2022 ஐபில் ஆம் ஆண்டு , அணிகள் மொத்தம் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தனர் .தற்போது அதேபோல 2025 ஐபிஎல் மெகா ஏலமும் தக்கவைப்புக் கொள்கையைக் காணும், என கூறப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வில்லை .
2022 ஐபிஎல் மெகா ஏலத்தில், அதிகபட்சமாக இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விருப்பத்தை அணிகளுக்கு ஐபில் நிர்வாகம் வழங்கியது. நான்கு வீரர்களும் 3 இந்தியர்கள் + 1 வெளிநாட்டு அல்லது 2 இந்தியர்கள் + 2 வெளிநாட்டு வீரர்களைக் கொண்டிருக்கலாம் என்பது விதி .தற்போது வீரர்களை தக்கவைத்துக் கொள்வதின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்றாலும், இதில் மூன்று இந்திய வீரர்களை மட்டுமே ஒரு அணியினர் தக்க வைக்க முடியும் வெளிநாட்டு வீரர் 2 பேரை தக்க வைக்க முடியும் கூறப்படுகிறது.
இதற்கு பல அணிகள் ஆதரவு தெரிவித்தாலும் சில அணிகள் எதிர்க்கின்றனர்,காரணம் முக்கியமாக வீரர்கள் ஏலத்தில் விட்டால் அதிக தொகை கொடுத்து வாங்க நேரிடும். குறிப்பாக சென்னை, மும்பை இதற்கு எதிராகவே இருக்கும். ஐபிஎல் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் 3 வீரர்களுக்கு மேல் கொடுத்தால் அணியில் பெரிதான மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகும் இதன் காரணமாக ஐபிஎல் நிர்வாகம் 3 இந்திய வீரர்களுக்கு மேல் தக்கவைப்பதை விரும்பவில்லை.
அதிகபட்ச 3 இந்திய வீரர்கள் என்ற கணக்கில் மட்டுமே தக்க வைக்க முடியும் என்றால், அது சில அணிகளுக்கு மகிழ்ச்சியானதாக அமையும். உதாரணமாக ராஜஸ்தானை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சாஹல் ஆகியோரை தக்க வைக்க விரும்பும் காரணம் இவர்களை ஏலத்தில் விட்டால் மீண்டும் எடுப்பது கடினம் அதுமட்டும் இன்றி அதிக தொகைக்கு வாங்க நேரிடும். மற்ற அணிவீரர்களை ஏலத்தில் விட்டால் அதிக தொகை கொடுக்க நேரிடும்.
பஞ்சாப் கிங்ஸ் :
இந்த அணிக்கு தக்க வைக்க பெரிய அளவில் வீரராகள் இல்லை என்றாலும் ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் ஷர்மாவும் தக்கவைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். இவர்களை தாண்டி வெளிநாட்டு வீரர்கள் தக்க வைக்கம் வாய்ப்பு சாம் கரண் மற்றும் ககிசோ ரபாடா இருக்கலாம்.
குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் முதலில் தக்கவைக்க விரும்பும் நபராக ஷுப்மான் கில் இருப்பார். இவரது சிறப்பான ஆட்டமும் கேப்டனனாக செயல்படும் முறையுமே முதல் வாய்ப்பாக இருக்கிறது. மேலும் அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறந்த பேட்டர்களில் ஒருவர் என்பதை ஏற்கன
வே காட்டியுள்ளார். ஷுப்மான் கில் தவிர, முகமது ஷமியையும் தக்க வைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.வெளிநாட்டு வீரர்களாக இடம் பெற வாய்ப்புகள் கேன் வில்லியம்சன், ரஷித் கான் ஆக இருக்கலாம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நீக்க முடியாத பெயராக வளம் வருவது விராட் கோலியின் பெயர். கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் .இவரை தவிர இந்திய வீரர்களை தக்க வைக்க நிர்வாகம் விரும்புமா என்பது கேள்விக்குறிதான். 2024 சிறப்பாக விளையாடிய வில் ஜாக்ஸ், மட்சுவெல் ஆகியோர் இடம்பெறலாம்
டெல்லி கேப்பிட்டல்
டெல்லி கேப்பிட்டல்ஸ் பொறுத்த மட்டில் விபத்து காரணமாக 2023 சீசனைத் தவறவிட்ட ரிஷப் பண்ட், 2024 சீசனில் மீண்டும் கேப்டனாக ப
தவியேற்று நடத்தி வருகிறார் இதனால் இவரது பெயர் முதலில் இடம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் இவரைத் தவிர அக்சர் படேல், குலதீப் யாதவ் ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள நிர்வாகம் விரும்பும் . டெல்லி அணி வெளிநாட்டு வீரர்கள் இடப்பெற கூடும் என எதிர்பார்பது ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், மிட்செல் மார்ஷ் .
மும்பை இந்தியன்ஸ்:
அனைத்து தொடரில் அதிக எதிர்பார்பை ஏற்படுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 2024 ஆம் தொடரில் தடுமாறி வருகிறது.ஐபிஎல் 2025க்கான வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் மிகப்பெரிய தலைவலியைக் காணும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. ஹார்டிக் பாண்டியா கேப்டன் பொறுப்பை தக்கவைக்கப்படலாம், இவரைத் தவிர சூரியகுமார், பும்ப்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள். ரோஹித் ஷர்மா தக்கவைப்பது அவரது முடிவில் தான் இருக்கிறது. டிம் டேவிட் மட்டுமே எதிர்பார்க்கலாம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2025 க்கு தக்கவைக்கப்படும் முதல் நபராக இருப்பது கேஎல் ராகுல் . கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என பல பொறுப்புகளை வைத்துள்ளார். இவரை தாண்டி இந்திய அணி வீரர்களில் ரவி பிஷ்ணோய் மயங்க் யாதவ் இடம்பெறலாம். இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க பெற வாய்ப்பு பூரான்,ஸ்டோனிஸ் இருக்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
வரும் 2025 ஆவது ஐபிஎல் தோனி இல்லாத ஐபிஎல்லாக இருக்க கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில்
ஐபிஎல் 2025 க்கு சிஎஸ்கே தக்கவைக்கும் முதல் பெயர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகும். ருத்துராஜ் தவிர, பெரும்பாலும் ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே தக்க வைத்துக் கொள்ள விரும்பும். இந்த அணியில் வெளிநாட்டு வீரர்களை தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் மெயின் அலி, பதிரான கிடைக்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்பெரும்பாலும் ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், வருண் சக்கரவத்தி ஆகியோரைத் தக்க வைத்துக் விரும்பும். மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க முனைப்புக் காட்டும். இந்த அணியில் முக்கிய வெளிநாட்டு வீரர்களாகப் பார்க்கப்படுவது ரஸ்செல், நரேன், ஆகியோரை தக்க வைக்கும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இறுதியாக, 2024 சீசன்னில் சிறப்பாக விளையாடுவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்திய வீரர்கள் பெரிதாக இல்லை அபிஷேக் ஷர்மாவைத் தக்க வைத்துக் கொள்ள முனைப்புக் காட்டும். வெளிநாட்டு வீரர்களான ஃபினிஷர் ஹென்ரிச் கிளாசென் துவக்க அதிரடி வீரர் ஹெட் ஆகியோரை தக்க வைக்கும்.