Connect with us

நிகழ்ச்சிகள்

சுதந்திர தின விழாவில் பள்ளிக்கு மின்விசிறி மற்றும் கம்ப்யூட்டர் வழங்கிய லயன்ஸ் கிளப்!

Published

on

இந்திய சுதந்திரம் அடைந்து சுமார் 76 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்று ஆகஸ்ட் 15 நாடுமுழுவதும் சுதத்ந்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி டெல்லியில் நமது தேசியக்கொடியை ஏற்றினர். அதேபோல தமிழ்நாட்டில் முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி விழாவினை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாண்டியன் மெட்ரிக் பள்ளி:

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பாண்டியன் மெட்ரிக் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா கொடியேற்றி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் லயன்ஸ் கிளப் சார்பாக மின்விசிறி மற்றும் கம்ப்யூட்டர் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப் ஆப் களஞ்சியம் தலைவர் திரு.சரவணன் அவர்கள் கொடியேத்தி விழாவினை சிறப்பித்தார். மேலும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் திரு.கண்ணன், திரு.ராமமூர்த்தி, திரு.ராஜேந்திரன், திரு.ஞானசேகர், திரு.ராகவேந்திரன்,திரு.துரைசாமி, திரு.கிரண் விஜய்,திரு.ரங்கராஜ், திரு.சுரேஷ் பாபு,திரு.பிரகாஷ்குமார் , திருமதி.சௌமிய பிரகாஷ் குமார், திரு.சக்தி வர்ஷன், திரு.சக்தி ஹர்சன் மற்றும் பலர்பலரும் கலந்துக் கொணடு விழாவினை சிறப்புச் செய்தனர் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

மனதை அலைபாய செய்யும் மொபைல் , சீரியல், சினிமாகளில் மாணவர்கள் மூழ்கிவிடக்கூடாது – தாமு !

Published

on

By

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அவர்களின் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து அவர்களுக்கு புதிய பாதையில் பயணிக்க வழிகாட்டியாக இருந்து வருகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் நடிகர் தாமு அவர்கள் . இதுவரை, பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில், தனது அற்புதமான சிந்திக்கும் உரையை வழங்கி ,ஆழ்மன பயிற்சியை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். இதன் தொடர் நிகழ்வாக கோவை அவிநாசி, அ.குரும்பபாளையம், வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி சார்பில், கொங்கு கலையரங்கில் , ‘தேர்வைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களிடம் தனது உரையை வழங்கினார் நடிகர் தாமு .

நடிகர் தாமு பேசியது :

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவதற்கும், மதிப்பெண் குறைவதற்கும், தேர்வின் மீது பயம் வருவதற்கும் காரணம், மாணவ, மாணவியரின் இயலாமையோ, அறியாமையோ அல்ல; நேரத்தை வீணடிக்க செய்து, மனதை அலைபாய செய்யும் மொபைல் போன்கள், ‘டிவி’ சீரியல் கள், சினிமாக்களில் அவர்கள் மூழ்கிவிடுவது தான்.

அவற்றால் ஏற்படும் மனச்சிதைவுக்கு மருந்து கிடையாது; மாறாக, மன மாற்றமே முக்கியம். ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை உள்வாங்கி, ஆழ்மனதில் நிறுத்திக் கொள்வதால், வெற்றி சாத்தியமாகும். வலைதளங்களில் மனதை சிறைபடுத்தி, அடிமைப்பட்டு கிடக்கும் நிலையில் இருந்து வெளியே வர வேண்டும்.

இளைஞர்களின் ஆற்றல் அதிகமுள்ள நாடுகளை பொறுத்தவரை, ஜப்பானில் 53.8 சதவீதம், அமெரிக்காவில், 58.8, சீனா, 54.9, ரஷ்யா, 59.1 சதவீதம் என்ற அளவில், இளைஞர்களின் ஆற்றல் உள்ளது. அதே நேரம், இந்தியாவில், 64.5 சதவீதம் இளைஞர்களின் ஆற்றல் உள்ளது. இந்த ஆற்றலில், மாணவர்களும் அடங்கியுள்ளனர்.

மொபைல் போன்களில் விதம், விதமான செயலிகள் வழியாக, மாணவர்களை அடிமைப்படுத்தி, அவர்களின் மனதை பாழ்படுத்தும் செயல் என்பது, வெளிநாட்டு சதி என்பதை உணர வேண்டும்.

Continue Reading

கோயம்பத்தூர்

வி வொண்டர் வுமன் விருதுகள் 2023: பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்!

Published

on

By

கோயம்புத்தூரைச் சேர்ந்த வீ வொண்டர் வுமன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கற்பகம் அகாடமியுடன் இணைந்து , பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 14 பெண் சாதனையாளர்களை ஆகஸ்ட் 26 அன்று ஜென்னிஸ் ரெசிடென்சியில் வீ வொண்டர் வுமன் விருதுகள் வழங்கி கவுரவித்தது.

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், Mrs.இந்தியா எர்த் 2018 வெற்றியாளர் ரிங்கி ஷா, அருண் , அரவிந்த் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்கள் விருதுகளை வழங்கினர்.பத்மஸ்ரீ விருது பெற்ற ஆர்.முத்துக்கண்ணம்மாள், மூத்த சதிர் நடனக் கலைஞர், வீ வொண்டர் வுமன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

25000 கர்ப்பிணிப் பெண்களுக்கு இயற்கையான முறையில் பிரசவம் செய்ய வெற்றிகரமாக உதவிய GKNM மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் அமுதா கிரிதர் வீ வொண்டர் வுமன் ஐகான் விருதுடன் கௌரவிக்கப்பட்டார்.

அனைத்து விருது பெற்றவர்களும் துல்லியமான தேர்வு செயல்முறைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டனர், மேலும் அவர்களின் துணிச்சலான செயல்கள் மற்றும் அற்புதமான சாதனைகள் மூலம் சமூகத்தை ஊக்கப்படுத்தியதற்காக கௌரவிக்கப்பட்டனர்.

 

 

 

Continue Reading

Uncategorized

கோவையில் ஸ்டார்ட் அப் திருவிழா !

Published

on

By

ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் கோவையில் கோடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. புத்தொழில் தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவில், சுமார் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் புதுத்தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுகத் தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெற உள்ளது.

இதில், முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், TRB ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறினார்.

இதனை தொடர்ந்து, ஸ்டார்ட் தமிழ்நாடு இயக்குநர் சிவராஜா ராமநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்துகின்ற மாபெரும் விழாவில் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வில், தொழில்முனைவோர்கள் – முதலீட்டாளர்கள், தொழில் முனைவு வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரையாடவும் அரங்குகள் அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும். இவ்வாறு கூறினார்.

Continue Reading

Trending