U19 உலக கோப்பை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மிகப்பெரிய தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் துவங்கியது, சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தென்னாப்பிரிக்காவின் பெனோனி மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4வது முறையாக U-19 WC கோப்பையை கைப்பற்றியது.!. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நினைக்கப்பட்ட 50 ஓவர்களில் 253/7 எடுத்து. அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்களும், ஆலிவர் பீக் 46 ரன்களும் எடுத்தனர். இந்தியா பந்து வீச்சை பொறுத்தவரையில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் 254 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியஇந்திய அணி தடுமாற்றமான ஆட்டத்தினால் 174 ரன்களுக்கு ஆட்டம் இழந்துதோல்வியை தழுவியது. இந்திய தரப்பில் ஆதர்ஷ் சிங் – 47, முருகன் அபிஷேக் 46 எடுத்தார்.
ஆஸ்திரேலியா - 50 ஓவர்களில் 253/7
ஹாரி டிக்சன் - 42
ஹக் வெய்ப்ஜென் 48
ஹர்ஜாஸ் சிங் - 55
இந்தியா பந்துவீச்சு
ராஜ் லிம்பானி - 3/38
நமன் திவாரி - 2/ 63
இந்தியா 43.5 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆதர்ஷ் சிங் - 47
முருகன் அபிஷேகம் - 42
ஆஸ்திரேலியா பந்துவீச்சு
ராஃப் மேக்மில்லன் - 3/43
மஹ்லி பியர்ட்மேன் - 3/15