தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. பல வேலைகள் சுலபமாக செய்ய வசதி ஏற்பட்டாலும் அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் அதனை வசதியாக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். ஆன்லைனில் மோசடிகள் அதிகம் அரங்கேறி வருகின்றன, மொபைல் நம்பர்களை ஹேக் செய்து பணத்தை பறிக்கும் வேலைகளை எளிதாக செய்கிறது திருட்டு கும்பல்அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. சமீபகாலமாக ஓடீபி (OTP) கேட்டு அழைத்து ஏமாற்றும் திருட்டு கும்பல், தற்போது வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம் தொடர்புக் கொண்டு பணம் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. +254,+63 +84,+62,,+212,+917 ஆகிய சர்வதேச எண்களில் இருந்து வாட்சப் கால் வந்தால் எடுக்கக்கூடாது என்றும், அந்த எண்கள் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் சைபர் க்ரைம் எச்சரித்துள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம், லிங்கிடு இன் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் இருந்து நமது தகவல்களை பெற்று நம்மை மோசடியில் சிக்க வைக்க
முயற்சிகள் நடப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து.
தொடர் அழைப்புகள்:
இந்த மோசடி கும்பல் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ந்து கால்கள் செய்கின்றனர் அதனை எடுத்து பேசும் நபர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி பணம் பறிக்கும் மோசடியில் இறங்குகிரார்களாம்.
வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டோ, குழுவாக செயல்பட்டு பெண்களை பேச வைத்து ஏமாற்றுவார்களாம். வெளிநாட்டில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ந்து மிஸ்ட்டு கால் கொடுக்கின்றனர். தொடரந்து மிஸ்ட்டு கால் வருவதால் யார் என்று அறிய நாம் அந்த நம்பருக்கு அழைத்தால் நம் நும்பரை ஹேக் செய்து விடுகின்றனர். இதனால் +63 +84,+62, +254 போன்ற எண்களில் இருந்து வரும் கால்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே சிறந்தது.
ஆபத்தாகும் வீடியோ கால்:
பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பெண்களின் போட்டோக்களை டிபியாக வைத்துக்கொண்டு , வீடியோ கால் அழைப்புகள் வருகின்றது. இது போன்ற அழைப்புகளை எடுத்துப் பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன. எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக இருக்கிறார்கள்.. சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இது போன்ற அழைப்புகள் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது அதாவது, எதிரே வீடியோ கால்கள் பேசும் நபர்கள் ஆடையின்றி தோன்றி அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து உங்களை பணம் கேட்டு மிரட்டுவார்கள் . இது போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் தேவை இல்லாத அழைப்புகளை யாரும் எடுக்காமல் இருப்பதே இதில் இருந்து தப்பிக்க வழியாகும் .
பிளாக் செய்வது அவசியம் :
நாம் அறியப்படாத நம்பர்களில் இருந்து தொடர்ந்து கால்கள் வருகிறது என்றால் அந்த நம்பரை பிளாக் செய்து விட வேண்டும் . அவர்களிடம் வரும் மெசேஜ்க்கு பதில் கூறாமல் இருக்க வேண்டும். தேவை இல்லாத ஆப் மற்றும் நமக்கும் அனுப்பும் லிங்கை கிளிக் செய்யக் கூடாது. அப்படி உங்களுக்கு வரும் லிங்கை மீறி நீங்கள் கிளிக் செய்தால் உங்கள் மொபைல் மற்றும் அதில் இருக்கும் வங்கி கணக்கு மற்றும் அதிலுள்ள ஆப்கள் அனைத்தும் ஹேக் செய்து பணம் பறிக்க நேரிடும் என்பதை நாம் அறிய வேண்டும் . மேலும் சைபர் க்ரைம் போலீசாரிடமும் புகார் கொடுக்க வேண்டும் தங்களையும், தங்கள் பணத்தையும் பாதுக்காத்து கொள்ள வேண்டும்.