கோவையின் மிகப்பெரிய கோயம்புத்துார் மராத்தான்
போட்டிக்கான முன்பதிவு துவக்கம்
இந்நிகழ்வின் 11-வது பதிப்பு டிசம்பர் 17, 2023 அன்று நடக்க இருக்கிறது
உலகம் முழுவதிலும் இருந்து 18,000 க்கும் அதிகமான ஓட்ட பந்தய வீரர்கள்
கோயம்புத்தூர் மாரத்தானில்
கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பவர்ட் பை எல்ஜி எக்விப்மெண்ட்ஸ் தொடங்குவதை அறிவித்தது .
இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த மாரத்தானின் 11 வது பதிப்பு, முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது., நாடு முழுவதிலிருந்தும் 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு மற்றும் அடிக்கருத்து “LET’S KO KOVAI” என்பதாகும். 2023 ஆம் ஆண்டு பதிப்புக்கான பதிவுகளை கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். காவல்துறை ஆணையர் திரு.வி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் 21.1 கி.மீ.க்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ் 10 கி.மீ ஓட்டத்திற்கும் பதிவு செய்தனர். கார்ப்பரேஷன் கமிஷனர் திரு.எம். பிரதாப், ஐ.ஏ.எஸ் வேலை காரணத்தால் துவக்ககத்திற்கு வர முடியவில்லை என்றாலும் 21.1 கி.மீ ஓட்டத்திற்கு பதிவு செய்ததாக செய்தி தெரிவித்துள்ளார்.
பங்கேற்பாளர்கள் இப்போது www.coimbatoremarathon.com மூலம் பதிவு செய்யலாம்.
ஓட்டப்பந்தய நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாக இது இருக்க வேண்டும் என்பதற்காக CCF ஆனது, கோயம்புத்தூர் ரன்னர்ஸ் உடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே, இந்த நிகழ்வு புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு விழிப்புணர்வைப் பரப்ப மற்றும் ஆதரவளிக்க உதவி உள்ளது. இந்த நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதியானது, நோயிலிருந்து மீண்ட நூற்றுக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்தும் வகையிலான CCF இன் செயல்பாடுகளுக்கு பங்களித்துள்ளது.
இந்த நிகழ்வில் ஒரு அரை மாரத்தான் [21.1 கி.மீ], ஒரு 10 கி.மீ ஓட்டம் மற்றும் ஒரு 5 கி.மீ ஓட்டம்/நடை ஆகியவை அடங்கியுள்ளன. பதிவுக் கட்டணம் அரை மராத்தானுக்கு ரூ. 1,200, 10 கி.மீ ஓட்டத்திற்கு ரூ.1,000, 5 கி.மீ ஓட்டம்/நடைக்கு ரூ. 600 ஆகும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனி பிரிவுகளில், பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 2.7 லட்சத்துக்கான பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. அரை மாரத்தான் ஓட்டத்துக்கான திறந்த பிரிவில், பரிசுத் தொகையானது முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு முறையே ரூ. 25,000 ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 ஆகும், அதேபோல 10 கி.மீ திறந்த பிரிவில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் வருபவர்களுக்கான பரிசுத் தொகையானது முறையே ரூ. 15,000 ரூ. 10,000 மற்றும் ரூ. 5,000 ஆகும்.
45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வெடரன்களுக்கு, அரை மாரத்தான் ஓட்டத்திற்கு முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு பரிசுத் தொகை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகும். 10 கி.மீ ஓட்டத்திற்கு 7,500 மற்றும் 5,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.
வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திரு. வி. நௌஷாத், தனது உற்சாகத்தைத் தெரிவித்து கூறுகையில் “கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னுக்கு ஆதரவளிக்க கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னுடன் கைகோர்த்து 11 வது பதிப்பு கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த கூட்டிணைவு நிரூபிக்கிறது. உடல் திடம் மற்றும் நல்வாழ்வுக்கான நடைப்பயிற்சிக்கு ஆதரவாளரான வாக்கரூ, எங்கள் பிராண்டின் நோக்கப்பார்வையான (Point of View – POV) – “Walk With Walkaroo,” -க்கு இணங்க, இந்த நிகழ்வில் கூட்டு சேருவதில் பெருமிதம் கொள்கிறது.
பல ஆண்டுகளாக, நேசத்துக்குரிய நினைவுகளை உருவாக்கி பங்காளர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவைப் பெற்று, கோயம்புத்தூர் மாரத்தான் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக வளர்ந்துள்ளது. நாங்கள் 11 வது பதிப்பைத் தொடங்கும்போது, எங்கள் பணியானது பந்தயத்திற்கு அப்பாற்பட்டு புற்றுநோய்க்கு எதிரான போராக முன்னேறுகிறது. புற்றுநோயைத் தடுப்பது, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்வு முயல்கிறது. எங்கள் தேசிய பிரச்சாரத்தின் கருப்பொருளான “#WalkindiaWalk” ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்கான வாக்கரூவின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. வாக்கரூவானது, உடற் திடம் மற்றும் நல்வாழ்வுக்காக நடைபயிற்சி செய்வதை உறுதியாக நம்புகிறது, மேலும் இந்த மாரத்தான் மூலம், புற்றுநோய்க்கு எதிரான போருக்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குகிறோம்” என்று கூறினார்.
கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னின் மேனேஜிங் ட்ரஸ்டி டாக்டர் டி.பாலாஜி கூறுகையில் “கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி ஒரு முக்கிய நிகழ்வாகவும் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னின் பிராண்டு தூதராகவும் மாறியுள்ளது. கோவிட் நெருக்கடிகள் இருந்த சமயத்திலும், நாங்கள் 2 மெய்நிகர் மராத்தான்களை நடத்தி, இடைவெளி இன்றி அதன் 11 வது பதிப்பில் நுழைந்துள்ளோம், இது கோயம்புத்தூர் நகருக்கு பெருமை சேர்த்துள்ளது. நகரின் குடிமக்கள் மற்றும் நகரத்திற்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாரத்தான் ரன்னர்களும் கூட இந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எங்கள் பங்காளர்களில் பெரும்பாலோர் ஆரம்பத்தில் இருந்தே
எங்களுடன் இருந்துள்ளனர், மேலும் CCF செயல்படுவதற்கும், வலிமைக்கு மேல் வலிமை சேர்த்து வளர்வதற்கும் அவர்கள் அளிக்கும் தொடர்ச்சியான ஆதரவிற்காக