Uncategorized

புதிய சிந்தனைகளுடன் களம் இறங்கிய சுயேட்சை வேட்பாளர்!

Published

on

சுதந்திர இந்தியாவில் சாதாரண குடிமகன் கூட அரசியலில் களம் கண்டு வெற்றிப் பெறலாம் என்பது நம் முன்னோர்கள் நமக்கு தந்த வரலாற்றுப் பாடமாக இன்றும் இருக்கிறது. இதற்கு முன் பல அரசியல் ஆர்வலர்கள் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுத் தலைவர்கள் ஆன வரலாறு நாம் அறிந்ததே.

இவர்கள் வரிசையில் தனது தனித்துவமான சிந்தனைகள் மூலம் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியினை செய்திட நடக்கவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் சுயேட்சையாக களம் கானுகிறார் independent திரைப்பட இயக்குனர் திரு. அருண் காந்த் அவர்கள்.

யார் இந்த அருண் காந்த்?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த அருண் காந்த் , பள்ளி படிப்பினை முடித்து விட்டு சுய சிந்தனையுடன் சுயதொழில் மூலம் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடும் , சினிமா மீது உள்ள அதீத ஆசையால், தனது வித்தியாசமான படைப்பாற்றலை மக்களுக்கு வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் ஆபரேஷன் ஜுஜுபி , ரிவிட் போன்ற சமூக அக்கரை படங்களை தனது கனவு படைப்புகளாக வெளிக்கொண்டு வந்தவர் .

தனது இளம் வயதில் இணையதள உதவியுடன் சினிமா, இயக்கம், எடிட்டிங், பாடல் ரெக்கார்டிங், இசை என அனைத்தையும் சுயமாக கற்று, தனது சிந்தனையில் ஒளிந்திருந்த எண்ணங்களை சினிமா மூலம் தட்டி எழுப்பி கோகோ மாகோ, இந்த நிலை மாறும்,ஆபரேஷன் ஜுஜுபி , ரிவிட் ஆகியவற்றை படங்களாக வெளியிட்டார். நல்லது சொன்னால் 40 பேர்கூட திரும்பி பார்க்க மாட்டார்கள் என்ற வார்த்தை கிட்டத்தட்ட இவருக்கும் சொந்தமானவை .அதைப் பற்றயெல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கென தனி பானியில் தனது லட்சியப் பயணத்தை அரசியல் மூலம் வெளிப்படுத்த கோவை தொகுதியில் independent candidate ஆக களம் இறங்கியுள்ளார், independent film maker அருண் காந்த்.

இவர் தற்போது வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை பார்த்து பலரும் பாராட்டியுளனர் . இதில் பல தொலைநோக்கு சிந்தனைகளும், மக்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ புதிய வழி முறைகளை கூறியுள்ளார். இவர் சிந்தனையில் தோன்றிய அனைத்தும் (தேர்தல் அறிக்கை) நிஜமானால்???

இதற்கான பதிலை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்!

உங்கள் பார்வைக்காக தேர்தல் அறிக்கை லிங்க் கிழே வழங்கப்பட்டுள்ளது .

https://arunkanth.in/politics 

 

Click to comment

Trending

Exit mobile version