Sports

அஸ்வின் சூழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி !

Published

on

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை துவங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் இருவரையும் வெளியேற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் போத்தமும், தந்தை-மகன் ஜோடியான லான்ஸ் மற்றும் நியூசிலாந்தின் கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஆகியோரை இந்த பட்டியலில் உள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் இதே ஜோடியின் விக்கெட்டையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் இருவரையும் வெளியேற்றிய பந்துவீச்சாளர்கள்

இயன் போத்தம் – லான்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்

வாசிம் அக்ரம் – லான்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்

மிட்செல் ஸ்டார்க் – ஷிவ்நரைன் மற்றும் டாக்னரைன்

சைமன் ஹார்மர் – ஷிவ்நரைன் மற்றும் டாக்னரைன்

ரவிச்சந்திரன் அஸ்வின் – சிவனரைன் மற்றும் டாக்னரின்

நேற்று துவங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவு அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 150 ரங்களுக்கு ஆட்டம் இழந்தது. அறிமுக வீரர் அலிக் அத்தானாஸ் 47 ரன்கள் அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தார் . இந்திய அணி சார்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளையும் சிராஜ் மற்றும் தாகூர் தலா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை எடுத்து. ரோஹித் சர்மா 30 ரன்களுடனும் ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Click to comment

Trending

Exit mobile version