டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் தனது ‘லாங்வெஜ் மாடலை’ விரைவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. தற்போதுஅது, இந்தியா உட்பட 180 நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்து விட்டததுள்ளது. ChatGPT க்கு போட்டியாக இப்போது 180+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த வசதி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்துடன் கூடுதலாக, இப்போது கொரிய மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் கிடைக்கிறது. விரைவில் 40+ மொழிகளுடன் இது பெரும் புரட்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு ( artificial intelligence) (AI )
நவீன உலகின் முக்கிய செய்தியாகப் பார்க்கப்படுவது செயற்கை நுண்ணறிவு (AI) என்ற புதிய டெக்னாலாஜியே தான் . அதிகரித்து வரும் நிறுவனங்கள் பல தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் வேலைகளை எளிதாக செய்ய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றனர் இந்த புதிய கண்டுபிடிப்பாக வெளிவந்து பலரையும் ஆச்சிரியத்தையும் பயத்தையும் உண்டாக்கி உள்ளது இந்த AI செயல்பாடுகள் .
இந்த தொழிநுட்பத்தை எளிதாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஒரு மனிதனை போல சிந்தித்து அவர்கள் செய்யும் வேலையை எளிதாக செய்யும், அதாவது வழக்கமான மனிதனுக்கு பதிலாக தானியங்கிப்படுத்துதி வேலையே முடிப்புதல் .
சாட் ஜிபிடி-க்கு போட்டியாயாக களமிறங்கியகூகுள் பார்ட் :
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், AIஉருவாக்கத்தில் ChatGPT வெளிவந்தது . அனைவரும் எதிர்பார்த்ததைப் போல இது டிஜிட்டல் உலகத்தில் பெறும் புரட்சியை ஏற்படுத்தியது. இது பல ஆண்டுகளாக இணையத்தளத்தில் ராஜாவாக வலம்வந்த கூகுளை ஓவர் டேக் செய்து அனைவரையும் வியப்பில் ஆற்றியது.
இந்தப் போட்டிக்கு தயாரான கூகிள் நிறுவனம் தற்போது Google BARD AI என்ற தொழிநுட்பத்தை வெளியீட்டு தான் ராஜாதி ராஜா என நிரூபித்து உள்ளது. இந்தியா உட்பட 180 நாடுகளில் பயன்பாட்டுக்கு தற்போது வந்துதுள்ளது .
கூகுள் பார்ட் என்பது சாட் GPT போன்று கூகுள் உருவாக்கிய உரையாடல் AI ஆகும். இந்த தொழிநுட்பத்தின் மூலம் உமன்மையான மற்றும் துல்லியமான பதில்களை கூகுளால் இணையத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கூகுளால் உருவாக்கப்பட்டு வரும் சாட்பாட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்:
AI பயணத்தில் அடுத்தகட்ட நகர்வாக Bard இருக்கும் என தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை, “நம்மிடம் உள்ள பலதரப்பட் மொழி மாதிரிகளின் சக்தி, புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றலுடன் உலக அறிவின் அகலத்தை இணைக்க முயல்கிறது இந்தBard ” என்று குறிப்பிட்டுள்ளார்.
LaMDA எனப்படும் உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி (Language Model for Dialogue Applications) என்பவற்றின் மூலம் Bard இயங்கவுள்ளது.
இணையத்திலிருந்து உயர் தர, புதுமையான பதில்கள், தகவல்களை உடனடியாக பதில் அளிக்கும் இந்த Bard அமையும் என சொல்லப்படுகிறது. அதேபோல் சிக்கல் நிறைந்த தலைப்புகளை எளிமைப்படுத்தியும் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பார்ட் இன்னும் பீட்டா நிலையில் உள்ளதுஎன்பதால் , இதனால் பிற AI – CHATBOT போலவே, தவறுகள் செய்யும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.