தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரசாந்த், அதிரடி இயக்குனர் ஹரியுடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது ஹரியுடன் இணையும் இரண்டாவது படமாகும். ஏற்கனவே தமிழ் என்ற படத்தில் இவ்விரு கூட்டணி இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இப்போது, சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் இணைகிறார்கள், இது செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்குகி உள்ளது
பிறந்தநாள் நாளில் முக்கிய அறிவிப்பு ! ‘கடைசியாக அந்தகன்’ படத்தில் நடித்த பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இயக்குனர்களிடமிருந்து பல ஸ்கிரிப்ட்களை கேட்டு ஆராய்ந்து வந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி அவரது பிறந்தநாளின் போது, இந்த வரவிருக்கும் படம் அவரது 55 வது படத்தின் புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்திருக்கிறார் பிரசாந்த் ஒரு பிரபல இயக்குனருடன் மிக பெரிய மறுபிரவேசத்தைக் காண களமிறங்கியிருக்கிறார் நடிகர் பிரசாந்த் . தயாரிப்பு அதிக எதிர்பார்ப்புகளுடன் தொடங்குகிறது இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கிறார் .இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது , மற்ற முன்னணி மற்றும் துணை வேடங்களுக்கான நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பக் குழுவினர் தேர்வு ஆகியவை நடைபெற்று வருகின்றன.
ரத்தினம்’ படத்திற்குப் பிறகு ! விஷாலை வைத்து ‘ரத்தினம்’ படத்தை இயக்கிய ஹரி, இடைவெளியில் பல்வேறு நடிகர்களுடன் கதை காண பேச்சுவார்த்தை நடத்தி வந்தார், அவர் இப்போது பிரசாந்தை கதையின் நாயகனாக இறுதி செய்துள்ளார். சூரியா, விக்ரம், சிம்பு, அருண் விஜய், விஷால் என பல ஹீரோக்களை வைத்து மாஸ் படம் கொடுத்த ஹரி டாப் ஸ்டார் பிரசாந்தை வைத்து புதிய கதை கலத்துடன் காலத்தில் இறங்கியுள்ளார்.