Connect with us

உலகம்

IMAGE SEARCH என்ற அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம்!

Published

on

செய்திகளை அதிகம் பரவப்படும் செயலியாக இருப்பது wahtsapp . தினமும் பல கோடி செய்திகள் wahtsapp அனுப்பப்படுகிறது. இதனால் பல புது அம்சத்தை அன்றாடம் வெளியிட்டு வருகிறது wahtsapp நிறுவனர் . தற்போது புது அப்டேட் ஆக வர இருக்கிறது . போலிச் செய்திகள், வதந்திகளை அடையாளம் காணும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் (WhatsApp) கொண்டுவர உள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கிறது.

தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இமேஜ் சர்ச் (IMAGE SEARCH] அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்ய உள்ளது மெட்டா!. இந்த அம்சம் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் போட்டோக்களை சரிபார்க்கும் வழிமுறையை வழங்குகிறது.

இதன்மூலம் வாட்ஸ்அப்பில் வரும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதா, தவறாக சித்தரிக்கப்பட்டதா எனக் கண்டறியலாம். மேலே இருக்கும் 3 புள்ளியை கிளிக் செய்து அம்சத்தை பயன்படுத்துக்கொள்ளலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு ?

Published

on

By

நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட் போன்களால் நம் காதுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. பல தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு நெருங்கிய நண்பனாக இருக்கிறது. அதிலும் பாடல் கேட்காமல் இருப்பவர்களை விறல் விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கின்றனர். இன்றைய இளைஞர் காதுகளின் ஹெட் போனுடன் இருப்பது நாம் அன்றாடம் காணும் காட்சியாக இருக்கிறது. அதிலும் அதிக சாத்தத்துடன் பாடல்களை கேட்கும் பொழுது தனி சுகம் தான் என்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நமது செவித்திறன் பாதிப்படைந்து நமக்கு இருக்கும் கேட்கும் திறன் முற்றிலும் செயலிழந்து விடுவதை பாடல்கள் நம்மை மறக்க செய்துவிடுகிறது.

உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின்   ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களில் 20 சதவீதத்தினரிடம் மட்டும் காது கேட்கும் கருவிகள் உள்ளதாக கூறுகிறது. 2050 வாக்கில், உலகளவில் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித் திறன் பாதிப்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசை கேட்பதால் 100கோடிஇளைஞர்கள், நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது.ஆரோக்கியமற்ற செவிப்புலன் நடைமுறைகளால் 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் நிரந்தர காது கேளாமை ஏற்பட நேரிடும் என்றும் ஆய்வு எச்சரிக்கிறது.

பாதுகாப்பற்ற ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள் – 24% செவித்திறன் இழப்பு ஏற்படுவதாக கூறுகிறது. அது மட்டும் இன்றி ஹெட்ஃபோன்கள் மூலம் அதிக சத்தத்துடன் கேட்பது நம் காதுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி நமது செவித்திறனை பாதிப்பதாக கூறப்படுகிறது.17% முதல் வரை 20 வயதிற் குட்பட்டவர்களில் இந்த அதீத சத்தத்தால் காது கேளாண்மை ஏற்படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் பாதுகாப்பற்ற கேட்கும் நடைமுறைகளால் காது கேளாமைக்கு ஆபத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

 

Continue Reading

Business

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சிஸ்கோ!

Published

on

By

சிஸ்கோ வளர்ச்சிப் பகுதிகளில் கவனம் செலுத்தும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. நிறுவனம் தங்கள் தயாரிப்புகளுக்கான தேவை குறைந்து வருவதால், வணிக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது .

அமெரிக்காவை தளமாகக் கொண்ட தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, வளர்ச்சிப் பகுதிகளில் கவனம் செலுத்த அதன் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வணிக மறுசீரமைப்புக்கு நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்த பணிநீக்கங்களால் பாதிக்கப்படும் ஊழியர்களின் சரியான எண்ணிக்கையை சிஸ்கோ இன்னும் வெளியிடவில்லை. எவ்வாறாயினும், நிறுவனம் இன்னும் எண்களை முடிவு செய்து வருவதாகவும், பிப்ரவரி 14 அன்று நிறுவனம் தனது வருவாய் அழைப்பிற்கு தயாராகி வருவதால், இறுதி அறிவிப்பை இந்த வார தொடக்கத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் வெளியீட்டிற்கு நெருக்கமான ஒரு ஆதாரம் வெளிப்படுத்தியது.

இதற்கிடையில், சிஸ்கோ 2023 நிதியாண்டில் 84,900 பணியாளர்களைக் கொண்ட உலகளாவிய பணியாளர்களைக் கொண்டிருந்தது. வரவிருக்கும் வேலை இழப்பால் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கான தேவை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. நெட்வொர்க்கிங் உபகரணங்கள் தயாரிப்பாளர் அதன் முழு ஆண்டு வருவாய் மற்றும் இலாப கணிப்புகளை அதன் முந்தைய வருவாய் அழைப்பின் விளைவாக குறைத்துள்ளார். முதல் காலாண்டில் ஆர்டர்கள் மந்தமாக இருந்ததே பலவீனத்திற்கு காரணம் என்று நிறுவனம் கூறியது, “வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் சூழலில் தயாரிப்புகளை நிறுவி செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர்”.

பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. உலகளவில் செலவுகளைக் குறைத்து லாபத்தில் கவனம் செலுத்த வேண்டும். 2022 மற்றும் 2023 கடுமையான மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்ததாக இருந்தாலும், பணிநீக்கங்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை.

சமீபத்திய வாரங்களில் பணிநீக்கங்களைச் செயல்படுத்திய பிற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் அமேசான், ஆல்பாபெட் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை அடங்கும், அவை பல்வேறு பிரிவுகள் மற்றும் பிராந்தியங்களில் தங்கள் பணியாளர்களைக் குறைத்துள்ளன.

Continue Reading

Tech

ஆண்ட்ராய்ட்யில் சாட் ஜிபிடி ஆப் அறிமுகம் !

Published

on

By

உலக அளவில் தகவல் தொழில்நுட்ப புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறி தொழில்நுட்பத்தில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது இது மனிதர்களின் வேலையை எளிமையாக்குவதும், மனிதர்களை விட மிகவும் துல்லிய தன்மையுடன் தகவல்களை அளிப்பதுதான் மமுக்கிய நோக்கமாக இருக்கிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவை மக்கள் அனைவரும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் இணையத்தளம் மூலம் பயன்படுத்தி வந்த சாட் ஜிபிடியை தற்போது ஆண்ட்ராய்ட் செயலியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டுக்கான ChatGPT ஆப் இப்போது இந்தியா ,அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் பிரேசில் கிடைக்கிறது. பிற நாடுகளுக்கு விரைவில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading

Trending