலவிதமான சக்திகளுடனே படைக்கப்பெற்றோம். நம் உடலில் மூன்று மனங்கள் உள்ளது உள்மனம் வெளிமனம், ஆழ்மனம் என்பதாகும். நம் உடலில் இருக்கும் மற்ற உறுப்புக்கள் எப்படித் தனித்தனியாக செயல்படுகிறதோ அதே போல ஆழ்மனமும் உடலுக்குள் இயங்கி நம் எண்ணத்தின் பிரதிபலிப்பாக செயல்படுகிறது. நாம் எதை விருப்புகிறோமோ அதனை இந்த ஆழ்மனம் கொடுக்கிறது, இந்த ஆழ்மனதில் விதையே எப்படி நாம் விதைக்கிறோமோ அதன் படியே அறுவடை செய்கிறோம் என்பதை நம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆழ்மனதின் சக்தியை எப்படிப் பெறுவது என்பது அனைவருக்குள் இருக்கும் கேள்வி. நீங்கள் இந்த சக்தியைப் பெற புதியதாக எதுவும் செய்யத் தேவையில்லை அது ஏற்கனவே உங்களிடம் தான் உள்ளது என்பதை முதலில் நீங்கள் அறிய வேண்டும்.
ஆழ்மனதின் சக்தி:
ஆழ்மனதின் சக்தி அளவற்றது இதனை நாம் அறிந்துக் கொண்டால் இந்த உலகை ஆளலாம். அமைதி, மகிழ்ச்சி, நல்ல எண்ணம் ஆகியவற்றை விதைக்க துவங்குங்கள். எதிர்மறையான எண்ணங்கள் வரும்பொழுது அதனை புறம் தள்ள முயற்சி செயுங்கள் நல்லதை மட்டுமே மனதுக்குள் செல்ல வழிவிடுங்கள் உங்களுக்கு அது தரும் பரிசு மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தியை அறிய நீங்கள் உறங்கும் முன் ஆழ்மனதிடம் நீங்கள் விரும்பும் காரியம் நிறைவேற வேண்டும் என கூறுங்கள் அந்தக் காரியம் வெற்றிப் பெற தேவையான சக்தியைப் பெற்று அதில் வெற்றி பெற வைக்கும் என பயன் அடைந்த பலர் கூறுகின்றனர். ஒன்றை மட்டும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் அதாவது நீங்கள் நினைக்கும் காரியம் நல்லது, கெட்டது என ஆழ்மனத்துக்கு பிரிக்கத் தெரியாது ஆதலால் நம் சிந்தனை நல்லதாக இருக்க வேண்டும்.
அதுமட்டும் இன்றி நாம் சிந்திக்கும் எதிர்மறையான எண்ணங்களால் நம்மை நாமே காயப்படுத்திக்கொள்கிறோம் என்பதை மட்டும் தெரிந்துக்கொள்வோம்.
வெற்றியாளராக மாறுங்கள் !
நாம் ஒரு வேலையைசெய்யும் போது என்ன மனப்பான்மையில் இருக்கிறோமோ அதை பொறுத்தே வெற்றியும் தோல்வியும் அமையும். நான் உறுதியாக இதில் வெற்றிப் பெறுவேன் என்ற மனதுடன் செயல்பட்டால் வெற்றி அடையும் அதுவே வெற்றிபெறுவது கஷ்டம் எனற எண்ணத்துடன்
செய்ல்பட்டால் கண்டிப்பாக நமக்குத் தோல்வியே வந்து சேரும். நாம் கேட்பதை பெற்றுத் தரும் அதீத சக்திப் பெற்றது ஆழ்மனம் இதற்கு ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது
“ Positive thinking always give success…”Negative thinking will never give success”…
நாம் ஒன்றை அடைய விரும்பினால் அந்த எண்ணத்துடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் அதாவது நாம் பெறப்போகும் வெற்றியை, நாம் பெற்று விட்டதாக நினைத்து அதனுடன் பயணம் செய்யவேண்டும். உதாரணமாக நாம் ஒரு மிக பெரிய கம்பெனியில் வேலை எதிர் பார்த்துக் காத்துகொண்டு இருக்கிறோம் என்றால், அந்த வேலை கிடைத்தால் என்ன மாதிரியான மகிழ்ச்சியில் இருப்போமோ அதை நாம் நினைத்துப் பார்த்துக் (Visualizing) காட்சிப் படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் அதை நினைக்கும் பொழுது அது ஆழ் மனத்துக்குச் சென்று உங்கள் எண்ணம் போல வெற்றியடைய வைக்கும், என்பதே வெற்றிப் பெற்ற பலர் கூறும் கருத்தாகும்.