ஹைதராபாத் நகரத்தை தலைமையிடமாக கொண்டு மின்சார 2 சக்கர வாகனங்களையும், அதற்கான நவீன பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கிவரும் பியூர் நிறுவனம் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் புது தயாரிப்பான ‘பியூர்-பவர்’ எனும் மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.
வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கான அதிநவீன மின் சேகரிப்பு அமைப்புகளை ‘பியூர்-பவர் ஹோம்’ மற்றும் ‘பியூர்-பவர்’ கமர்சியல் என தனித்தனி தயாரிப்புகளாக இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
‘பியூர்-பவர்’ கமர்சியல் எனும் தயாரிப்பு மூலம் அதிகம் மின்சாரம் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் அமைப்புகள் எந்தவித இடைநிற்றலும் இன்றி இயங்கும். மேலும் இதனால் தொழில்நிறுவனங்கள் தங்களின் மின்சார பயன்பாட்டை நிலைப்படுத்தவும், ‘பீக் லோட்’ கட்டணங்களையும் பெருமளவு குறைத்திடவும் முடியும்.
‘பியூர்-பவர்’ தயாரிப்புகள் மிகப்பெரும் அளவில் மின்சார ஆற்றலை சேமித்துவைக்க கூடிய அதிநவீன பேட்டரிகளை கொண்டவை என்பதால் அதனால் மின்சாரத்தை அதிகம் சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த கட்டமைப்பில் 5ம் தலைமுறை மின் அமைப்புகள் உள்ளன. இதில் பி.சி.எம். (Nano Phase Change Material) எனும் தனித்துவம் கொண்ட ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த தயாரிப்பில் வெப்பநிலை மேலாண்மை மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இதனால் இந்த தயாரிப்புகளின் செயல்பாடு மற்றும் வாழ்நாள் பல காலத்துக்கு நீடிக்கும்.
குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல், 100% தடையிலாதுஇயங்குவதை உறுதி செய்ய, இதில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பு தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும். மேலும் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் முன்பாகவே அறிந்துகொள்ள முடியும்.
கோவையில் இந்த தயாரிப்புகளை பியூர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் நிஷாந்த் டோங்கரி மற்றும் நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுராம் அர்ஜுனன் உடன் இனைந்து அறிமுகம் செய்துவைத்தார்.
இதுகுறித்து டாக்டர் நிஷாந்த் கூறுகையில், “இந்திய தொழில்நிறுவனங்களின் மின்சாரம் தொடர்பான முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே பியூர் நிறுவனத்தின் குறிக்கோள். அதை மனதில் வைத்தே பியூர் பவர்-ரை உருவாக்கியுள்ளோம். குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான மூலதன செலவு மற்றும் செயல்பாட்டு செலவு குறையும் படி உருவாக்கப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டார்.
‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு அதன் சேமிப்பு அளவை 25 KVA முதல் 100 KVA வரை அதிகரிக்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி ஒரு தொழில்நிறுவனத்தில் உள்ள மின்சாரம், டீசல் ஜெனெரேட்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட கட்டமைப்புகள் ஆகிய அனைத்துடனும் தானாகவே இனைந்து செயல்படக்கூடிய திறனையும் கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட அமைப்பாக இது இருப்பதால் ஒரு புறம் தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு அவசியமான, மின்சாரம் அதிகம் இழுக்கக்கூடிய கருவிகளை தொடர்ந்து இயக்கிக்கொள்ள முடியும், மற்றொரு பக்கம் மின்சாரத்தை சேமித்துக்கொண்டு இருக்கவும் முடியும்.’பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்கள் ‘பீக் ஹவர்’ இல்லாத நேரங்களில் மின்சாரத்தை சேகரித்து வைத்து கொண்டு, பீக் ஹவர் நேரங்களில் சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் மின் கட்டணம் தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவு மிச்சமாகும்.
டாக்டர் ரகுராம் அர்ஜுனன் பேசுகையில், “நமது நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்பான ‘பியூர் பவர்’, வணிக செயல்பாடுகளில் இதற்கு முன்பு நாம் காணாத மாற்றங்களையும், அந்த நிறுவங்களுக்கு கணிசமான, மிகவும் தேவையான மின் கட்டண சேமிப்பை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு வகையான புதுமை படைப்பு” என பாராட்டிப் பேசினார்.
பியூர் நிறுவனம் தொழில்நிறுவங்களுக்கு மட்டுமில்லாது இல்லங்களுக்கு தேவையான மின் சேகரிப்பு தயாரிப்புகளை பியூர் பவர் ஹோம் என்ற பெயரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.