Connect with us

செய்திகள்

இ- பெஹின்ட் முக்கிய செய்திகள்!

Published

on

UPDATED @ 11:45AM  |  19 மே 2024   

முக்கிய செய்திகள்

  • 5ம் கட்ட தேர்தல் – நாளை வாக்குப்பதிவு உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்..

  • கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் 43 பேர் பலி

    கேரளாவில் டெங்கு, மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை உள்பட நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

  • கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் எச்சரிக்கை

    கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும். பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் எச்சரிக்கை.

  • பொள்ளாச்சி அடுத்த அட்டகட்டியில், 16வது கொண்டை ஊசி வளைவில், பாறை விழுந்துள்ளதால் தற்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
  • சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்தினால் புற்றுநோய் உண்டாகும்! ICMR எச்சரிக்கை!

செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.,ஆகிறார் கமல்ஹாசன்!

Published

on

By

முறுமலர்ச்சி திராவிட கழகத்தின் தலைவர் வைகோ, பாமக அன்புமணிராமதாஸ் உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்க உள்ளது . இதில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. .ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

இதென்படி மக்கள் நீதி மயமத்தின் தலைவர் கமலஹாசன் எம்.பி ஆக பதவி ஏற்க உள்ளது உறுதி ஆகியுள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

கோவையில் கொட்டி தீர்க்கும் கன மழை

Published

on

By

கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டு உள்ளது.பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.கேரளா மற்றும் கேரளாவின் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர் மழையும் வால்பாறை சின்கோனா 124 மில்லி மீட்டர், சோலையார் அணைப்பகுதியில் 99 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது.

மேலும் ஆனைமலையில் 28 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுகாவில் 43.20 மில்லி மீட்டரும், ஆழியார் பகுதியில் 60.20 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி மக்கினம்பெட்டியில் 80 மில்லி மீட்டர் மழையும், பொள்ளாச்சி தாலுகாவில் 41 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர் மழையும், சூலூர் பகுதியில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Continue Reading

செய்திகள்

+2ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!

Published

on

By

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம்

93.76%  2022

94.03%.  2023

94.56%  2024

95.03%    2025

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசு பள்ளிகள்; 91.94 சதவீதம்

அரசு உதவி பெறும் பள்ளிகள்: 95.71 சதவீதம்

தனியார் பள்ளிகள்: 98.88 சதவீதம்

மாவட்ட வாரியாக:

அரியலூர்: 98.82

ஈரோடு: 97.98

திருப்பூர்: 97.53

கோவை: 97.48

கன்னியாகுமரி: 97.01″

கணினி அறிவியலில் அதிகம் பேர் சென்டம்

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியலில் 9,536 பேர் 100 மதிப்பெண்கள்.

கணினிப் பயன்பாடுகள் – 4,208 பேர்

வேதியியல் – 3,181 பேர்

கணிதம் – 3,022 பேர்

வணிகவியல் – 1,624 பேர்

கணக்கு பதிவியல் – 1,240 பேர்

Continue Reading

Trending