கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமை இன்று (ஜூலை 24) தொடங்கி வைத்தார் முதல்வர் .
தோப்பூர் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோர் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதிகாரிகள் இன்று முதல் விண்ணப்பங்களை சேகரித்து அரசு தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.
தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. வெற்றிபெற்ற பிறகு இதனை அமல்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும், ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் கொண்ட டோக்கன்களை வழங்கினர்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் இதுகுறித்து கேள்வி எழும்போதெல்லாம் ‘விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார் . கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை வெளிவந்து தற்போது அதனை செய்யப்படுத்த துவங்கியுள்ளது .