கடந்த 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியது இதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 291 இடங்களும்.இண்டியா கூட்டணிக்கு 232 இடங்களும் கிடைத்தனர். இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைகிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த நிலையில் இன்று ஜனாதிபதி இல்லம் சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர், தற்போதைய 17வது லோக்சபாவை கலைக்கவும் பரிந்துரை செய்தார்.
8ஆம் தேதி பதவியேற்பு ?
வரும் 8 ம் தேதி( சனிக்கிழமை) அன்று மாலை 3வது முறையாக பிரதமர் ஆக நரேந்திர மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளது. பா.ஜ., தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.