ஆரோக்கியம்

எப்பவுமே எதிர்மறை சிந்தனையில் இருப்பவரா ?

At vero eos et accusamus et iusto odio dignissimos ducimus qui blanditiis praesentium voluptatum deleniti atque corrupti.

Published

on

Photo: Shutterstock

நம்முடைய எதிர்மறை எண்ணங்களால் பல நேரங்களில் மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம் தொலைத்திருப்போம். அந்த நாளில் எத்தனையோ நன்மைகள் நமக்கு நடந்திருந்தாலும், ஒரு சின்ன கசப்பான விஷயத்தை அன்று முழுதும் நினைத்துக் கொண்டிருப்போம்.இந்த எதிர்மறையான எண்ணங்க. இப்படிப்பட்ட எதிர்மறை மனநிலையினால் வரும் தீமைகளில் இருந்து எப்படி வெளிவருவது என்பதைக் காணலாம்.

ஒவ்வொருவருக்கும் இருக்கும் வழக்கமான கவலைகளிலிருந்து எதிர்மறையான சிந்தனையை வேறுபடுத்துவது சவாலாக இருக்கும். நிதிச் சுமைகள் அல்லது, வருத்தமளிக்கும் நிகழ்வைப் பற்றி வருத்தப்படுவது இயல்பானது. அந்த உணர்வுகள் திரும்பத் திரும்ப மற்றும் பரவலாக வரும் போது தான், பிரச்சனைகள் எழுகின்றன .

எல்லோரும் எதிர்மறையான எண்ணங்களை மீண்டும் மீண்டும் அனுபவிக்கும் அதே வேளையில், வேலை, படிப்பு மற்றும் அன்றாட செயல்பாடுகளில் இந்த சிந்தனை தலையிடுகிறது. மனச்சோர்வு, கவலைக் கோளாறுகள், ஆளுமைக் கோளாறுகள் உள்ளிட்ட பல பல பிரச்சனைகளுக்கு இந்த எண்ணங்களே காரணமாக அமைக்கின்றன.   எதிர்மறையான சிந்தனை உங்கள் மன  ஆரோக்கியத்திற்கும்  உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை அறிய வேண்டும்.  இந்த நிலை தொடர்ந்தால்  உங்களால் இதில் இருந்து   விடுபடுவது இயலாத காரியமாக போய்விடும்.அதுமட்டும்  இல்லாமல்  அடுத்து நமக்கு நடக்கப்போகும் நல்ல நிகழ்வை நாம் அனுபவிக்க முடியாமல் செய்துவிடும். நமக்கு நடக்கும்  சுப காரியங்களை எண்ணி கனவு கண்டு அந்தக் கனவுகளை கொண்டாடினாலே எதிர்மறை சிந்தனைகளில்  இருந்து வெளிவரலாம்.

அதாவது உதாரணமாக நீங்கள் வீடு வாங்கும் ஆசையில் இருக்கிறீகள் என்றால்உங்கள் கனவு இல்லத்தை நினைத்துக்கொண்டு அதில் மகிழ்ச்சியாக வாழ்வது போல கனவு காணுங்கள் உங்கள் எதிர் மறை சிந்தனைகள் விலகுவதோடு, உங்கள் கனவு நினைவாகும்.பல சாதித்த பெரிய மனிதர்கள் அனைவரும் தங்களின் எதிர் மறையான கருத்துக்களைப் புறம் தள்ளி தங்கள் கனவுகளோடு நிஜ வாழ்க்கையே வாழ்ந்து
மகிழ்கின்றனர். அதனால தான் வாழ்க்கையில் லட்சியங்களை அடைய முடிவதாகக் கூறுகின்றனர்.பலரும் தங்களது நினைவுகளை ஒழுங்குப் படுத்தி பல நோய்களில் இருந்து தப்பித்து வந்துள்ளனர்.

எதிர்கால, நிகழ்கால கவலை

மக்கள் பெரும்பாலும் தெரியாதவற்றைப் பற்றி அஞ்சுகிறார்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கவலை அதிகமாக இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயலாகும். இந்த எதிர்மறை எண்ணங்களை விட்டு விடுவதற்கான திறவுகோல், எதிர்காலத்தில் நீங்கள் எதை மாற்றலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருப்பதை ஏற்றுக் கொள்வதும் அதற்கு பதிலாக நிகழ் காலத்தில் கவனம் செலுத்த முயற்சிப்பதும் சிறந்ததாகும். நிகழ்காலத்தைப் பற்றிய கவலைப்படுத்தல், அதாவது மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், நாம் வேலையை நன்றாக செய்கிறோமா, வீட்டிற்குச் செல்லும் வழியில் போக்குவரத்து எப்படி இருக்கும் என தேவை இல்லாததைப் பற்றிக் கவலைப்படுகிறோம்.நாம் நினைத்தாலும் நினைக்காமல் இருந்தாலும் நடந்தே தீரும் என்பதை நாம் அறிய வேண்டும்.

எதிர்மறை சிந்தனையை நிறுத்துவது

எதிர்மறையான சிந்தனை வாழ்க்கைக்கு நீங்கள் அடிபணிய வேண்டியதில்லை.சில அடிப்படை எதிர் உத்திகள் மூலம், எதிர்மறை  எண்ணங்கள் அனைத்தையும் அகற்ற கற்றுக்கொள்ளலாம். எதிர் மறையான எண்ணம் ஏற்படும் பொழுது உங்கள்   சிந்தனைகளை உங்களுக்கு   பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள் அல்லது நடையியற்சி, பிடித்தமான பாடல்  கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள், அல்லது உங்கள்  நண்பர்களுக்கு போன் செய்து  உரையாடுங்கள். உங்களுக்குள் இருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் விலக வழிவகைச் செய்யும்.

தியானமே சிறந்த மருந்து

என்றும் நிம்மதியுடன் வாழ எதிர்மறை தீய சக்தி உங்களிடம் இருந்து முழுவதும் விலகிட தியானம் சிறந்ததாக அமைகிறது. தியானத்தினால் மன அமைதி கிடைக்கப் பெறுகிறது அது மட்டுமில்லாமல் மனம் அலைபாய்வதை தடுத்து நம் மனம் ஓர் சிந்தனையில் பயணிக்க பெரிதும் உதவுகிறது.
இது நம் மனதுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்து மன நோயில் இருந்து பாதுகாத்து நீண்ட ஆயுளும் , நல்ல ஆரோக்கியமும் கிடைக்க முக்கிய பங்காற்றுகிறது .

தேவையற்ற சிந்தனைகளப் புறம் தள்ளி! நமது
கனவை நினைவாக்கி ஆரோக்கியமான
வாழ்வை பெறுவோம்!

Click to comment

Trending

Exit mobile version