அரசியல்

அன்றே கணித்தார் மோடி வைரலாகும் வீடியோ !

Published

on

மணிப்பூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரலியெழுப்பி வருகின்றனர் .இதன் தொடர்ச்சியாக மத்திய பாரதிய ஜனதா அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் 2019நம்பிக்கையில்லா தீர்மானதின் பொது மோடி பேசிய வீடியோ தற்போது “அன்றே கணித்தார் மோடி ” என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது .

மத்திய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான இரண்டு நோட்டீஸ்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நாளில், 2019 இல் பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது தற்போது வைரலாகி வருகிறது, அன்றே கணித்தார் மோடி என பலரும் அந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

“எனது வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்… 2023ல் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் தயாராகுங்கள்” என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறியதும் , ஆளும் கட்சி எம்.பி.க்களின் மேசையை தட்டி வரவேற்கின்றனர்.

இரண்டு (எம்.பி.க்கள்) இருந்து நாம் இங்கே (ஆட்சியில்) அமர்ந்துள்ளோம். ஆனால் நீங்கள் 400ல் இருந்து 40க்கு வந்துவிட்டீர்கள். இன்று எங்கே இருக்கிறீர்கள் பாருங்கள்…’’ எனவும் பேசியுள்ளார்.2018 ஆம் ஆண்டில், என் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசாங்கம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

Click to comment

Trending

Exit mobile version