Connect with us

இந்தியா

காமராஜர் 120வது ஆண்டு விழா! வலங்கைமான் வட்டார காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம் !

Published

on

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது ஆண்டு தினவிழா முன்னிட்டு ஆவூர் கடைவீதியில் காமராஜர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். வலங்கைமான் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆவூர் அரசு மேல்நிலை பள்ளி நடைபெற்ற கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மாணவ மாணவிகள் வெற்றி பெற்றத்தை பாராட்டி கல்வி வளர்ச்சி தினத்தில் நற்சான்றிதழ் பரிசுகள் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ் திருவாரூர் மாவட்ட தலைவர் திரு S.M.B. துரைவேலன் அவர்கள் தலைமையில் திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளார் திரு அன்பு.வே.வீரமணி அவர்கள் முன்னிலையில் வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் திரு M.N.ராமலிங்கம் அவர்கள் மற்றும் சேவதாள மாவட்ட தலைவர் திருK.பழனிவேல் அவர்கள் நன்னிலம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளார் திரு A.ரஹிம் அவர்கள் நன்னிலம் சட்டமன்ற சேவதாள பொறுப்பாளார் திருG.ஆறுமுகம் அவர்கள் வட்டார துணை தலைவர் திரு H.சாதிக் அவர்கள் வட்டார பொதுச்செயலாளார் திரு S. பிரபு வெங்கடேஷ் அவர்கள் ஆவூர் இளைஞர் காங்கிரஸ் திரு M. ஹாஜா நஜீபுதீன் அவர்கள் மாநில மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளார் திரு R.புவனேஸ்வரன் அவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க்கிறனார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்தியா

மக்களவை தேர்தல் 2024 தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது!

Published

on

By

அதிகாலை முதல் மக்கள் ஆர்வம் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 102 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது நாட்டின் 102 தொகுதிகளுக்கு இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு அடைகிறது முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு அடைகிறது

முதல் ஆளாக வாக்களித்த அஜித்

முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!

இதேப் போல எதிர்க்கட்சித் தலைவர் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார் . அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் வாக்களித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

 

Continue Reading

அரசியல்

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன்!

Published

on

By

“சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன் தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம்;

தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது;

பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது”

டெல்லியில் காங்.கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு  விஜயதரணிஎம்.எல்.ஏ பேட்டி

Continue Reading

இந்தியா

பெங்களூரு பந்த்: எது செயல்படாது , எது செயல்படும் :

Published

on

By

காவிரியில் தமிழகத்திற்கு நீர் பங்கீடு செய்ய வேண்டும் என்ற கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை செப்டம்பர் 26-ம் தேதி பெங்களூரு பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது.காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) பரிந்துரையின் பேரில், தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு 5,000 கனஅடி நீரை தொடர்ந்து திறந்துவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவுக்கு சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது .

தமிழகத்திற்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுவது குறித்த மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சில அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களால் செப்டம்பர் 26-ம் தேதி பெங்களூரு பந்த் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை பெங்களூரு பந்த் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த நாள் முழுவது வேலைநிறுத்தம் போக்குவரத்து மற்றும் சந்தைகள் உள்ளிட்ட பொது சேவைகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறும், ஆதரவின் அடையாளமாக ஒரு நாள் முழுவதுமாக நிறுவனங்களை மூடுமாறும், நகரின் பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விவசாயிகள் அமைப்புகள் மற்றும் கன்னட ஆதரவாளர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பரீட்சை சீசன் என்பதால் தங்கள் நிறுவனங்களை மூடுவதா இல்லையா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பெங்களூரு பந்த்: எது செயல்படாது , எது செயல்படும் :

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) மூலம் நம்ம மெட்ரோ சேவைகளின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

கால் டாக்ஸி :

ஓலா உபெர் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தன்வீர் பாஷா, பெங்களூரு பந்தில் தங்கள் ஈடுபாட்டையும் ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளார், அதாவது நகரத்தில் உள்ள ஆப் அடிப்படையிலான டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் விமான நிலைய வண்டிகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேஎஸ்ஆர்டிசி :

அரசு நடத்தும் கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) மற்றும் பெங்களூர் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) பாதிக்கப்படலாம்; அவர்கள் தங்கள் திட்டத்தைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை மதிப்பிட்ட பிறகு அவ்வாறு செய்வார்கள்.

ஏஐடியுசி ஆதரவு கேஎஸ்ஆர்டிசி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு பெங்களூரு பந்த் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்க முடிவு செய்துள்ளது, இதனால் பேருந்து சேவைகள் இயல்பாகவே பாதிக்கப்படும். இதுகுறித்து கேஎஸ்ஆர்டிசி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் எச்.வி.ஆனந்த சுப்பா ராவ் கூறுகையில், “பிஎம்டிசி டிப்போக்களில் இருந்து பேருந்துகள் எதுவும் எடுக்காமல் இந்த பந்த் வெற்றியடைவதை உறுதி செய்ய பெங்களூருவில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

உணவகங்கள் :

சில உணவகங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவையும் பெங்களூரு பந்த் உடன் இணைந்து மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது; ப்ருஹத் பெங்களூர் ஹோட்டல் சங்கத்தின் தலைவர் பி.சி.ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதிகாரிகள் உஷார் நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவக் கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் செப்டம்பர் 26-ம் தேதி திறந்திருக்கும் என்றும் பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் பி தயானந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

Continue Reading

Trending