செய்திகள்

மத்திய பட்ஜெட் – 2024 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்!

Published

on

2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது;

கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது

11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது

78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது

2027 ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்

4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன

அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்

ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது;

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது;

கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது

நரேந்திர மோடி பிரதமரான பிறகு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது;

வளர்ச்சிப் பாதையில் நாடு வெற்றி நடை போடுவதால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள்;

நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது;

ரேஷன் கடைகள் மூலம் 80கோடி மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுள்ளது;

நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்!

கடந்த 10 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்கப்பட்டுள்ளனர்

– நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Click to comment

Trending

Exit mobile version