நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரும் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தேசிய நலனுக்காகவே திமுக தலைமையிலான கூட்டணியில் தனது கட்சி இணைந்ததுளேன் , பதவியை கருத்தில் கொள்ளவில்லை” என்றார்.
ம.நீ.மவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கியது திமுக. மக்களவை தேர்தலில் ம.நீ.ம போட்டியிடவில்லை எனவும், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களும் செய்துகொண்ட புரிந்துணர்வுப்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் பிரச்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் என்றார்
இதற்கிடையில், காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வாய்ப்புள்ளது என்று திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.