உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி?
என்னுடைய இளம் வயது பள்ளிப் பருவத்தில் நான் ஐஏஸ் ஆக விருப்பப்பட்டேன்,ஆனால் ஐ டி ததுரையின் அசுர வளர்ச்சியால் என் மனம் மாறியது பின்னர் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்தேன். எனது வாழ்க்கையில் மாடலிங் மற்றும் சினிமா இணையும் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் இன்று நிஜமாகி இருக்கிறது தற்போது தமிழ்,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன். இந்த வாழ்கை எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. இது ஒரு நல்ல அனுபவம்.
மார்க்கெட்டிங் துறையில் இருந்து சினிமாவுக்கு மாறியது எப்படி ?
எம்.பி.ஏ படிக்கும் பொழுது மார்க்கெட்டிங் துறையை தேர்ந்தெடுத்து படித்தேன் பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது இன்போசிஸ்யில் நடந்த பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டேன் அதன் பின்னர் கொச்சியில் நடைபெற்ற மற்றோரு பேஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது பின்னர் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது பின்னர் மார்க்கெட்டிங் வேலையை விட்டு விட்டு இதில் இறங்கி விட்டேன்.
முதல் படம் முதல் அனுபவம் ?
முதன் முதலாக நடித்தப் படம் யுகன் இது தமிழ் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. காரணம் சினிமாவைப் பற்றி ஒன்னும் தெரியாத நிலையில் கேமரா அனுப்பவும் இல்லாமல் நடித்த முதல் படம்எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது சிறந்த அனுபவத்தை தந்தது.
நீங்கள் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளைக்கு என்ன குவாலிட்டி இருக்கணும் ?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கவேண்டும். நல்ல நண்பனாகவும், இருவரும் புரிந்து நடக்கும் மனிதராகவும் இருந்தாலே வாழ்கை எளிதாகயும்,அழகாகவும் அமையும்.
என்ன மாதிரியான கேரக்டர் பண்ணனும்னு ஆசை ?
உண்மையை சொல்லனும்னா இந்த மாதிரி கேரக்டர் பண்ணனும் என்று ஆசையெல்லாம் இல்லை. அனைத்து வகையான காதாபாத்திரதில் நடிக்க வேண்டும், முக்கியமாக கிராமப்புற கதாபாத்திரம், பக்கா திருநெல்வேலி பொண்ணு கேரக்டர் அதேசமயம் அதிரடி நாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இதனை தவிர்த்து பெண் ராபின்வுட் கேரக்டர் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
உங்களுடைய பிட்னெஸ் ரகசியம் (டையேட் பிளான் ) என்ன ?
எனக்கு எப்பொழுதும் பிட் ஆக இருப்பது பிடிக்கும், டயட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவள் நான். என்னைப் பொறுத் தவரையில் உடலுக்கான பிட்னெஸ் தாண்டி நம் மன நிம்மதிக்கான பிட்னெஸ் தேவை . ஓவ்வொரு முறையும் உடல்பயிற்சி செய்யும் பொழுது எனது மனம் நிம்மதியும் என்மேல் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த உணவையும் தொடமாட்டேன். அதிக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வேன், சைவம் மட்டுமே சாப்பிடுவேன் நன்றாக சாப்பிடுவேன் அதுக்கு ஏற்றாப்போல் உடல்பயிற்சி செய்வேன் இதுதான் எனது பிட்னெஸ் ரகசியம் .
யாருடைய ரியல் கதாபாத்திரத்தில்நடிக்க ஆசை?
நிஜ கதாபத்திரம்னா… பெண்களை மையப்படுத்தி, பெண்களின் வீரத்தைப் போற்றும் விதமாக இருக்கும் பாத்திரம், உதாரணமாக வேலுநாச்சியார் போன்ற பாத்திரத்தில் நடிக்க ரொம்ப ஆசை.
லைப்ல மறக்க முடியாத அனுபவங்கள் ?
காலா படத்தில் சுமார் 55 நாட்கள் நடித்த அனுபவம் என் வாழ்வில் மறக்கமுடியாதது. ரஜினி சார், ரஞ்சித் சார் மற்றும் பட குழுவினர்களுடன் இருந்த தருணம் மறக்க இயலாதது .
ரஜினி, அஜித்துடன் நடித்த அனுபவம் ?
என்னுடைய இளம் வயது கேரியரில் உலக சூப்பர் ஸ்டார்களான ரஜினி சார், மற்றும் அஜித் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பேருமே மிகப்பெரிய அனுபவசாலிகள் இவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன் ஒழுக்கம், வேலையில் ஆர்வம், வேலை மீது இருக்கும் பற்று இதை அனைத்தையும் தாண்டி நல்ல மனிதர்கள், மிகப்பெரிய உயரத்தில் இருந்தாலும் கீழே இருப்பவர்களை மதிக்க தெரிந்தவர்கள். இவர்களுடன் நடித்த அனுபவம் என வாழ்வில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
பிக் பாஸ் கற்றுக் கொடுத்த பாடம் ?
பிக் பாஸ் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் அதற்கு பிக் பாஸ்க்கு நன்றி சொல்லவேண்டும். அது மட்டும் இன்றி நிறைய ரசிகர்களைப் பெற உதவியாக இருந்தது. உலகம் முழுவதும் என்னைப் பற்றி அறிய வழி செய்தது. பிக் பாஸ் பொருத்தவரையில் எனக்கு’ கிடைத்த அனுபவம், எல்லோரும் நம்மை விரும்ப மாட்டார்கள் எல்லோரும் நம்மை வெறுக்க மாட்டார்கள் , நாம் செய்யும் விஷயம் சிலருக்கு சரியா இருக்கும், சிலருக்கு தப்பாக இருக்கும், இந்த உலகத்தில் எது சரி எது தப்புனு யாருக்கும் தெரியாது, ஓவ்வொருவரின் பார்வை வேறாக இருக்கும். செலிபிரிட்டியாக வளரும் பொழுது பல நிறை குறைகளைதாண்டிதான் வர வேண்டும் என்பதயும் கற்றுக் கொடுத்தது இந்த பிக் பாஸ்.