Sports

ரோஹித்! ரோஹித்! விண்ணை பிளந்த சத்தம்!

Published

on

ஐபில் துவங்கியதில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்டேடியத்திலும் எதிரொலிக்கும் சப்தம். இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபில் தொடர் 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக துவங்கியது. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் ஏராளம். இந்திய நகரமான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஹைட்ராபாத் ஆகிய நகரங்களை அணிகளாக பிரித்து வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்களை ஏலம் எடுத்து ஒரு அணியாக விளையாடுவர். சுமார் 16 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்கியது நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஹார்டிக் :

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி. ஏற்கனவே கோப்பையை வென்ற பொது அணியில் ஆடிய ஹார்டிக் பாண்டியா கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் அணியில் இணைந்து கேப்டனாக அணியை வழிநடத்தி 2022 ஆம் ஆண்டு நடத்த ஐபில் தொடர் குஜராத் வெற்றிப் பெற வழிவகுத்தார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய இவரது தலைமையிலான குஜராத் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் தோல்வியை தழுவியது.

2024 ஆம் ஆண்டு தொடரின் அறிவிக்க விருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. இதனை ஒப்புக்கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நிருவாகம் சுமார் 15 கோடி கொடுத்து வாங்கியது. அதுமட்டும் இன்றி ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது.

இதனை சற்றும் எதிர்பாராத ரோஹித் ஷர்மாவின் ரசிகர்கள் இணையத்தளத்தில் வெகு கொண்டு எழுந்தனர். மீண்டும் ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கேப்டன் ஆக வேண்டும் என கூக்குரலிட்டனர் .

கூச்சலிட்ட ரசிகர்கள்

ஐபில் துவங்கினால் சரியாகிவிடும் என பலரும் நினைத்திருந்த வேளையில்,
மும்பை இந்தியன்ஸ் ஹார்டிக் பாண்டியா தலைமையில் மார்ச் 24ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் ஸ்டேடியத்தில் தனது முதல் ஆடியது. இதில் ஹர்டிக் பாண்டியாவுக்கு எதிராகவும், ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாகவும் அரங்கில் உள்ள மொத்த ரசிகர்களும் கோஷங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவை பௌண்டரி அருகே நிற்குமாறு கேப்டன் ஹார்டிக் பாண்டியா செய்கைக்காட்டும் வீடியோ இணையத் தளத்தில் வைரலாக ரசிகர்களின் கோவம்

அதிகரிக்க துவங்கியது. இரண்டாவதுப் போட்டியிலும் ரசிகர்கள் ஹார்டிக் பாண்டியாவிக்கு எதிராக குரல் கொடுத்தனர். சொந்த ஊரில் நடைபெறும் 3ஆவதுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கும் ரசிகர்கள் எந்த மாதிரியான ஆதரவை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முதல் இரண்டு போட்டிகளில் ரசிகர்கள் எழுப்பி குரலோடு ஹார்டிக் பாண்டியாவிற்கு அதிக எதிர்ப்பு குரல் மும்பை மைதானத்தில் இருந்து வெளி வந்தது. போட்டி துவங்குவதுக்கு முன்பு டாஸ் போடும் போது மைதானத்தில் உள்ள கிட்ட்டத்தட்ட 80% பேர் ஹார்டிக் பாண்டியாவிற்கு எதிராக கூச்சலிட்டனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இந்திய அணி வீரருக்கு எதிராக இந்தியா முழுவதிலும் எதிர்ப்பு வெளிவந்தது இதுவே முதல் முறை. ஏன் ரசிகர்ககள் இந்த அளவுக்கு கோவத்தை வெளிப்படுத்தினர் ஹார்டிக் பாண்டிய அப்படி என்ன செய்தார் ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஹார்டிக் பாண்டியவா? இல்லை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தான் இதனை செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் பதவியில் அங்கம் வகித்த ஹார்டிக் பாண்டியவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அழைத்து வந்தது தவறில்லை.

ஆனால் சிறப்பாக செயல்பட்டு 5 முறை கோப்பையை வென்று கொடுத்தது இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் ஷர்மாவை காரணமின்றி நீங்கியது தான் சர்ச்சையானது. இதெல்லாம் அணியின் உரிமையாளர் மற்றும் நிர்வாகக் குழு முடிவு செய்வது என்றலும் மறைமுகமாக இல்லாமல் ஒற்றுமையுடன் பேசி அறிவித்திருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது.

எதிர்பார்ப்பு

இதற்கு முன்பு கூட சச்சின் டெண்டுல்கர் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியுள்ளார். ஏன் கங்குலி,சேவாக், யுவராஜ் போன்ற முன்னணி வீரர்கள் இளம் வீரர்கள் தலைமையில் விளையாடி உள்ளனர். தற்போது கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி ருத்திராஜ் தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என பல முன்னணி வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்களின் கருத்துக்களை அன்றாடம் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை அணுகி சம்மதிக்க வைத்த முறை தான் முக்கியம். மும்பை இந்தியன்ஸ் அணியும் இதனை செய்திருந்தால் இந்த எதிர் குரல் வெளிவந்திருக்காது. 5முறை
சாம்பியன் அசைக்க முடியாத அணி என்ற பெருமை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இன்று இந்த சிறு பிரச்சனையில் தோல்வியைத் தழுவிவருவதாக ஆதங்கப் படுகின்றனர் ரசிகர்கள். அடுத்த ஆண்டு வீரர்கள் கலைக்கப்பட்டு புதிய வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

– சதிஷ் குமார்

 

 

Click to comment

Trending

Exit mobile version