Connect with us

செய்திகள்

CAA அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது! – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

Published

on

CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.

சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்.

உலகம்

IMAGE SEARCH என்ற அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம்!

Published

on

By

செய்திகளை அதிகம் பரவப்படும் செயலியாக இருப்பது wahtsapp . தினமும் பல கோடி செய்திகள் wahtsapp அனுப்பப்படுகிறது. இதனால் பல புது அம்சத்தை அன்றாடம் வெளியிட்டு வருகிறது wahtsapp நிறுவனர் . தற்போது புது அப்டேட் ஆக வர இருக்கிறது . போலிச் செய்திகள், வதந்திகளை அடையாளம் காணும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் (WhatsApp) கொண்டுவர உள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கிறது.

தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இமேஜ் சர்ச் (IMAGE SEARCH] அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்ய உள்ளது மெட்டா!. இந்த அம்சம் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் போட்டோக்களை சரிபார்க்கும் வழிமுறையை வழங்குகிறது.

இதன்மூலம் வாட்ஸ்அப்பில் வரும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதா, தவறாக சித்தரிக்கப்பட்டதா எனக் கண்டறியலாம். மேலே இருக்கும் 3 புள்ளியை கிளிக் செய்து அம்சத்தை பயன்படுத்துக்கொள்ளலாம்.

Continue Reading

செய்திகள்

10,11,மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை!

Published

on

By

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் 10,11,மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை கோவையில் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டார்.

 

பொதுத்தேர்வு : 

12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 3 -25 ஆம் தேதி வரை நடைபெறும்.

11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 5 – 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 28 – ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும்.

 

 

Continue Reading

ஆன்மிகம்

11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!! பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

Published

on

By

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!! கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி கோயிலில் அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், விஜயதசமி தினத்தன்று காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.

மலைக் கோயிலின் படிப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் என மூன்று வழிப் பாதைகளில் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 11 மணிக்குப் பிறகு வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும் போல தரிசனத்துக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Trending