விரைவில் வெள்ளித்திரையில் வரவிருக்கும் ரெட் அண்ட் பாலோ திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் திரு.வணக்கம் தமிழா சாதிக் அவர்கள் நமது E-BEHIND இதழுக்காக கொடுத்த பிரத்தியேகப் பேட்டி!
- ரெட் அண்ட் பாலோ படத்தை பற்றி?
இது ஒரு டார்க் ,பேண்டசி காமெடி திரில்லர் மூவி. பிக் பாஸ் பிரபலங்கள் 5 பேர் இதில் நடித்துள்ளனர். ஜாலியான படமாக எடுத்துள்ளேன். நான் ஒரு வெங்கட் பிரபு ரசிகன் அவருடைய படம் எப்படி இருக்குமோ அதே போல் எடுத்துள்ளேன். கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படி இருக்கும் இந்த ரெட் அண்ட் பாலோ.
- பிக் பாஸ் பிரபலங்கள் அதிகம் பேர் படத்தில் இருக்கிறார்கள் அதற்கானகாரணம் ?
இது திட்டம் போட்டு இதை நாங்கள் செய்யவில்லை.ஒரு நாயகி படத்துக்கு தேவைப்பட்டது, அதனால் யாஷிகா ஆனந்தை தேர்தெடுத்தோம். கதை முக்கியத்துவத்துக்கு அனிதா சம்பத்தை தேர்ந்தெடுத்தோம். காமெடிக்கு ஜி.பி முத்து தேவைப்பட்டார், அதேபோல பயில்வான் ரங்கநாதன் காமெடிக்கு தேவைபட்டது. பெண் காமெடி செய்ய ஜாங்கிரி மதுமிதாவை பயன்படுத்தி உள்ளோம், இது எல்லாம் எதார்த்தமாக நடந்த ஒன்று. ஆனால் இதுவே எங்கள் படத்துக்கு ஒரு ப்ளஸ்ஸாக அமைந்துவிட்டது. பலரும் இது என்ன படமா இல்ல பிக் பாஸ் வீடா என கேட்கும் அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளது மகிழ்ச்சியே.
- கருணாகரன், பாலா சரவணனின் பங்களிப்பு இந்த படத்துக்கு எப்படி பட்டது?
கருணாகரன், பாலா சரவணனின் பங்களிப்பு மிக பெரியது கருணாகரன் முக பாவனையை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். சிறந்த நடிகர் அவருடன் பணியாற்றுவது மிக எளிது. அதேபோல பாலா சரவணன் காமெடி டைமிங் வேற லெவல் இருக்கும் காட்சி படமாக்கும் பொழுது ஓவ்வொரு சீன்லயும் சிரிச்சிட்டே இருப்போம் , இனிமையான மனிதர்.
- இன்று ட்ரெண்டிங்கில் இருக்கும் பலரை படத்தில் பயன்படுத்தி இருக்கிறீர்கள், படத் தேவைக்கா? பட ப்ரமோஷனுக்கா?
இரண்டுக்குமே தான்! இன்னைக்கு இருக்கும் காலகட்டம் டிரேடிங்கை நோக்கி பயணிக்கிறது. டிரேடிங்கை பயன்படுத்தினால் நாமும் ட்ரெண்டிங்கில் இருக்கலாம். எனது படத்தில் நடுவர்கள் அனைவரும் மக்களிடம் ஈசியாக அறியக் கூடியவர்கள் ஆகையால் பயன் படுத்தியுள்ளோம். இருந்தாலும் படத்துக்கு தேவையான ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்கள் தான் நடித்துள்ளார்களே தவிர, தேவையில்லமல் யாரையும் நடிக்க வைக்கவில்லை.
- ராபர்ட் மாஸ்டர் இந்த படத்தின் வில்லன் என்று கேள்வி பட்டோம் உண்மையா ?
ஆமா உண்மை தான் சிறந்த வில்லனாக இதில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம் ராபர்ட் மாஸ்டர் ஏன் என்றால் நடித்தது மட்டும் இன்று இரண்டு பாடலுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றினார். மிகப்பெரிய நடன இயக்குனர் என்பது நாம் அறிந்ததே, ஆனால் புதுமுக இயக்குனருடன் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பழகக் கூடிய நடிகர். நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பரிசாக எண்ணுகிறேன்.
- பயில்வான் ரங்கநாதன், ஜி.பி முத்து புது காம்பினேஷன் எப்படி உருவானது ?
இவருடைய காம்பினேஷன் சிறப்பாக இருக்கும் என ஐடியாவை தந்தது இந்த படத்தின் மற்றோரு தயாரிப்பாளர் மகேஷ் அவர்கள். ஒரு முனிவர் கதாபாத்திரம் தேவைப்பட்டது அப்போது இதனை விவாதிக்கும் பொழுது மகேஷ் அவர்கள் தான் பயில்வான் ரங்கநாதன் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என ஐடியா தந்தார். பயில்வான் ரங்கநாதன், ஜி.பி முத்து வரும் காட்சி சிறப்பாக வந்துள்ளது புதுசாக இருக்கும்.
- இசையமைப்பாளராக இருக்கும் பலர் கதாநாயகனாக வலம் வரும் வேலையில் நீங்கள் இயக்குனராக வேறு பாதையில் பயணிக்க என்ன காரணம்?
பலரும் கதாநாயகனாக களமிறங்கிவிட்டனர் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொன்று பிடிக்கும் அதை வெளிப்படுத்துகின்றனர். எனக்கு இசை மற்றும் படம் இயக்குவது ரொம்பப் பிடிக்கும், அதனால் இரண்டையும் செய்கின்றேன். இசையில் அனிருத் யுவன் இடத்துக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நான் இயக்கும் படமும் நல்ல வரவேற்பை பெற வேண்டும். நடிகராக வர வாய்ப்பு வந்தால் அதையும் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
- படத்திற்க்காக உழைத்தவர்களைப் பற்றி?
இந்த படத்தில் அனைவருமே கடினமாக உழைத்தார்கள். நடிகர்கள் முதல் டெக்நிஷியன்ஸ் என பலரின் உழைப்பால் இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக என்னுடைய மனைவி தனது சிறந்த உழைப்பைத் தந்துள்ளார். பட ஷூட்டிங்கில் சிறிது நேரம் கூட உட்காராமல் வேலை பார்த்தவர். யார் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து என்னுடைய வேலையை முக்கால் வாசி செய்து முடித்துவிடுவார். அதே போல இந்தப் படத்தின் ரைட்டர்
பாபு தமிழ் அவர்கள், கதையில் சிறிது மாற்றம் வேண்டும் என கேட்டாலும் அப்போதே எழுதி கொடுத்து விடுவார், அவருடைய பங்களிப்பு இந்தப் படத்திற்க்கு மிக முக்கியமானது. கேமரா மேன் யுவன் செல்வாவின் உழைப்பு சொல்ல முடியாத அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர், படம் வெளியானவுடன் உங்களுக்குத் தெரியவரும்.
- படத்தில் நடித்த பிரபலங்கள் பற்றி ?
ஏற்கனவே கூறியதைப் போல கருணாகரன், பாலா சரவணன், அனைவரும் அறிந்த முகம் யாஷிகா ஆனந்த, பிக் பாஸ் பிரபலம் அழகான எளிமையாக பழகக்கூடிய அனிதா சம்பத் மற்றோரு பிக் பாஸ் பிரபலம் ஜி.பி முத்து அவர்கள், சிறந்த நடிகராக வருவார் செய்யும் செயலில் முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவர். ராபர்ட் மாஸ்டர் படத்தின் முக்கிய பங்காற்றியவர். அஜய் வாண்டையார், அபூர்வ ராய், ஜாங்கிரி மதுமிதா, பிஜிலி ரமேஷ் என அனைவரும் இதில் நடித்திருப்பது படத்துக்கும் மட்டுமல்ல எனக்கும் சிறப்பான ஒன்று தான்.