Connect with us

செய்திகள்

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் – முதல்வர்

Published

on

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது.

‣ தங்கச்சி மடம் பகுகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடி துறைமுகம்.

‣ 7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்.

‣ 15,300 மீனவர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்ய பயிற்சி வழங்குதல்.

‣ காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதலுக்காக 14,000 பயனாளிகளுக்கு ரூ. 53 கோடியில் பயிற்சி வழங்கப்படும்.

‣ இந்த திட்டங்களை கண்காணிக்க ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உறுவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்-சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

“கட்சதீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம்.

ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை”

– சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

செய்திகள்

ஊழல்’ தான் – :,கூட்டணி அறிவிப்பு – கூட்டணி இடிபோல் இறங்கியுள்ளது!

Published

on

By

நேற்று அமித்ஷா சென்னை வந்து இஅதிமுயுடன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டு சென்றார்.இந்த கூட்டணி குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திமு கூட்டணி குறித்து தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்துள்ளனர் , ஆளாவர் கூறியிருந்தது

“அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். 2 ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

இதற்கு பதில் கூறும் விதமாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கூறியது “அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடிபோல் வந்து இறங்கியுள்ளது!

மக்களின் பேராதரவோடு அதிமுக கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி வாகை சூடும்” எதிர்கட்சி தலைவர் – எடப்பாடி பழனிசாமி 

Continue Reading

அரசியல்

தமிழக பாஜகவின் தலைவராக நைனார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகிறார்!

Published

on

By

பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்,கட்சியின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாகிறார். 

அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் , புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் இன்று (11-4-2025) வெள்ளிக்கிழமை பாஜகவின் மாநிலத்தின் தலைவர்  பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.  இவரை எதிர்த்து யாரும் போட்டியில்லாத நிலையில் போட்டியின்றி  நயினார் நாகேந்திரன் தேர்வாகிறார் 

 நயினார்  நாகேந்திரன் முதன்முதலில் 2001 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது (2001-06), அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டு போக்குவரத்து, தொழில்கள் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை வகித்தார். 2011 ஆம் ஆண்டு அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, ​​அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 2006 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அந்த இடத்தை இழந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்நயினார்நாகேந்திரன் பாஜகவில் சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் அந்தத் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.



Continue Reading

செய்திகள்

பா.ம.க.வின் தலைவர் நான் தான் – ராமதாஸ்!

Published

on

By

பா.ம.க.வின் தலைவர்  பொறுப்பை நானே கவனிக்க இருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதனை அறிவித்துள்ளார் .

மேலும் தற்போது தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

“தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது. 2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Continue Reading

Trending