“பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்; பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கு பொது சிவில் சட்டம் ஊறுவிளைவிக்கும்; அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது சட்ட நெறிகளுக்கு முரணாக அமையும்; தனிமனித சுதந்திரம் மீதான ஆக்கிரமிப்புக்கு கவலைக்குரிய முன்னுதாரணத்தை பொது சிவில் சட்டம் உருவாக்கிவிடும்; பொது சிவில் சட்டம் பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளை உருவாக்கும் ஆற்றலை கொண்டுள்ளது; நமது நாட்டின் பலம் அதன் பன்முகத்தன்மையில்தான் உள்ளது” – இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்