இந்தியா

விண்ணில் பாய்ந்தது சந்திராயன்-3- பிரதமர் மோடி வாழ்த்து

Published

on

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது.

அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது.

அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன.

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம் 3 – எம்4 ராக்கெட், இன்று பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது .

ஏவுகணையில் இருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சந்திரனை நோக்கிய பயணத்தைத் தொடங்க, செயற்கைக்கோள் இப்போது விரும்பிய சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது.

3 அடுக்குகள் திட்டமிட்டபடி பிரிந்தன.

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. அனைத்து முதற்கட்ட படிநிலைகளையும் வெற்றிகரமாக கடந்து விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் கடந்து ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என தகவல்.சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.

பிரதமர் மோடி வாழ்த்து :

“இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்; சந்திரயான்-3 என்பது நமது 3வது சந்திரப் பயணம்;

சந்திரயான்-3 நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்” – பிரதமர் நரேந்திரமோடி ட்வீட்

Click to comment

Trending

Exit mobile version