டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில்இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் ஷர்மா அறிவித்துள்ளார் . ஒருநாள்போட்டியில்தொடர்ந்துவிளையாடுவேன்எனவும்அறிவிப்பு. இந்தியாடெஸ்ட்அணியின்கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில் ரோகித் ஷர்மா ஓய்வு அறிவிப்பு .
அறிக்கையில் அவர் தெரிவித்தது
” அனைவருக்கும் வணக்கம். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர விரும்புகிறேன். வெள்ளை உடையில் என் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது ஒரு பெரும் பெருமை. கடந்த ஆண்டுகளில் நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன்,” என்று ரோகித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.