பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் – தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
OPERATION SINDOOR எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் துல்லியமான தாக்குதலின் மூலம் பயங்கரவாத அமைப்புகளின் உட்கட்டமைப்பை சிதைத்திருக்கும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை மிகுந்த பாராட்டுதலுக்குரியது.
இந்த நேரத்தில், பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க உறுதி கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தேசத்தின் மக்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.
ஜெய்ஹிந்த் என xக்ஸ் தளத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்