Entertainment

தெறிக்க விடும் ஜெயிலர் ட்ரைலர் !

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சோ திலிப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக காவாலையா பாடல் மட்டும் ஹுக்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியது. அதிலும் ஹாக்கும் பாடல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் தலைவர் அலப்பறை என்ற ஹாஷ் டேக் போட்டு கொண்டாடும் அளவுக்கு பிரபலமாகி வருகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பல திரையரங்கில் வெளிவரத் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது USA இதுவரை $180K வரை அட்வான்ஸ் புக்கிங்கில் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெயிலர் படத்தின் ட்ரைலர் வெளியீடு இன்று 6மணிக்கு வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. ரஜினிகாந்தின் மாஸ் ஆனா லுக்கில் பலரை பந்தாடும் அதிகாரியாக ஸ்டைலாக வலம் வருகிறார். இதன் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தலைவரின் அலப்பறை ஸ்டார்ட் என ரசிகர்களை பேசவைத்துள்ளது.

 

 

Click to comment

Trending

Exit mobile version