இன்று மாலை 4 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இன்று ஆலோசனை. அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தனித்து 240 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது.எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும். எனவே பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தான் பாஜக கூட்டணி உடன் பயணிப்பதில் உறுதியாக உள்ளேன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.