Connect with us

செய்திகள்

CAA கால்வைக்க விடமாட்டோம்! ” – முதலமைச்சர் ஸ்டாலின்

Published

on

இன்னும் 7 நாட்களுக்குள் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது  எதிர்ப்பினை பதிவுசெய்துள்ளார்.

“ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே #CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA கால்வைக்க விடமாட்டோம்! ” – முதலமைச்சர் ஸ்டாலின்

https://x.com/mkstalin/status/1752603654350356712?s=20

செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.,ஆகிறார் கமல்ஹாசன்!

Published

on

By

முறுமலர்ச்சி திராவிட கழகத்தின் தலைவர் வைகோ, பாமக அன்புமணிராமதாஸ் உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க உள்ளது . இதில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. .ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

இதென்படி மக்கள் நீதி மயமத்தின் தலைவர் கமலஹாசன் எம்.பி ஆக பதவி ஏற்க உள்ளது உறுதி ஆகியுள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

கோவையில் கொட்டி தீர்க்கும் கன மழை

Published

on

By

கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது.பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.கேரளா மற்றும் கேரளாவின் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர் மழையும் வால்பாறை சின்கோனா 124 மில்லி மீட்டர், சோலையார் அணைப்பகுதியில் 99 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது.

மேலும் ஆனைமலையில் 28 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுகாவில் 43.20 மில்லி மீட்டரும், ஆழியார் பகுதியில் 60.20 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி மக்கினம்பெட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி தாலுகாவில் 41 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர் மழையும், சூலூர் பகுதியில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Continue Reading

செய்திகள்

+2ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!

Published

on

By

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம்

93.76%  2022

94.03%.  2023

94.56%  2024

95.03%    2025

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசு பள்ளிகள்; 91.94 சதவீதம்

அரசு உதவி பெறும் பள்ளிகள்: 95.71 சதவீதம்

தனியார் பள்ளிகள்: 98.88 சதவீதம்

மாவட்ட வாரியாக:

அரியலூர்: 98.82

ஈரோடு: 97.98

திருப்பூர்: 97.53

கோவை: 97.48

கன்னியாகுமரி: 97.01″

கணினி அறிவியலில் அதிகம் பேர் சென்டம்

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியலில் 9,536 பேர் 100 மதிப்பெண்கள்.

கணினிப் பயன்பாடுகள் – 4,208 பேர்

வேதியியல் – 3,181 பேர்

கணிதம் – 3,022 பேர்

வணிகவியல் – 1,624 பேர்

கணக்கு பதிவியல் – 1,240 பேர்

Continue Reading

Trending