Connect with us

விளையாட்டு

மேற்கிந்தியத் தீவு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா !

Published

on

டிரினிடாட்டில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 2-1 என்ற தொடரை கைப்பற்றியது. ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷுப்மான் கில் 85 ரன்களும், ஹர்திக் பாண்டியா, 70 ரன்களும், இஷான் கிஷன் 77 ரன்களும், சஞ்சு சாம்சன் 50 ரன்களும் எடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் 351/5 ரன்களை எடுக்க உதவினார்கள்.

பின்னர் கடின இலக்கை எட்டிப்பிடிக்க இறங்கிய மேற்கிந்தியத் தீவு அணி ஆரம்பம்முதலே தடுமாற்றமான ஆட்டத்தை ஆடியத. முகேஷ் குமார் மற்றும் தாகூர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தாகூர் சிறப்பாக பந்துவீச்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் குமார் 3 விக்கெட்டும், குலதீப் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகைச் செய்தனர்.

ஏற்கனவே டெஸ்ட் போட்டியை 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியிலும் 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது . இதனை அடித்து டி20 போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்க இருக்கிறது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

மும்பை இந்தியன்ஸ் தனது மூணாவது வெற்றியைப் பதிவுசெய்தது !

Published

on

By

பிஎள் 2025இன் 33 வது போட்டியான மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின. டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினர். அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 40 ரன்கள்ளும் , டிராவிஸ் ஹெட் 15 பந்துகளில் 28 ரன்கள்ளும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து 6.4 ஓவர்களில் 52 ரன்கள் சேர்த்தனர். பின்னர், நிதீஷ் ரெட்டி (19), மற்றும் ஹென்ரிக் க்ளாசன் 37 எடுத்து 166 ரன்கள் எடுக்க உதவினார் . பிட்ச்ன் தன்மை சிறிது மெதுவாக இருந்த காரணத்தினால் 162 என்ற ரன்கள் போதுமானதாக கருதப்பட்டது .

166 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரெக்கெல்ட்டன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 26(16) எடுத்து வெளியேறினார் . பின்னர் ரெக்கெல்ட்டன்ஜோடி சேர்ந்த ஜாக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார் . ஜாக்ஸ் 36. ரெக்கெல்ட்டன் 31 , சூரியகுமார் 26 ரன்கள் எடுத்தனர் மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 வர்களில் 167 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகள் பெற்று 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதே மைதானத்தில் வருகின்ற 20ஆம் தேதி சென்னை அணியை எதிகொள்கிறது மும்பை இந்தியன்ஸ் ஆணி .

Continue Reading

Sports

மீண்டும் தோல்வி ! கேப்டன் மாறிய பின்னும் தொடரும் சோகம் !

Published

on

By

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கே கே ஆர் எதிரான ஆட்டத்தில் படுதோல்வி அடைந்து தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 103/9 ரன்கள் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களில் இந்த இலக்கை துரத்திப் பிடித்தது. ஐபிஎல் 2025ல் ஆறு போட்டிகளில் சிஎஸ்கேவின் ஐந்தாவது தோல்வி இதுவாகும், மேலும் அந்த அணி 10 அணிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சொந்த மண்ணில் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை.

 

Continue Reading

நிகழ்ச்சிகள்

தேசிய சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கதை தட்டி சென்ற கோவை மாணவி

Published

on

By

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.மார்ச் 28 முதல் 31,2025 வரை ஹரியானாவில் நடைபெற்ற 21வது மூத்த, ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் எலீட் டவுன்ஹில் (Downhill) பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் திலோத்தம்மா.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று சித்தாபுதூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் திலோத்தம்மா மற்றும் அவர் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் கலந்துகொண்டனர்.இந்த அதிக ஆபத்தான டவுன்ஹில் பிரிவில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் வீராங்கனை இவர் தான். இந்த பிரிவு மிகவும் கடுமையானது; நாட்டில் ஏறத்தாழ 3-4 பெண்கள் மட்டுமே இதில் பங்கேற்கிறார்கள், என அவரின் பயிற்சியாளர் கோகுல் கிருஷ்ணன் கூறினார்.

இந்த டவுன்ஹில் போட்டி ஹரியானாவின் மோர்னி ஹில்ஸ் எனும் பரந்த மலைப்பகுதியில் மிகவும் சவாலான பாதையில் நடைபெற்றது. வழக்கமான 1 கி.மீ பாதையைவிட இந்த வருடம் 2 கி.மீ தூரம் கொண்ட டிராக், வீரர்களின் திறமைக்கு சவாலாக விடும் விதத்தில் இருந்தது என திலோத்தம்மா கூறினார்.மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தன்னுடன் போட்டியிட்ட நிலையில், திலோத்தம்மா 5 நிமிடம் 45 வினாடிகளில் அந்த 2 கி.மீ. தூரத்தை கடந்து முதலிடம் பெற்று தங்கபாதகத்தை தட்டிச்சென்றார்.

“ டவுன் ஹில் சைக்ளிங் போட்டிகளில் கடுமையான பாதைகள் இருக்கும். அதை கடப்பது பற்றி முடிவுகளை நாம் சிறிது நேரத்திலேயே எடுக்கவேண்டும். எனவே இந்த போட்டிகளில் கலந்துகொள்ள மிகுந்த கவனமும் தைரியமும் தேவைப்படுத்தியது,” என்கிறார் திலோத்தம்மா.வேலூரைச் சேர்ந்த இவரை இவரின் தாய் மட்டுமே உடன் இருந்து கவனித்துக்கொள்கிறார். சைக்ளிங் மீது பல போட்டிகளில் கலந்து கொண்ட இவர் டவுன் ஹில் போட்டிக்காக கடந்த ஒரு ஆண்டு காலமாக பயிற்சி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் மலைபகுதிகளில் பயிற்சி செய்ய கட்டுப்பாடுகள் இருப்பதால், தனியார் எஸ்டேட்டில் அனுமதி பெற்று பயிற்சி மேற்கொண்டதாக அவரும் அவரின் பயிற்சியாளரும் தெரிவித்தனர்.

தன்னுடைய வெற்றிக்கு தன் தாய், பயிற்சியாளர் கோகுல், தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன், மற்றும் கோவை நேரு கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. கிருஷ்ணகுமார் ஆகியோரின் ஆதரவு காரணம் என கூறுகிறார்.“தமிழ்நாடு சைக்கிள் அசோசியனில் இருந்து புள்ளிகள் கிடைத்ததும், நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற வாய்ப்புள்ளது. போதிய ஆதரவு கிடைத்தால், உலக மேடைகளில் வெற்றி பெற்று என் மாநிலத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன்,” என்கிறார் திலோத்தம்மா.

தன்னுடைய சைக்கிளைப் பற்றிக் கூறும் போது,“சுயமாக ஒரு டவுன்ஹில் சைக்கிள் வாங்க முடியவில்லை. சர்வதேச போட்டிக்கு தேவையான ஆரம்பநிலை சைக்கிள் ரூ.2-3 லட்சம் ஆகும். அதுவே நவீன வகை சைக்கிள் வாங்க ரூ.7-8 லட்சம் வரை செலவாகும். அதை வாங்க இயலவில்லை. இந்த முறை என் பயிற்சியாளர் தன்னுடைய சைக்கிளை எனக்காக கொடுத்தார். இந்த விளையாட்டில் மேலும் உயரம் தொட நான் ஸ்பான்சர்களின் ஆதரவை நாடுகிறேன்” என்கிறார்.

Continue Reading

Trending