வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கே கே ஆர் எதிரான ஆட்டத்தில் படுதோல்வி அடைந்து தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 103/9 ரன்கள் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது,
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களில் இந்த இலக்கை துரத்திப் பிடித்தது. ஐபிஎல் 2025ல் ஆறு போட்டிகளில் சிஎஸ்கேவின் ஐந்தாவது தோல்வி இதுவாகும், மேலும் அந்த அணி 10 அணிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சொந்த மண்ணில் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை.