Connect with us

Sports

அஸ்வின் சூழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி !

Published

on

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை துவங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் இருவரையும் வெளியேற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் போத்தமும், தந்தை-மகன் ஜோடியான லான்ஸ் மற்றும் நியூசிலாந்தின் கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஆகியோரை இந்த பட்டியலில் உள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் இதே ஜோடியின் விக்கெட்டையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் இருவரையும் வெளியேற்றிய பந்துவீச்சாளர்கள்

இயன் போத்தம் – லான்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்

வாசிம் அக்ரம் – லான்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்

மிட்செல் ஸ்டார்க் – ஷிவ்நரைன் மற்றும் டாக்னரைன்

சைமன் ஹார்மர் – ஷிவ்நரைன் மற்றும் டாக்னரைன்

ரவிச்சந்திரன் அஸ்வின் – சிவனரைன் மற்றும் டாக்னரின்

நேற்று துவங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவு அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 150 ரங்களுக்கு ஆட்டம் இழந்தது. அறிமுக வீரர் அலிக் அத்தானாஸ் 47 ரன்கள் அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தார் . இந்திய அணி சார்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளையும் சிராஜ் மற்றும் தாகூர் தலா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை எடுத்து. ரோஹித் சர்மா 30 ரன்களுடனும் ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

ஐ.பி.எல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பு !

Published

on

By

ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் 2025 நடப்பு சீசன் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ .

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க வாய்ப்பு

தேதி மற்றும் இடங்கள் தேர்வு செய்யப்படும் மீதமுள்ள போட்டிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – பிசிசிஐ வட்டாரம்.

 

Continue Reading

Sports

ஒரு வழியாக வெற்றிப் பெற்ற சிஎஸ்கே !

Published

on

By

தொடர் தோல்விகளில் தத்தளித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த பில் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்து ரஹானே 48 ரன்களும் ரசூல் -38 ரன்களும் எடுத்தனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நூர் அஹமது 4 விக்கெட் எடுத்தார் .

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் 60/5 ரன்களை எடுத்து தோல்வியை நோக்கி சென்றது. பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ப்ரேவிஸ் 52 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார் அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய சிவம் துபே  45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் . தொடர் முழுவதும் தனது சொதப்பலான ஆட்டத்தினால் ரசிகர்களை வெறுப்பேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய வெற்றி ஆறுதலாக இருந்துள்ளது .

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டதுபோல் கண்டிப்பாக உணரும். பவர் பிளேயிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘ன் ஐந்து விக்கெட்டுகள் இழக்கச் செய்திருந்தாலும், நடு ஓவர்களில்சரியான திட்டம் இல்லாதது தான் தோல்விக்கு காரணமாக இருக்கிறது. இப்போது, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, அவர்கள் பிற போட்டிகளில் விளைவுகளை நம்ப வேண்டியுள்ளது. அதேசமயம், மீதி உள்ள போட்டிகளில் வென்றே ஆகவேண்டிய நிலைக்கு மாறியுள்ளனர்.

Continue Reading

Sports

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வு !

Published

on

By

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் ஷர்மா அறிவித்துள்ளார் . ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அறிவிப்பு. இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும்  நிலையில் ரோகித் ஷர்மா ஓய்வு அறிவிப்பு .

அறிக்கையில் அவர் தெரிவித்தது

” அனைவருக்கும் வணக்கம். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை  பகிர விரும்புகிறேன். வெள்ளை உடையில் என் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது ஒரு பெரும் பெருமை. கடந்த ஆண்டுகளில் நீங்கள் அளித்த  அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன்,” என்று ரோகித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா ஓய்வை அடுத்து எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய கேப்டனுடன் களமிறங்குகிறது இந்தியா.

Continue Reading

Trending